18

siruppiddy

புதன், 31 மே, 2017

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இரண்டாம் நாள் உற்சவம் 31.05.17

ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 31.05.17இன்று இரண்டாம் நாள் என்பதை எமது ஊர் இணையம் எமது ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு அறியத்தருகின்றது
இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு 
அருள்பாலித்தா​ர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>

செவ்வாய், 30 மே, 2017

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் அலங்கார உற்சவம் 30.05.17 ஆரம்

ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 30.05.17இன்று ஆரம்பித்துள்ளது என்பதை எமது ஊர் இணையம் எமது ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு அறியத்தருகின்றது
இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு அருள்பாலித்தா​ர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


திங்கள், 29 மே, 2017

வாழைத்தோட்டத்தினுள் புகுந்த கும்பல் வாழைகளை வெட்டி சாய்த்தால் மக்கள் அச்சத்தில்

   யாழ்  புத்தூர் மேற்கில் அமைந்துள்ள கிந்துசிட்டி மயானம் தொடர்பிலான பிரச்சனை பொலிசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் உச்சத்தை அடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பெரும் பதட்டத்தையும் 
ஏற்படுத்தி உள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மாயனத்தை அகற்ற கோரி மாயானத்தை சூழவுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் அண்மைக் காலமாக போராட்டங்களை நடாத்தி எதிர்ப்பு தெரிவித்து 
வருகின்றனர்.
அது தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகளின் பின்னனர் நீதிவான் ஏ.யூட்சன் மாயனத்தை சுற்றி சுற்றுமதில் அமைத்த பின்னர் சடலங்களை எரியூட்டுங்கள் என்றும் மிக விரைவில் மின் தகன மயானத்தை உருவாக்குங்கள் எனவும் கட்டளையிட்டார்.
அதன் பிரகாரம் மயானத்தை சூழ சுற்று மதில் அமைக்கும் பணியில் மயான அபிவிருத்தி சங்கம் ஈடுபட்டது. அதற்கு மயானத்தை சூழ உள்ளவர்கள் கடும் எதிர்ப்புக்களை காட்டி வந்தனர்.
கடந்த 16 ஆம் திகதி மதில் கட்டட பணியில் ஈடுபட்ட மேசன் தொழிலாளியான இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதன் தொடர்ச்சியாக மல்லாகம் நீதிமன்றில் மதில் கட்ட அனுமதி பெற்ற வழக்காளிகள் இருவர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டது.
குறித்த இரு தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் அச்சுவேலி போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் போலீசார் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை எனவும் , தாகுதலாளிகளை கைது செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.
அந்நிலையில் , கடந்த 25ஆம் திகதி நள்ளிரவு மாயனத்தை சுற்றி அமைக்கபட்டு இருந்த சுற்று மதில் உடைத்து வீழ்த்தப்பட்டது. அது தொடர்பில் அச்சுவேலி போலிஸ் நிலையத்தில் மயான அபிவிருத்தி செயலாளார் முறைப்பாட்டினை பதிவு செய்தார்.
அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக மறுநாள் நள்ளிரவு 26ஆம் திகதி செயலாளரினதும் அவரின் உறவினர் ஒருவருக்கும் சொந்தமான வாழைத்தோட்டத்தினுள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த சுமார் 400 க்கும் அதிகமான வாழைகளை வெட்டி சாய்த்துள்ளனர்.
அது தொடர்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை அச்சுவேலி போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் நேற்றைய தினம் மாயானம் அமைந்துள்ள பகுதிகளை சூழவுள்ள மக்களிடம் விசாரணைகளை முன்னெடுக்க சென்று இருந்த அச்சுவேலி போலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசாரும் அப்பகுதி மக்கள் முரண்பட்டதை அடுத்து போலீசார் வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தவாறே அப்பகுதியில் இருந்து வெளியேறினர்.

