18

siruppiddy

வியாழன், 19 டிசம்பர், 2013

ஸ்ரீ ஞானவைரவர் ஆலயப் பணிக்கு அள்ளிவழங்குவோம்


 சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய நிர்வாகத்தினருடன் 8.12.2013
சிறுப்பிட்டி இணைய நிர்வாகியன விமல் குமாரசாமி( சுவிசில் )இருந்து மற்றும் குவேந்திரன் வேலுப்பிள்ளை (யேர்மனியிலிருந்தும்) சென்றிருந்தபோது ஸ்ரீ ஞானவைரவர் ஆலய நிர்வாகத்தினருடன் நட்பு மூலமான சந்திப்பு (8.12.2013 ) ஞாயிறு மாலை 7.30து மணிக்கு நடைபெற்றது அதில்
 ஊர்மக்களுடன் இணைந்து கலந்துகொள்ள சென்றவர்கள் ஆகிய விமல் அவர்களும் புலேந்திரன் அவர்களும் இதில் சிறப்பாக அழைக்கப்பட்டனர் அங்கே சென்ற இவர்கள் ஆலய கட்டிடப்பணியை பார்வையிட்டபின்னர் மகிழ்வுற்றனர் ஊர் இளைஞர்கள் ஆலயப்பணிக்காய் உற்சாகமாய் தமை உருக்கி உழைத்த கதை கேட்டறிந்து ஆச்சரியத்தடன் மெய்சிலிர்த்து நின்றனர்
 
 அவர்களைப் பாராட்டிக்கொண்டனர் அதன்பின் தலைவர் ந.நிர்மலன் தலைமையில் நடைபெற்ற ஒன்று கூடலில் அவர் கூறியதாவது மேலும் தலைவர் தெரிவிக்கையில் கட்டிட வேலைப்பணிக்காய் தங்களுக்கு எதிர்பார்த்த நிதி வந்துகிடைக்காததால் மிகுதி உள்ள வேலைகளைத்திட்டமிட்டபடி முன்னெடுக்க
 முடியாமல் உள்ள நிலைகளையும் கூறிக் கவலையுற்றார் நிதியின் தேவையை ஆணித்தரமாய்
 
எடுத்துரைத்தார் அதர்க்கான ஆலோசனைச் சந்திப்பாகவும் இந்தச் சந்திப்பு எனவும் எடுத்துரைத்தார் அதற்க்கான ஆவனசெய்யவும் திரு விமலிடமும் திரு.குவேந்திரனிடமும் கேட்டுக்கொண்டார் இவர்களும் தாங்கள் தாங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள முன்னெடுப்புச் சம்மந்தமாகவும் அங்கே கருத்துக்களை முன்வைத்தனர் மற்றையோர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டது கூடியவரையில் எமது புலம்பெயர் உறவுகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் ஸ்ரீ ஞானவைரவர் வேலைப்பணிகள் நிறைவேறும் என்ற கருத்தையும் ஆலயத்தலைவர் முன்வைத்தார்
 ஆண்டவன் பணிக இனி அள்ளி வழங்குங்கள்
 அவன் பணி குறையுற்றால்
 அதில் வரும் பிணிச்சொல்
 சிவன் அவன் காவலனாய்
 சிந்தையில் வைரவர்
 அவன் படைப்பால் இவ்வுலகில் நாம்
 அவன் தருகிறான் அதில் ஆனந்தம் அடைகின்றோம்
 அவன் அள்ளித் தருகின்றான்
 இருப்பதில் கொடுத்துவாழ்
 இல்லறம் சிறக்கும்
 கொடுத்து இன்பம் காண் சன்னிதி செழிக்கும்
 ஸ்ரீ ஞானவைரவருக்காய் உங்கள் ஆதரவை நாடி நிற்கும் ஸ்ரீ ஞானவைரவர்
 ஆலய நிர்வாகம்

திருவெம்பா இறுதி நாள் நிகழ்வு நிழல்படங்கள்

 
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய திருவெம்பா இறுதி நாள் நிகழ்வுகள் 18.12.2013 சிறப்பாக நடைபெற்றுள்ளது பூசைகள் அனைத்தும் சிறப்புற நடந்து சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து பிரசாதங்கள் அன்னதானங்கள் என்று இனிதே நடந்தேறியுள்ளதை எம் ஊர் இணையம் உங்கள் பார்வைக்கு அதன் நிழல்படங்களை பதிவாக்கி உங்களையும் எம் ஊர் மண் நிகழ்வுகளுடன் இணைத்துக்கொள்கிறது
 மனதில் நினைத்து அவனின் நினைவை
 மகிழ்ந்து நின்று அவனைநாடு
 நினைத்த கருமம் வெற்றியாகும்
 நித்தம் மனது அமைதிகாணும்


 

செவ்வாய், 17 டிசம்பர், 2013

நிறைவுறும் நிலையில் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் கூரைப் பணிகள் !


சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் கட்டிட கூரைப் பணிகள் நிறைவுறும் நிலையில்ஆலய கூரைப் 
 வேலைகளின் நிழல் படங்கள் புலம் பெயர் சிறுப்பிட்டி வாழ்உறவுகளே
 ஆலைய நற்பணிக்கு உதவிய நல் உள்ளங்களே இந்த கட்டிட வேலைப்பணிக்காய் எமது ஊர் இளைஞர்களின் உடல் உழைப்பு பெரும் பகுதியாகி அவர்கள் வேர்வையோடு கலந்த உங்கள் பண உதவியும் இன்று இந்த நற்பணி தொடர்கிறது இதற்கான நிதி எமக்கு போதாமல் உள்ளது இங்கே உதவி செய்யாதிருப்போர் புலத்திலும் சரி நம் நிலத்திலும் சரி உங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு ஸ்ரீ ஞானவைரவ பக்தர்களை ஆலய நிர்வாகம் வேண்டி நிற்கிறது தெய்வத்தின் பணி செய்தால் தீராத வினையும் தீரும் அதனால் அன்பார்ந்த எம் ஊர் அடியவர்களே புலத்தில் வழம் செழிக்கவும் எம்மை வளர்தவள் ஸ்ரீ ஞானவைரவரை வேண்டி அனுப்பிய ஆலயமும் இது அதன் வளத்தில் பங்கேற்று நிலத்தில் இருப்போர் வணங்கிடவும் ஆலய வளர்ச்சிக்கும் புலத்தில் இருந்து நிலத்துக்கு வரும்போது சென்று வணங்கிடவும் எல்லோரும் ஒத்துழைத்து அதர்க்கான நிதியை கொடுக்க வேண்டியவரிடம் உங்கள் கரத்தால் கொடுத்து முழுப்பணி நிறைவுறச் செய்வோம் தெய்வ தரிசனம் சிறப்பாகும்
 குறுகிய நாட்களில் இதற்கான பணம் பெறுவது நிறுத்தி கிடைத்த கணக்கு விபரங்கள் அறியத்தரப்படும் அதற்குள் நீங்கள் ஆண்டவன் பணிக்கு உதவி
 உங்கள் இறையருளை பூர்த்தி செய்யுங்கள்
 செய்யும் பணியாவும் உன்னைச்சிறப்பாக்கும்
 அத்தோடு சிறுப்பிட்டி இணையம்
 எம் ஊர் இணைய நிர்வாகத்தினர்
 இத்த தகவலை உலகப்பந்திற்கு எடுத்து வருவதற்கும் நன்றிகள்
 ஆலய நிர்வாகத்தினர்


 
 
 

திங்கள், 16 டிசம்பர், 2013

சிறுப்பிட்டி பூமகள் வீதி புதுப்பொலிவுடன்

கடும்மழைகாரணத்தால்தடைப்பட்டுஇருந்த சிறுப்பிட்டி பூமகள் வீதி அடாது மழைபெய்தாலும் விடாது  புனரமைப்பு வேலைகள்நடைபெற்றது" புதுப்பொலிவுடன் சிறுப்பிட்டி பூமகள் வீதி புனரமைப்பு வேலைகள் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபா 194000/:(09.2013) சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியில் வேலைகள் பூமகள் சனசமூக நிலையம் ஊடக செல்கின்ற வீதிக்கு இவ் நிதி ஒதுக்கபட்டுள்ளது. நீங்கள் இவ் இணையமூலம் அறிந்ததே அந்த ஒப்பந்தத்தினை சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் முழுமையாக பூர்த்தியாக்கியதை இந்த நிழல் படங்கள் காண்பிக்கும் இதைத்திறம்பட நடாத்தி நிறைவேற்றிய பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினருக்கும் ஊர்மக்களுக்கும்
 செயல்பாட்டை உமதாக்கி
 செழித்திட எம் ஊர் பாதைக்காய் செம்மையே உழைத்தோரே
 சிறப்பது உங்கள் உழைப்பு
 சிறுப்பிட்டி மண்ணதற்கு
 புலப்படுகிறது நிழல்வடியில்-இதுபோல்
 விழிப்புற்று வேறுபணியும்
 சிறப்புற செய்து வாழ வாழ்த்துக்கள்
 புலம்பெயர் ஊர் உறவுகளும் ஊரின் இணையமான சிறுப்பிட்டி இணையமும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றனர் நன்றி 

