18

siruppiddy

செவ்வாய், 30 ஜூலை, 2013

இறப்புத்தகவல் திரு ச.மூத்ததம்பி

 
                                             திரு சரவணமுத்து மூத்ததம்பி
              (முன்னாள் வர்த்தகரும், ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தர்மகர்த்தர்)
                                   தோற்றம் : 26 ஏப்ரல் 1930 — மறைவு : 26 யூலை 2013

யாழ். சிறுப்பிட்டி கிழக்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து மூத்ததம்பி அவர்கள் 26-07-2013 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற முத்துப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
நடராஜா(பிரான்ஸ்), சிவராஜா(லண்டன்), சிறீஸ்கந்தராஜா(லண்டன்), தர்மராஜா(பிரான்ஸ்), செல்வராஜா(பிரான்ஸ்), தவமணிதேவி(இலங்கை), துரைராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இந்திராணி, சரஸ்வதி, திலகேஸ்வரி(கலா), ஜீவா, றஞ்சனதேவி, யோகநாதன்(யாழ். சுகாதாரத் திணைக்களம்), இந்துராணி ஆகியோரின் அன்பு மாமனும்,
சிதம்பரநாயகி, இரத்தினசபாபதி, சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு மற்றும் தங்கமலர், மனோரஞ்சிதமலர் ஆகியோரின் சகலனும்,
ஜெனீத்தா, பகீரதன், சோபிகா, ரோகினி, சுரேகா, சிந்துஜா, கெளசல்யா, சாருஜன், சராஜகன், அஸ்வின், ஆரணியா, அபிராம், அஸ்வினி, கார்த்திபன், சங்கவி, துஷாந், துர்க்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை 29-07-2013  திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில்  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், மருமகன்
தொடர்புகளுக்கு
நடராஜா — பிரான்ஸ்
தொலைபேசி: +33141950799
செல்லிடப்பேசி: +33751573760
சிவராஜா — பிரித்தானியா
தொலைபேசி: +442035838901
செல்லிடப்பேசி: +447837784469
சிறீஸ்கந்தராஜா(சிறீ) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447572692240
தர்மராஜா — பிரான்ஸ்
தொலைபேசி: +33148947769
செல்லிடப்பேசி: +3365266755
செல்வராஜா — பிரான்ஸ்
தொலைபேசி: +33143083701
செல்லிடப்பேசி: +33616365677
யோகநாதன் தவமணிதேவி — இலங்கை
தொலைபேசி: +94212230068
செல்லிடப்பேசி: +9477704916
துரைராஜா(துரை) — பிரித்தானியா
தொலைபேசி: +442084291898
செல்லிடப்பேசி: +447988860710

சனி, 27 ஜூலை, 2013

கறோக்கே பாடகர் பாபாயே அவர்கள்


 
நிலவு ஒரு பெண்ணாகி என்ற பாடலோடு உங்களை இணையத்தினூடக சந்திக்கும் பாபாயே அவர்கள்.. ஆனைக்கோட்டை மண்ணுக்கு புகழ் சேர்க்கும் புகழ்பெற் கறோக்கே பாடகர் பாபாயே அவர்கள் யேர்மனி கம்நகரில் வசித்து வருபவர் நீண்டநாட்களாக கறோக்கே இசையில் பல பாடல்களை பாடிவருபாவர் மேடை நிகழ்ச்சி ஒலிபரபப்பாளர் இவர் போன்ற சிறந்த , கலைஞர்கள் எங்கிருந்தாலும் உயர்வுற எமது நவற்கிரி இணையங்களின் வாழ்த்துக்களும் உரித்தாகுக

காந்தக் குரலோன் கணேஸ் பாடிய பக்திப் பாடல்

காந்தக் குரலோன் கானமணி கணேஸ் அவர்கள் பாடகன் மட்டு மல்ல பண்பாளர் பக்திமான் தான் செய்யும் கருமங்களில் நேர்த்தியாகச் சிறப்பாகச் செய்வது மட்டுமல்ல ஆலயங்களுக்கு பணிசெய்பவர் அப்படிப்பட்ட பக்தரும் கலைஞரும் ஆன கணேஸ் அவர்கள் யேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் அவர்கள் உபயமான பூங்காவனத் திருவிழா சிறப்புற நடை பெற்றது அத்தருணம் அவர் தனது கானக்குரலால் பாடல்கள் பாடி வந்திருந்த பக்தர்களை மகிழ்வித்தார் ,இவருக்குஎமது நவற்கிரி இணையங்களின் வாழ்த்துக்களும் உரித்தாகுக அதில் ஒரு பாடலை இங்கே
 காணலாம்

 

ஞாயிறு, 21 ஜூலை, 2013

சுவெற்றா ஸ்ரீ கனக துர்க்கை கொடியோற்ற உற்சவம் !

