18

siruppiddy

வியாழன், 17 டிசம்பர், 2015

ஞானவைரவர் வீதி செப்பனிடும் பணி மிக துரிதமாக நடைபெறுகின்றது?

யாழ் சிறுப்பிட்டி வடக்கு ஞானவைரவர் வீதி சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தார் இட்டு செப்பனிடப்படுகின்றது நீண்டகாலமாக பல்வேறு தரப்பினரால் பலதடவைகள் இவ்வீதியை செப்பனிட்டு தருமாறு 
கோரிக்கை 
விடப்பட்டமையால் தற்போது செப்பனிடும் பணி நடைபெற்று வருகின்றது இதனை மேற்கொள்ள ஊன்று கோலாக இருந்த கோப்பாய் பிரதேச செயலாளருக்கும் ஏனைய உத்தியோகத்தினருக்கும் சகல
 வழிகளிலும் 
உதவி புரிந்த அனைவருக்கும் சிறுப்பிட்டி மக்கள் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
செவ்வாய், 8 டிசம்பர், 2015

மரண அறிவித்தல் திரு சண்முகம் குமாரதாசன்

பிறப்பு : 22 நவம்பர் 1926 — இறப்பு : 5 டிசெம்பர் 2015
யாழ். புத்தூர் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் குமாரதாசன் அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசோதிராசா, பேபி இந்திராணி, அருட்சோதிராசா, வதனலோசினி, ஆனந்தசோதிராசா, சகுந்தலாதேவி, சாரதாதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மீனாம்பிகை, அற்புதசோதியம்மா, காலஞ்சென்ற இரங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனலக்குமி, கெளரிகாந்தன், பத்மினி, லோகேஸ்வரன், சந்திரவதனம், தயானந்தராசா, ஸ்ரீராமஜெயம் ஆகியோரின்
 அன்பு மாமனரும்,
நிதர்சன், துர்க்கா, அபி, வினோத், பவித்திரா, பிரணவன், சுவேதா, மாதங்கி, தாமிரா, மிதுர்சன், கீர்த்திகன், மிதுன், ஐஸ்வினி, மகிமா, பிரசாந்த், லக்சன், பிரியங்கி, சாரங்கி ஆகியோரின் 
அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நவற்கிரி.கொம்   நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தவர்க்கு எமது 
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/12/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 07/12/2015, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: திங்கட்கிழமை 07/12/2015, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Highland Hills Memorial Gardens, Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
தகனம்
திகதி: திங்கட்கிழமை. 07/12/2015, 11:30 மு.ப நடைபெற்றது 
முகவரி: Highland Hills Memorial Gardens, Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வெள்ளி, 2 அக்டோபர், 2015

மரண அறிவித்தல்:பொன்னையா நல்லம்மா (01.10.15)

சிறுப்பிட்டி வடக்கைச்சேர்ந்த பொன்னையா நல்லம்மா அவர்கள் (01.10.15)வியாளக்கிழமை அன்று அகாலமரணம் எய்தி இறையடி சேர்ந்துள்ளார்,

இவர் காலஞ்சென்ற பொன்னையாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்,
காலஞ்சென்ற நடராசா, ஏரம்பமூர்தி இந்தியா, செல்லப்பா அவுஸ்ரேலியா, ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

தவமணிதேவி, காலஞ்சென்ற துரைராஐா, மல்லிகாதேவி, நவரத்தினம்,பரமேஸ்வரி யேர்மனி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், தவராசா ஆகியோரின் அன்புத்தாயாரும்,

காலஞ்சென்ற காசிநாதன், சராதேவி, நடரா‌ஐா சுவிஸ், சிவக்கொழுந்து, சிவநாதன் யேர்மனி, ரதிதேவி ஆகியோரின் மாமியாருமாவார்,

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
அன்னாரை இழந்து வாடும் உறவுகளுக்கு நவற்கிரி.கொம்   நவற்கிரி சிறுப்பிட்டி இணையத்தின் அனுதாபத்தையும் ஆறுதலையும் பகிரிந்து கொள்கின்றோம்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி:அமரர் ஐயாத்துரை குணசேகரம்

சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும்
ஞானச்செருக்கும் அவனியில்
எவருக்கும் அஞ்சாது அன்பாலும் பண்பாலும்
அனைவரையும் அரவணைத்த எம் அன்புத்தெய்வமே!

கண்மூடித்திறக்கும் நேரத்தில் எங்களைத்
தவிக்கவிட்டு நிரந்தரமாக பிரிந்தீர்களே
உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார்?
மீண்டும் ஒருமுறை திருமுகம் காண
உள்ளம் கிடந்து பரிதவிக்கின்றது அப்பா!

என்றும் நாம் மறக்கமாட்டோம்
உம்மை நினைத்தே நாமிங்கு வாழ்கின்றோம்
உத்தமரே பெற்றிடுக சாந்தி எம் வாழ்வில்
நீங்கள் இல்லை என்ற எண்ணம் எமக்கில்லை
வாழ்வீர் எம்மனதில் நாம் வாழும் காலம்வரை!

உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள்

அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 01-09-2015 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும், இந் நிகழ்வில் கலந்துக்கொண்டு அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்குமாறும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறும் அனைவரையும் அழைக்கின்றோம்.
தகவல்
சிவரூபி(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
சிவரூபி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778209039

ஸ்ரீசங்கர்(சுவிஸ்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765290200
அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் இந்த இணையமும்  நவக்கிரி,நிலாவரை இணையங்களும் இறை வனைபிராத்திக்கின்றனர் .... ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி உறவினர்கள்  நண்பர்கள் ,  தகவல் குடும்பத்தினர்


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 28 மே, 2015

ஆறாம் திருவிழாசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் (28.05.15)

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இன்றைய 6.நாள்திருவிழாவாக திரு. கு.பரமேஸ்வரன் குடும்பம் அவர்தம் உபயமாக சிறப்பாக பூசை இடம்பெற்றுள்ளது உற்சவத்தில் எம்பொருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இந்த நிகழ்வுகளின் புகைப்படங்களை இணைத்து எமது ஊர் ஆலயத்தின் நாளாந்த தரிசனத்தை நாமும் கண்டு உங்களையும் தரிசிக்க வைப்பது தெய்வத்தின் செயலாகும் அந்த தெய்வத்தை.நீ

உள்ளன்பை செலுத்தி
இறைவனை வேண்டு
இதயத்தில் என்றும்
அமைதியே இருக்கும்

நித்திய பூசைக்கு
சன்னிதிசெல்லு
நிிறைந்த வாழ்வது
நித்தமும் கிடைக்கும்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 27 மே, 2015

ஐந்தாம்நாள் திருவிழாசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் (27.05.15)

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இன்றைய 5.நாள்திருவிழா இ.பொன்னம்பலமும் அவர்தம் உறவினர்களும் இணைந்த உபயமாக சிறப்பாக பூசை இடம்பெற்றுள்ளது உற்சவத்தில் எம்பொருமான் உள் வீதி மற்றும் வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நிழல்படங்கள் இணைப்பு ....
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 26 மே, 2015

நான்காம் திருவிழாசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் (26.05.15)

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 4ம் திருவிழா சிறப்பாக நடைபெற்றுது.உபயம் திரு-அ.சபாரத்தினமும் உறவினர்களும்.அருள்மிகு சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் அந்தப்பெருமானை மனதிலே நிறுத்தி வழிபடும் அடியவர்கட்கெல்லாம் பெருமானின் தரிசனத்தை வழங்கும் நோக்கமே இவ் இணயதரிசனம்மூன்றாம்நாள் திருவிழா சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் (25.05.15)

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் திருவிழாப் பூசை இன்று சிறப்புற நடந்தேறியுள்ளது. இன்றைய உபயம் திரு. த.கணேசபவன் குடும்பம் (சி.பொன்னம்பலம் குடும்பம்)அவர்களினதாக
 சிறப்புற்றுள்ளது. வைரவப்பெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார். ஆலயதரிசனம்
 மன அமைதியைத்தரும் புலத்தில் இருந்தாலும் எமது ஆலய நிகழ்வுகளை உங்கள் பார்வைக்கு தருவதில் நாம் மிக்க மகிழ்ச்சிகொள்கிறோம் இந்தப்பணி எமக்கு ஸ்ரீ ஞானவைரவர் அளித்ததாய் எண்ணுகிறோம்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 25 மே, 2015

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 2ம் திருவிழா (24.05.15)

இன்றைய இரண்டாம்; நாள் திருவிழா நடைபெற்று  ஸ்ரீ ஞான வைரவர் வீதி உலாவந்து  திருவிழா சிறப்பாக நடைபெற்றது இன்றைய உபயம் திரு. சு.கந்தையா குடும்பம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் பெருமானின்  (24.05.15)இன்று நடந்த நிகழ்வுகளில் ஒருசில நிழற்படங்கள்பார்க்க


ஸ்ரீ ஞானவைரவர் அலங்கார உற்சவம்கொடி ஏற்றத்துடன் ஆரம்பித்தது (23.05.2015 )

ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் (23.05.2015 )கொடி ஏற்றத்துடன் ஆரம்பித்து (23.05.2015 )அன்றைய பூசை இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு அருள்பாலித்தா​ர் உபயம் – திரு. சி.செல்வரத்தினமும் உறவினர்களும் இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 
 

வெள்ளி, 13 மார்ச், 2015

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி 2′ம்திருவிழா (13.03.15)

 வாழ்வியலில் மனிதன் தன்னை மிஞ்சிய சக்தியை நம்புகிறான். அதை இறையருளாகப் பார்க்கப்படுகின்றது. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவள் இன்று முதலாம் நாள் விழாவில் வீதி உலா வந்து எமக்கெல்லாம் அருள்புரிந்து நிற்கும் அம்மனின்.இன்றைய உபயமாக திரு பூ. தயாபரன், பூ. சிவகுமார் குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்துள்ளது, சிறப்புற்றதாக தகவல் கிடைத்துள்ளது, எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் திரு.மயூரன் அதன் நிழல்படங்களை பத்தர்கள் பார்வைக்குத் தருவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கüன்றது இணையம
சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி1ம் திருவிழா(12.03.15)

 வாழ்வியலில் மனிதன் தன்னை மிஞ்சிய சக்தியை நம்புகிறான். அதை இறையருளாகப் பார்க்கப்படுகின்றது. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவள் இன்று முதலாம் நாள் விழாவில் வீதி உலா வந்து எமக்கெல்லாம் அருள்புரிந்து நிற்கும் அம்மனின்.இன்றைய உபயமாக ப. கணேஸ்வரன் குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்துள்ளது, சிறப்புற்றதாக தகவல் கிடைத்துள்ளது, எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் 
திரு.மயூரன்   மாதா வின் பாடல்கள்