செவ்வாய், 10 டிசம்பர், 2013

சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியிப் புனரமைப்புப் புதிய நிழல்படங்கள்

 
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபா 194000/:(09.2013) சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியில் ஆரம்பிக்கபட்டு பூமகள் சனசமூக நிலையம் ஊடக செல்கின்ற வீதிக்கு இவ் நிதி ஒதுக்கபட்டுள்ளது. எனவே இவ் வேலைக்கான ஒப்பந்தத்தினை சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் செய்துள்ளமை குறிப்பிடதக்கது.இவ் வேலைகள் 30.10.2013 புதன்கிழமை துரிதமாக பூமகள் சனசமூக நிலைய நிர்வகத்தினரால் ஆரபித்து நடைபெறுவது நீங்கள் அறிந்ததே அதன் கட்டுமானப் பணியின் வளர்ச்சியை தாங்கிவரும் எம்ஊர் இணையமான இந்த இணையம் புதிய நிழல் படத்தை கட்டுமாபணியின் வளர்சியை இதில் இணைத்துள்ளது மேலும் வரும் தகவல்யாவும் உங்கள் பார்வைக்குக்கிட்டும் புலத்தில் இருந்தாலும் எம் ஊர் வளர்ச்சிகண்டு மகிழ்வோம் நன்றி
 
 

சனி, 7 டிசம்பர், 2013

நினைவஞ்சலி:அமரர் சின்னத்தம்பி நவரத்தினம்

 சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  சின்னத்தம்பி நவரத்தினம்  அவர்களின் 2ம் ஆண்டு நினைவுதினம்இன்று
                             அன்புள்ளம் கொண்டு நீ பண்பாய் பழகிடுவாய்
                                        அமைதியாய் என்றும் பாசமாய் பேசிடுவாய்.
                                                 வந்தாரை வரவேற்க்கும் வள்ளல் நீ

                                                    வற்றாத உன் வள்ளல் குணமண்ணா.
                                                     மங்கையின் அன்பு மணாளன் நீ
                                                     பிள்ளைகளின் ஆசை தந்தை நீ
                                                    உன் உறவுக்கு நல்ல சொந்தம் நீ
                                                  ஊரில் எல்லோருக்கும் என்றும் நண்பன் நீ.
                                                      நீ மறந்து ஒராண்டு போனதென்ன.
                                               உனை நினைத்து நெஞ்சம் துடிப்பது என்ன
                                                ஈராண்டென்ன ஆண்டுகள் ஆகட்டும் ஆயிரம்
                                                       மறவோம் நாம் உன் அன்பு முகம்.
                                 உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்…
                                          ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி…!!!
நவரத்தினமண்ணாவின் ஒராண்டு நினைவு நாளில் அவரது நினைவில் தவித்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை நவற்கிரி சிறுப்பிட்டி இணையம் தெரிவித்துகொள்கின்றது.
 

வியாழன், 5 டிசம்பர், 2013

திருமதி இலட்சுமிப்பிள்ளை பூதத்தம்பி அவர்கள்(01.12.2013) காலமானார்சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகவும்கொண்ட திருமதி இலட்சுமிப்பிள்ளை பூதத்தம்பி அவர்கள்
(01.12.2013 ) ஞாயிறு அன்று காலமானார் அன்னார் காலம் சென்ற பூதத்தம்பியின் அன்புமனைவியும்
 வள்ளிப்பிள்ளை காலம்சென்ற பார்வதிப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும் மயில்வாகனம். விஐயலட்சுமி. கணேசலிங்கம் (சுவிஸ் ) காலம்சென்ற வேதநாயகி. வேல்முருகன் (சுவிஸ்)அருணாச்சலம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகுதாயும் சத்தியலோகநாயகி.நாகலிங்கம் (சுவிஸ்) தவமலர்(சுவிஸ்) காலம்சென்ற அருணகிரிநாதர்.றமணி(சுவிஸ்) தர்சா (லண்டன்) ஆகியோரின் அன்புமிக்க மாமியும் குமரேசன். காலம்சென்ற சரவணன். விக்கினேஸ்வரன். காசிசர்வேஸ்வரன்.பிரசன்னா(சுவிஸ்) அர்ச்சனா(சுவிஸ்) லண்டன் வசிப்பவர்களான சயனன்.பிரவீன்.சஞ்சய். யதுர்சன் ஆகியோரின்