போலீசார் வெளியேறிய பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டப்பட்ட மதில்கள் இடித்து அழிக்கப்பட்ட நிலையில் அவற்றின் அத்திபரத்தினையும் சிலர் கிளறி எறிந்தனர். அதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டதனை அடுத்து , நிலைமையினை கட்டுப்படுத்த நெல்லியடி , பருத்தித்துறை , வல்வெட்டித்துறை மற்றும் காங்கேசன்துறை ஆகிய போலிஸ் நிலையங்களில் இருந்து மேலதிக போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

அந்நிலையில் இரவு வேளைகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கலாம் எனும் எதிர்பார்ர்பில் விசேட போலிஸ் அதிரடிப்படையினரும் மயானத்தை சூழ உள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதனால் புத்தூர் பகுதியில் பதட்டம் ஏற்பட்டு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>


சனி, 20 மே, 2017

பிறந்தநாள் வாழ்த்து திரு, இராசலிங்கம் நேமிநாதனின்.20.05.17

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பப்பிடமாகவும் கொண்ட
 திரு,இராசலிங்கம் நேமி நாதன் அவர்களின் (20.05.17) இன்று பிறந்த நாள். இவரை அன்பு மனைவி  பிள்ளைகள் 
அப்பா. அம்மா ,சகோதரர் குடும்பம் ,மற்றும் , . உற்றார் .உறவினர்கள், நண்பர்கள், சிறுப்பிட்டி ஞான வைரவர் மற்றும்
 தெல்லிப்பளை துர்க்காதேவி துணைகொண்டு  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இன்பமாய் 
எல்லாநலமும் மும் பெற்று   பல்லாண்டு காலம்
 நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 19 மே, 2017

மரண அறிவித்தல் செல்வி சுப்பிரமணியம் தேவிசரஸ் 17 .05.17

(ஆசிரியர்- அத்தியார் இந்துக் கல்லூரி, அக்கராயன் மகா வித்தியாலயம்)
தோற்றம் : 30 மார்ச் 1949 — மறைவு : 17 மே 201
யாழ். சிறுப்பிட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தேவிசரஸ் அவர்கள் 17-05-2017 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ஆசிரியர்), மாணிக்கம்(கனடா) தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
கமலாதேவி(படவரைஞர்- சுவிஸ்), சாரதாதேவி(ஆசிரியை- சுவிஸ்), சத்தியதேவி(ஆசிரியை- கனடா), Dr.ராஜேஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கனகநாயகம் பொன்னையா(பப்பு- சுவிஸ்), லோகன் சண்முகம்(கனடா), லோகன் கணபதி(கவுன்சிலர்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதாப், கீர்த்திகா, வினோத், விசாலி, விசால், பிரவீன், பிரதீப் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
சண்முகநாதன், காலஞ்சென்ற ராமநாதன் ஆகியோரின் அன்பு மருமகளும்,
மனோன்மணி அவர்களின் அன்புப் பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-05-2017 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சக்தி லோகன் — கனடா
செல்லிடப்பேசி: +14162987121
Dr.ராஜேஸ் லோகன் — கனடா
தொலைபேசி: +19058878482
கமலா பப்பு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344456216
கௌரி சிவா — இலங்கை
தொலைபேசி: +94212058874
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 18 மே, 2017

சிறுப்பிட்டியில் ஆசிரியை கழுத்தறுத்து கோரமாகக் கொலை

யாழ்  சிறுப்பிட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை தேவிசரஸ்வதி(வயது 69) அவர்கள் இன்று அதிகாலை அவரது இல்லத்தில் திருடர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கோரமாகக் கொலை 
செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனது சேவையின் நிறைவுக்காலத்தில் கிளி.அக்கராயன் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிவர்.
யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாகத் திருடர்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.துணை அற்று வாழ்வோர் வலுக்குறைந்தோர் திருடர்களால் பெரிதும் இலக்குவைக்கப்படுகின்றனர். இது தொடர்பாக பொலிசார் உரிய நடவடிக்கைகளை 
எடுத்தல் அவசியம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

