சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சரவணமுத்து (05.12.2014) வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான வைரமுத்து சிவகாமசுந்தரி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், மகேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், சின்னப்பிள்ளை, குமாரசாமி, மாசிலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சுப்பிரமணியம், யோகரத்தினம் ஆகியோரின் மைத்துனரும், தெய்வநாயகி, பத்மலோஜினி, தெய்வராணி, நல்லநாதன், சிவநேசன், சோதிநாதன், கேதீஸ்வரி, கிருபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயராஜன், சிவகுருநாதன், முரளிதரன், உமா, கோசலா, சுஜிதா, தவராஜன், விஜிதா ஆகியோரின் மாமனாரும், சஜந்தா, பாலசயந்தன், லசந்தனன், சிவறஞ்சித், நிவெஸ்திகா, நிருஸ்திகா, நிவேதன், சரண்யா, வாசன், வாகினி, விசாகன், சாரங்கன், கபிஷன், லதுஜன்,
காலஞ்சென்ற வாசுகி ஆகியோரின் பேரனும் ஆவார். இவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு இவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும்
, ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவர்கள் துன்பத்தில் நாமும் பங்கெடுத்து கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (08/12/2014) திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடை பெற்று மு.ப. 10.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரிகைக்காக காலயம்புலம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.