பாசமிகுபேர்த்தியாரும் ஆவார் .அன்னாரின் இறுதிக்கிரியைகள் (01.12.2013) இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் தகவல் குடும்பத்தினர்கள்
 செல்லப்பிள்ளையார் கோயிலடி
 சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலி.

புதன், 27 நவம்பர், 2013

32வது பிறந்தநாள் வாழ்த்து:கலைநேசன்(27.11.13)


மீசாலையை பிறப்பிடமாகவும் அவுஸ்றேலியா மேல்பேணை  வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் தம்பையா கலைநேசன் அவர்களின் 32வது பிறந்தநாள் இன்று. இவரை அன்புத்தாய்,ஆசை மனைவி சகோதரர்கள்,மாமா,மாமி,மச்சான்மார் ,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்களுடன் சிறுப்பிட்டி இணையமும் சீரும் சிறப்புடனும் ஆரோக்கியத்துடனும் பன்நெடுங்காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

செவ்வாய், 26 நவம்பர், 2013

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியதின் இறுதி அமர்வின் விபரம்(24.11.13)

siruppiddy

நேற்று மலை நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய  நிர்வாகக்கூட்டம் உறுதியான எமது முடுவுகளுடன் இறுதியான அமர்வை  மனநிறைவுடன் முடித்துக்கொண்டோம் என்பதை எமது உறவுகளுக்கு அறியத்தருகின்றோம். நாம் முன்னெடுத்த  பணிகள் சிறுப்பிட்டி மேற்கையும் தாண்டி இருந்ததினால் பங்களித்த உறவுகள் எமது சிறுப்பிட்டி கிராமத்தையும் தாண்டியவர்களாக இருந்ததினாலும் பதவிகள் ஏதும் இன்றி பங்களிப்பவர்களே எமது தலைவர்கள் என்ற கோட்பாட்டுடன் ஒன்றிய அத்தனை முன்னெடுப்புக்களையும் வெளிப்படையாகவும்  வரவுசெலவு விபரங்களை  சிறுப்பிட்டி இணையத்திலும் பதிவிட்டு வந்தமையால் சீராகவும் சிறப்பாகவும் செயல்பட முடிந்தது என்ற அனுபவ உண்மையை பகிர்ந்து கொள்வதுடன் பங்களித்த அத்தனை உறவுகளுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன் எமது தகவல்களையும் ஒன்றியத்தின் செயல்பாடுகள் அனைத்துக்கும் ஆதரவாகவும் அரணாகவும்  இருந்து சமகாலத்தில் தனக்கே உரிய  தனிவழி நின்று ஒரு கிராமத்து இணையத்துக்கான தனது பணியை செய்வதுடன் நின்றுவிடாது எம்மீதான விமர்சனங்களையும் வெளிப்படையாக பதிவிட்டு பாதை தவறாது பயணிக்க உதவிய இந்த சிறுப்பிட்டி இணையநிர்வாகத்தினருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் ஒன்றுபட்ட எமது சிறுப்பிட்டி கிராமத்தின் வளற்சியை முதற்கருவாக முன்னிறுத்தி தனது செயற்பாட்டுடன் முன்வந்திருக்கும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தினருக்கு எமது ஆதரவையும் பங்களிப்புக்களையும் வழங்குவோம் என்பதை பகிரங்கமாக  உறுதிபட அறியத்தருகின்றோம்.
அமையப்பெற்றிருக்கும்  சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தின் முதல் நிலை செயற்பாட்டாளர்களான இரு ராசாக்களினது வழிநடத்தலின் கீழ் அந்த ஒன்றியம் சிறப்புற செயல்படும் என்பது எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.அத்துடன் வயதிலும் அனுபவத்திலும் இவர்களது  தனிப்பட்ட வாழ்வியலின் நேர்மையிலும் எமக்கு இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.
 திரு நடராசா,திரு தேவராசா மற்றும் உங்களுடன் செயற்பட்டுக்கொண்டு இருக்கும் செயற்பாட்டாளர்களுக்கு நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன்  நாமும் ஒன்றுபட்ட கிராமத்தின் வளற்சிக்கு இன்றிலிருந்து செயல்வடிவம் கொடுப்பதுடன் கிராமத்தின் எமது பகுதிக்கான தவிர்க்கமுடியாத சில  முன்னெடுப்புக்களுக்கும் அதற்க்கான பங்களிப்புக்களை பெற்று சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தின் ஊடாகவே செயற்படுத்துவோம் எனக்கூறி இன்றிலுருந்து எமது சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தை மன மகிழ்வுடன்  முறைப்படி தாய் ஒன்றியத்துடன் இணைதுக்கொள்கின்றோம்….நன்றி,  