மரண அறிவித்தல் திரு கந்தசாமி தயாபரசிவம் 17.05.17

பிறப்பு : 23 மே 1939 — இறப்பு : 17 மே 2017
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, லண்டன்( Newbury Park) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி தயாபரசிவம் அவர்கள் 17-05-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
தவபாலன்(லண்டன்), தயாவதி(லண்டன்), தயபவாணி(லண்டன்), சிவபாலன்(லண்டன்), தயரஜனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ராசு, நடராஜா, பூரணம், கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிரிதரன்(சிறி- லண்டன்), விபுலானந்தன்(மூர்த்தி- லண்டன்), அதிஸ்குமார்(அதிஸ்- லண்டன்), ரஞ்சிதமலர்(லண்டன்), வாணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தம்பு, நடராசா, சின்னராஜா, மகாலிங்கம், இராமசேது ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டினேஸ்காந், கீர்த்தனா, அயுரன், சயுரன், ஜெயூரன், கார்த்திகன், தாச்சாயினி, சகானா, நசாந், வய்சா, வய்சு ஆகியோரின் 
அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஜனி — பிரித்தானியா
தொலைபேசி: +442085982946
ஸ்ரீ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950849223
மூர்த்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447588879915
தினேஷ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930844533
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 10 மே, 2017

மரணஅறிவித்தல் திரு நடராசா - சிவசுப்ரமணியம்

அன்னை மடியில் : 20 ஏப்ரல் 1948 — ஆண்டவன் அடியில் : 10 மே 2017
யாழ். சிறுப்பிட்டி மேற்கை  பிறப்பிடமாகவும்   ---- வாழ்ந்த இடம் சுவிஸ் செங்காளன --சிறுப்பிட்டி மேற்கு
  ஆகிய இடங்களில்வாழ்ந்து வந்த  திரு  நடராசா - சிவசுப்ரமணியம் (மணியம்)  அவர்கள் 10.05.2017அன்று
  இறைவனடி சேர்ந்தார்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக தகவல் கிடைக்கப்பெற்றதும் 
நல்லடக்க திகதி   அறியத்தரப்படும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 1 மே, 2017

மரணஅறிவித்தல் திருமதி சரவணமுத்து மகேஸ்வரி 30.04.17

தோற்றம் : 27 ஓகஸ்ட் 1938 — மறைவு : 30 ஏப்ரல் 2017
யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சரவணமுத்து அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி வைரமுத்து தம்பதிகளின் 
அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு 
மனைவியும்,
தெய்வநாயகி, பத்மலோசி(சுவிஸ்), தெய்வராணி(சுவிஸ்), கேதீஸ்வரி  (இலங்கை) நல்லநாதன்(சுவிஸ்), சிவனேசன்(சுவிஸ்), சோதிநாதன்(கனடா), கிருபா(கனடா) ஆகியோரின் 
அன்புத்தாயாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், யோகரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விஐயராஐன், சிவகுருநாதன், முரளிதரன், உமா, கோசலா, தவராசா, சுயிதா, வியிதா, சாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவபாக்கியம்(சுவிஸ்), ராசமலர்(இலங்கை) ஆகியோரின்
 அன்பு மைத்தினியும்,
சஐந்தா, பாலசஐந்தன், லசந்தன், சிவறஞ்சித், நிவெஸ்திகா, நிருத்திகா, நிவேதன், சரண்யா, வாசன், வாகினி, விசாகன், டிலக்சி, கேசவன், பிரவீன், சாரங்கன், கபின், லதுஐன், நிருஷன் ஆகியோரின் 
அன்புப்பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2017 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் சிறுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி காலயன்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
யோகரத்தினம்(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
நாதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41412404518
சிவனேசன்  (சிவன்)— சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41435586419
செல்லிடப்பேசி: +41793543351
தெய்வராணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41434999710
யோகரத்தினம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41443026564
யோகரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779359548
தெய்வநாயகி — இலங்கை
தொலைபேசி: +9421790378
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


மாதா வின் பாடல்கள்