                                
 
 சுவெற்றா ஸ்ரீ கனக துர்க்கை ஆலயத்தின் கொடியோற்ற விபரனம் ஆண்டு தோறும் அலங்கார உற்சவத்தை காணும் அம்மன் இந்த அண்டு பதின்ஐந்தாவது உற்சவத்தை காண உள்ளா அத்தருனம் அடியார்கள் வந்து தரிசித்து அம்மன் திரு அருளை பொற வருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள் கடவுள் செயல் அன்றி ஏது இந்த வாழ்வு கருணை தெய்வம் அவள் அடியை நாடு தொழு தினம் தொழு பிணிகள் தீரும் துன்பம் அகலும் தொழுது வாழ்வோம் துன்பம்தீர:

திங்கள், 15 ஜூலை, 2013

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர் கட்டுமான தகவல் !!!

 
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர் கட்டுமான தகவல் ஒன்று
1சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர் தேவஸ்த்தான கட்டுமான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது  அதற்க்கான பங்களிப்பை  புலம் பெயர்வாழ் சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் அடியார்களிடம்  வைரவர் நிர்வாகம்  வேண்டி நிற்கின்றது.  சுவிஸ் மற்றும்  சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் மெய்யடியார்களிடமும்  பங்களிப்பை பெற்று  ஞான வைரவர்  நிர்வாகத்தினரிடம் உரிய நேரத்தில் உதவிடும் நோக்குடன் ஏற்கனவே ஒரு வழி செய்யப்பட்டு இணையத்திலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
 .இருந்தும் நாம் விரும்பும் வகையிலும் விரைவும் இல்லாத காரணத்தாலும் எம் கிராமத்து இளைஞர்களின் முன்னெடுப்பை தொய்வின்றி அவர்கள் தொடர்பதற்க்காக்கவும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் தனது இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் பொறுப்பெடுத்து நிதியினையும் பெற்று வருகின்றது  .வரும் நாட்களில் நாம் நேரடியாகவும் தொலை பேசியூடாகவும் எம்மால் முடிந்தவரை தொடர்புகொள்வோம் .ஸ்ரீஞான வைரவ மெய்யடியார்கள் உங்களால் முடிந்த பங்களிப்பை செலுத்தி கட்டுமான பணியினை விரைவுபடுத்துங்கள் .
விரைவான தொடர்புகளுக்கு :-
                        அருண் :079 671 07 88
                        விமல் : 078 603 37 05                         
இதுவே சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் என்ற நாமத்துடன் முன்னெடுக்கும் இறுதிப்பணி புனிதப்பணியும் கூட .


செவ்வாய், 9 ஜூலை, 2013

பிறந்தநாள் வாழ்த்து: செல்வி சப்தனா


இணுவிலை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு/திருமதி பிரபாகரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி சப்தனா இன்று (09.07.13)தனது ஒன்பதாவது பிறந்தநாளை  இல்லத்தில் இனிதே கொண்டாடுகின்றார்.
இவரை  அன்பு அப்பா பிரபாகரன் ,அம்மா சுதர்சினி ,அண்ணா வர்னுகன் ,மற்றும் உறவினர்கள் நண்பிகள் ,குடும்ப .உறவுகளுடன் இந்த நவற்கிரி இணையங்களும்  நோய் நொடியின்றி, பல்கலைகளும் கற்று பார் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம்  வாழ்க வளர்க வென  வாழ்த்துகின்றோம்.

திங்கள், 8 ஜூலை, 2013

இறப்புத்தகவல், (காந்தன்.சுவிஸ்}

 
                                               திரு அமிர்தலிங்கம் சிறிஸ்கந்தராசா
                                                                  (காந்தன்)
                                    பிறப்பு : 3 பெப்ரவரி 1973 — இறப்பு : 5 யூலை 2013
யாழ் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பாசல் Arlesheim ஐ வதிவிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் சிறிஸ்கந்தராசா அவர்கள் 05.07.2013 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அமிர்தலிங்கம் புஸ்பராணி தம்பதிகளின் மூத்தமகனும், திருச்செந்தூர்நாதன் காலஞ்சென்ற இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுபாஜினி(சுபா) அவர்களின் அன்புக் கணவரும்,
சியானுஜா, சிகானி ஆகியோரின் ஆசை தந்தையும்,
சிறிதரன்(தரன்-சுவிஸ்), கலாமதி(மதி-கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருசாளினி(சாலா-சுவிஸ்), கிருபானநந்தன்(ரகு-கனடா), சுதாகரன்(சுதா- பிரான்ஸ், சுதாஜினி(சுஜி-சுவிஸ்), சுகிர்தா, சுகந்தன், சுதர்சன், சுகன்யா, சுதர்சினி, சுபாஸ்கரன் ஆகியோரின் அன்பு  மைத்துனரும்,
அபிஷா, அபிரா, அமீனா, அபர்னா, எழிலரசி, ஓவியன் ஆகியோரின் அன்பு  மாமாவும்,
ஜெகஸ்திகா, எனோக், மகிழினி, கனிமொழி, திசானி ஆகியோரின் அன்புப்  பெரியப்பாவும்,
காலஞ்சென்ற சந்திரலிங்கம்(சுவிஸ்), விமலாம்பிகை(பிரான்ஸ்), விஜயகிரீபன்(கல்மடு), அருள்ரூபன்(இடைக்காடு), ரமணன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சர்மினி, சுஜீபன், சிந்துசன் ஆகியோரின் அன்புச்  சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் Friedhof Bromhübel, Dornachweg 7, 4144 Arlesheim எனும் முகவரியில் தினமும் பி.ப 3:00மணி முதல் பி.ப 6:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்படும்.
இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787641952
தரன்(சகோதரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41767642175
விஜயானந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799383428
மயூரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763241079
மனைவி(வீடு) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41617018433