         siruppiddy1

***சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியநிர்வாகம்***
((((ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு))))   

சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம்:பங்களித்தவர்கள் விபரம்(19.11.2013-24.11.13)


உலகதமிழர் ஒன்றியம் கிராமத்தில் முன்னெடுத்த முதல் பணியான கணனிகள்  வழங்கும் திட்டத்தை நிறைவேற்றிய பின்னர் வெளிநாட்டு வாழ் சிறுப்பிட்டி உறவுகளிடம்  அதற்க்கான பங்களிப்புக்களை கோரி நின்றது.அதற்கமைய பங்களித்தவர்களின் விபரங்கள் இங்கு பதிவிடப்படுகின்றது.மேலும் பங்களிப்பவர்களின் விபரங்கள் இங்கு உடனுக்குடன் பதிவிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் ஒன்றியம் நன்றி பகிர்கின்றது.  தாங்களாகவே தொடர்புகளை ஏற்படுத்தி பங்களிப்புக்களை செய்த உறவுகளே உங்களுக்கு எங்கள் எல்லோரினது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

யேர்மனி (EUR)
சு.குமாரசாமி                       50.00 €r
சு.தேவராசா                        50.00 €r
சு.யெயக்குமார்                    50.00 €r
சு.தவராசா                            50.00 €r
சி.தவேஸ்வரி                       50.00 €r 
குவேந்திரன் வேலுப்பிள்ளை       100.00 €r
   
  கொலன்ட்
இராசநாயகி இரவேந்திரன்                   50.00 €r

லண்டன்
க.ஶ்ரீகண்ணதாசன்                         50.00 €r
நோர்வே (NOK)
சந்திரன் செல்லையா                   100.00
சுவிஸ்(CHF)
தவராசா சாந்தினி   150 Sf
சுதாகரன் நந்தினி                        100 Sf
சிவகுமார் பூதத்தம்பி                  150 Sf
சடாச்சரம் விநாசித்தம்பி            50 Sf
முரளிதரன் தவேந்திரன்            50 Sf
புஸ்பநாதன் அம்பலவாணர்      50 Sf
நேமிநாதன்  இராசலிங்கம்           50 Sf
இலட்சுமிகாந்தன் கவிதா           100 Sf
நடராசா சின்னத்துரை                100 Sf
ராசன்   அம்பலவாணர்               100 Sf
அருண்  சுந்தரலிங்கம்                100 Sf
விமல்   குமாரசாமி                      100 Sf
 பரதலிங்கம் பாக்கியவதி 100 Sf
 அருளம்பலம் ஐயாத்துரை   50 Sf
 தேவன் துரைராசா    50 Sf
யோகராஜா சின்னத்தம்பி                        50 Sf
 வன்னிஉறவு ஒன்று   21 SF  
    தேவராசா சுப்பிரமணியம்   50 €r
 ஈசன் குமாரசாமி   50 Sf
சுகந்தி குமாரசாமி 100 Au $
ராசன் அம்பலவாணர் 100 Sf த.பிரபாகரன்/ரூபா    15,000 Rs
த.பிரபாகரன்/ரூபா    15,000 Rs
கு.நகுலன்/ரூபா  100,000 Rs
ந.ஏழுமலைநாதன்/ரூபா    43,186 Rs
ஐ.அருளம்பலம்/ரூபா     71,750 Rs
இ.சரஸ்வதி(சுவிஸ்,ஜெர்மனி,கனடா) 300,000  Rs
ஐ.குணசேகரம்(மகள்+மகன் சுவிஸ் )  115,200  Rs   
தரவுகளில் தவறிருப்பின் உரியவர்கள்  அறியத்தரவும் திருத்தப்படும்

திங்கள், 18 நவம்பர், 2013

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் தரும் தகவல் ஒன்றுசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் தரும் தகவல் ஒன்று
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(24.11.13) மலை ஏழு மணிக்கு  சிறுப்பிட்டி இணையக்காரியாலத்தில் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினரின் நிர்வாகிகள்  இறுதிக்கூட்டம் நடை பெறவுள்ளது.
நாம் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கும் முடிவின் படி எமது நிர்வாகம் கலைக்கப்பட்டு சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தினருக்கு எமது ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கி ஒன்றுபட்ட முழுக்கிராமதுக்குமான முன்னெடுப்புக்களுக்கு வலுசேர்க்கும் வண்ணம் செயல்பட இருப்பதினால் எமது மாதாந்த 50sf பங்களிப்புக்களும் நிறுத்தப்பட்டு இறுதி கணக்கு விபரங்களும் சரிபார்த்து ஒப்புக்கொண்ட சிலர் தங்கள் இந்தவருடதுக்கான நிலுவைகளையும் சீர் செய்து செய்துகொள்ளும்படிகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நாம் செய்த     பணிகளை மீள் பரிசீலனை செய்வதுடன் எமது ஒன்றியத்தின் இந்த இறுதி அமர்வுக்கு ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் சமூகம் அளிக்கும் படி அன்புடனும் நன்றியுணர்வுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்
 

சனி, 16 நவம்பர், 2013

சிறுப்பிட்டி ஒன்றிய அறிவித்தல் ஒன்று..**சிறுப்பிட்டி ஒன்றியம் ** 


உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளே திக்கெட்டும் திசைகள் யாவும் பரவி வாழும் எம்மூர் உறவுகளை ஒன்றிணைக்கும் முகமாகவும் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலமாக எம்மூரில் வாழும் உறவுகளின் வாழ்வாராரத்தை வளம் பெற செய்யும் நோக்குடன் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியமாகிய நாம் முதற்ட்கட்ட  விரிவாக்கம் செய்துள்ளோம் .அந்த வகையில்
 திரு நடராசா(சுவிஸ் )திரு தேவராசா (ஜேர்மன் )ஆகிய இருவரின் வழிகாட்டலின் கீழ் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம் தமது நடவடிக்கைகளை தொடரும் என்பதை அறியத்தருகின்றோம் ஊருக்கு பல ஒன்றியங்களும் ஊரில் பல அமைப்புக்களும் இருக்கும் நிலையில் இவைகளின் ஒன்று பட்ட செயற்பாடே  எம் கிராமத்தின் நிலையானதும் உண்மையானதுமான வளர்ச்சிக்கு வித்திடும் என்ற அனுபவ உண்மையின் வெளிப்பாடே இந்த ஒன்றியத்தின் பிறப்பு. இவ் ஒன்றியம் ஊர் ஒற்றுமையை மேலும் வலுச் சேற்க்கும்  முன்னெடுப்புக்களுக்கே   முன்னுருமை கொடுத்து செயற்ட்படும் .
சுவிஸ் நாட்டு செயற்பாட்டாளர்
திரு .நடராசா சின்னத்துரை
031 971 49 76
079 639 71 87
ஜெர்மன் நாட்டு செயற்பாட்டாளர்கள்
திரு .தேவராஜா சுப்பிரமணியம்
s.theva@web.de
0231/5331577
0176494338190
திரு  .குவேந்திரன் வேலுப்பிள்ளை
0049243386106
பிரான்ஸ் நாட்டு செயற்பாட்டாளர்
திரு.  துசீபன் மகாராஜா
thuseepan29@gmail.com
0033753667047
நோர்வே நாட்டு செயற்பாட்டாளர்
திரு .சந்திரன் செல்லையா
004741243969
ஒன்றிய கணக்கு விபரங்களுக்கு
திரு அருண்  சுந்தரலிங்கம்
திரு .ராசன்   அம்பலவாணர்
மேலதிக தகவல்கள் விரைவில்  இணைக்கப்படும்