வெள்ளி, 5 ஜூலை, 2013

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாக அறிவித்தல்கள்


சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகத்தினரின் கலந்துரையாடல் வரும் (07.07.13)ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது .நிர்வாக அங்கத்தவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர்  ஆலைய கட்டுமான பணிக்கான பங்களிப்பு ,வன்னிச்சிறார்களுக்கான அடுத்த கட்ட  பங்களிப்பு ,சிறுப்பிட்டி ஒன்றியத்தின்  வருங்கால திட்டமும் செயல் பாடுகளுக்கான விரிவாக்கம் ,மற்றும்  சிறுப்பிட்டி கிராமத்தின் நலன்சார்ந்த மேலதிக விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டும்.
நிர்வாகக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளே வழமை போல்  இறுதியானது. உறுதியுடன்  நடைமுறைப்படுத்தப்படும்.

வியாழன், 4 ஜூலை, 2013

பிறந்தநாள் வாழ்த்து:செல்வன் வேனுயன்


சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் கொலண்டை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வன் வேனுயன். இன்று (04.07.13)தனது இரண்டாவது பிறந்தநாளை தனது இல்லத்தில் அக்கா
யானுகா தங்கை ஸ்ருதிகாவுடன் வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றார். கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துபவர்கள் அன்பு  அப்பா அம்மா சிறுப்பிட்டியில் வசிக்கும் அப்பம்மா ..ஜேர்மனில் வசிக்கும் அம்அப்பா அம்மம்மா . சிறுப்பிட்யில் வசிக்கும் மாமா .அத்தை மச்சாள்மார்…
ஜேர்மனில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அக்காமார் . கனடாவில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணாமார் அக்கா . சுவிசில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணர்மார் .. கனடாவில் வசிக்கும் மாமா அத்தை மச்சாள் மார் …..லண்டனில் வசிக்கும் மாமா மாமி மச்சான் மச்சாள், லண்டனில் வசிக்கும் மாமா மற்றும் அனைத்து உறவுகளும் வேனுயனை  வாழ்த்துகின்றனர்.
செல்வன் வேனுயனை எமது நவற்கிரிஇணையங்களும்   நோய் நொடியின்றி, பல்கலைகளும் கற்று பார் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்க வளர்க வென வாழ்த்துகின்றோம்.{காணொளி}
   

செவ்வாய், 2 ஜூலை, 2013

எமது ஈழத்துக் கலைஞர்கள் கௌரவிப்பு!


வெற்றா இசைப்பேளையில் பாடல்கள் எழுதிய பாடிய கலைஞர்களைத் தயாரிப்பாளர்களை ஊடகம் சார்த சார்பில் சுவிஸ‌் சிறுப்பிட்டி இணையம் , தொலைக்காட்சி சார்பில் Gtv யையும் , ஊடகத்துறை சார்பில் மணிக்குரல் தந்த முல்லைமோகனையும், தயாரிப்பாளர்களாக கணேஸ‌் தம்பதியிரையும் ,கவிஞர்கள் வரிசையில் சிவநேசன்,கந்தசாமி, சுதந்தினி . திருமதி தேவராசா, திருமதி அகிலா.ரவி,பாபு என க் சுவெற்றா கனகதுர்க்கை ஆலயம் நிர்வாகத்தினர் ஊக்கிவித்து அவகளுக்கு கௌரவிப்பு நடை பெ ற்றுள்ளது இந்த இசைபேளை குறுகிய நாட்களில் தயாரிக்கப்பட்டது மட்டுமல்ல இதில் பதினெரு புதிய பாடகர்களையும் மூன்று புதிய பாடல் ஆசியர்களையும் அறிமுகம் செய்துள்ளது மட்டுமல்ல இளைஞர்களை சிறுவர்களை களம் இன்றி இருந்த பாடல் ஆசிரியர்களை முன்கொண்டு வந்ததற்கு காரணம் கனகதுர்கா என்று தான் கூறவேண்டும் அத்தோடு தயாரிப்பு அதற்க்கு முன்வந்த கணேஸ‌் தம்பதிகளுக்கும் கலைஞர்கள் சார்பில் நன்றிகள் மிகுதி உள்ளே சென்று பார்த்து உங்கள் கருத்துக்களை உரிமையோடு தாருங்கள் நன்றியுடன்எஸ‌்.ரி.எஸ‌் நிர்வாகத்தினர் {காணொளி}

மாதா வின் பாடல்கள்