செவ்வாய், 5 நவம்பர், 2013

சிறுப்பிட்டி கிராமத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவர்:மீள் பார்வை


எமது கிராமம் நல்ல  நீர்வளம் நிலவளத்தை மட்டும் தரவில்லை அதனூடாக அந்த மண் எம்மை அன்னிய தேசத்தில் இருந்து சிந்திக்க வைக்கும் வேளையில் நல்ல மாகான்களையும் நற்குணம் கொண்டு செயல் வடிவம் கொடுத்த மனிதர்களையும் சிந்தனை கொள்ள வைத்திருக்கின்றது.
அந்தவகையில் சி,வை தாமோதரம்பிள்ளை

 காலத்தில் இருந்து சிறுப்பிட்டி இசைத்தென்றல் தேவராசா அவர்கள் மட்டுமே உள்ள கால வெளியில் உள்ளவர்களில் ஒரு சிலரையே இந்த இணையம் பதிவிட்டுள்ளது.அந்த வகையில் இன்றுள்ள பல கலைஞர்களில்

 மூத்த கலைஞர்களில் ஒருவரான ஊரில் குழந்தை அண்ணா என்று அழைக்கப்படும் திரு தெய்வேந்திரம் அவர்களை பதிவேற்றுகின்றது. இந்த கலைஞன் எமது கிராமம் மட்டுமன்றி யாழ் மாவட்டத்தில் பல கிராமங்களில் பலமுறை மேடை நாடகங்களை அரங்கேற்றியவர் மட்டுமல்லாது பாடும் திறனும் உள்ளவர்.

பல கலைஞர்களையும் உருவாக்கிய பெருமை இவரையே சாரும். இன்றும் இவர்வழி வந்தவர்கள் கலைத்தகமையுடன் நிலத்திலும் புலத்திலும் வாழ்கின்றனர்.இன்று யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் இவர் அங்கும்  தனது ஆழுமையைத்தொடர்ந்தார்.

அந்வகையில் இவரால் பல நாடகங்கள் மேடை ஏறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  கலைஞனுக்கு தான் கற்றவற்றை  மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்பது அதை இவர் தொடற்சியாகவே  செய்து வந்தார்  தன் புகளாரம் விரும்பாது வாழும் இக்கலைஞனை

 இப்பதிவில் ஒரு புகைப்படம் கூட பதிவிட முடியாமல் செய்துள்ளது. இவர்பற்றிய ஆக்கம் தொடரும்….(மேலதிக தகவலோ புகைப்படங்களோ  உள்ள உறவுகள் தந்துதவலாம் உங்கள் நினைவுகளுடன்..infosiruppiddy@gmail.com

புதன், 16 அக்டோபர், 2013

சிறுப்பிட்டி பூமகள் நிர்வாகத்தினருக்கு நன்றி..

siruppiddynet (3)

   இந்த இணையத்துக்கு ஒரு உறவு சிறுப்பிட்டி மேற்க்குப்பகுதிக்குரிய இந்து மயானத்தின் புகைப்படத்துடன் கூடிய நிலைமையை தனது மனவருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.இணையம் பதிவிட்ட சில நாட்களில் பூமகள் சனசமூகநிலைய நிர்வாகம் அத்தகவலை கருசனையுடன் நிறைவேற்றி புகைப்படங்களையும் அனுப்பியுள்ளனர்.

siruppiddynet (1)

siruppiddynet (2)

siruppiddynet (4)

siruppiddynet (5)

siruppiddynet (6)

siruppiddynet (7)
siruppiddynet (8)

அந்த உறவுடன் இந்த ஊர் இணையமும் நன்றி பகிர்கின்றது.
மேலும் மழை காலங்களில் நிகழும் மரண இறுதிச்சடங்க்குகளை முறையாக செய்வதற்க்கு இது போன்ற கொட்டகையின் தேவையை ஒரு உறவு இணையத்துக்கு தெரிவித்து இருக்கின்றார்.. siruppiddy
 
சனசமூகநிலைய நிர்வாகத்தினர் அதன் தேவையின் முக்கியத்தை கருத்தில் எடுத்து உங்கள் கருத்தையும் தெரிவிக்கவும். கிராமத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு சங்கமிக்கும் நல் மனங்களுடன் இணைந்து செயல் வடிவம் கொடுப்பது உங்களைப்போன்ற கிராம முன்னேற்ற சங்கங்களின் கடமையும் கட்டாயமுமாகின்றது.
 
அந்தவகையில்  உங்களுக்கு கரம் கொடுக்க தொடர்புகளை ஏற்ட்படுத்த இந்த சிறுப்பிட்டி இணையம் காத்திருக்கின்றது.சிறுப்பிட்டி உறவுகளே உங்கள் தேவைகளை இந்த மின்னஞ்சலுக்கு ஆதார பூர்வமாக அனுப்பி வையுங்கள்.இந்த இணையம் ஊருக்கானது ஒரு பகுதிக்கானது இல்லை.
நன்றி :இணைய நிர்வாகம்.        infosiruppiddy@gmail.com

புதன், 25 செப்டம்பர், 2013

இறப்புத்தகவல்திருமதி .பொ.பாக்கியம்


                                          திருமதி பாக்கியம் பொன்னம்பலம்

                               பிறந்த இடம்:   புத்தூர்  ,,, வாழ்ந்த இடம்:   சிறுப்பிட்டி  
                                                                                          
    புத்துரைப் பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மத்தியை வசிப்பிடமாகவும் தற்போது புன்னாலைக்கட்டுவனில் வசித்தவருமான பாக்கியம் பொன்னம்பலம் நேற்று (24.09.2013) செவ்வாய்க்கிழமை காலமானர்.

அன்னார் சிறுப்பிட்டி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பு பொன்னம்பலத்தின் அன்பு மனைவியும், இராஜேஸ்வரியின் (கௌரி) அன்புத் தாயும், தயானந்தனின் (கண்ணன்) அன்பு மாமியும், கிருத்திகா, தர்சிகன், பதுர்சிகன், கிருசிகன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.09.2013) புதன்கிழமை புன்னாலைக்கட்டுவன் தெற்கில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்று மு.ப. 10.00 மணியளவில் பூதவுடல் புன்னாலைக் கட்டுவன் விலங்கன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
   
தகவல் : கௌரி (மகள்)
தொடர்புகளுக்கு  
கௌரி (மகள்) - 3 ஆம் சந்தி, புன்னாலைக்கட்டுவன் தெற்கு, புன்னாலைக்கட்டுவன். , 0779502491 

அகாலமரணம் செல்வன் தே.சருஜன்


நோர்வே ஒலசுண்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சருஜன் தேவானந்தம் அவர்கள் 09-09-2013 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், தேவானந்தம் சிறீமதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,
மதுஜன் அவர்களின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற அழகானந்தம், மற்றும் ஜெயமலர், காலஞ்சென்ற இராஜரட்ணம், பாலநாகம்மா ஆகியோரின் அருமைப் பேரனும்,
இலங்கேஸ்வரன், பாலஈஸ்வரன், முரளீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

ஜெயானந்தம், சுதாநந்தன், சிவாநந்தன், கிருஷ்ணானந்தன், தமிழினி ஆகியோரின் அருமைப் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

முரளி — இலங்கை செல்லிடப்பேசி: +94718380493
இலங்கேஸ்வரன்(கண்ணன்) — நோர்வே செல்லிடப்பேசி: +4741316614

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

ஸ்ரீ ஞாவைரவர் ஆலயத்தின் தேவஸ்தான மண்டப புனரமைப்புஆலைய உள் மண்டபத்தின் தீராந்தி வைக்கும் நிகழ்வு(06.09.13)
சிறுப்பிட்டி மேற்கு .. ஸ்ரீ ஞாவைரவர் ஆலயத்தின் தேவஸ்தான மண்டப புனரமைப்பு வேலைகள் தொடந்து நடைபெற்றவண்ணம் உள்ளதை வாசகர்களாகிய நீங்கள் அறிவீர்கள் அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நான்கு மணியளவில் ஆலைய உள் மண்டபத்தின் தீராந்தி வைக்கும் நிகழ்வு நடை பெறவுள்ளது .அத்தருணம் இறை அடியவர்கள் ஆலயத்துக்கு வருகை தந்து புனரமைப்பு மற்றும் விஷேட பூஜைகளிலும் கலந்து வைரவப்பெருமானின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு உருமையுடன் ஆலைய நிர்வாகத்தினர் அழைக்கின்றனர்.


 

மாதா வின் பாடல்கள்