18

siruppiddy

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

அமரர் திருமதி சுப்பிரமணியம்,பூபதியின் கண்ணீர் அஞ்சலி

                                          அமரர் திருமதி சுப்பிரமணியம்,பூபதி
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜேர்மனி.டோட்முன்ட் நகரை வதிவிடமாகவும் கொன்ட எங்கள்அண்ணை பூபதிக்கு நம் எல்லோரின் கண்ணீர் அஞ்சலி ,, சமர்பணம் "" 
ஆனித்திங்களில் சிறுவையூர் பெற்ற பூபதித்தாயே சித்திரைத்திங்களில் சிவபதம் அடைந்தீரோ மரணம் உமக்கென்றும் நல்லமைதிதானன்றோ ஆனாலும் உறவுகள் தவிப்பு தாங்கலையே தாயே மறைந்தீரோ

சிறுப்பிட்டிமண்ணில்பூத்த நல்ல பூபதித்தாயே சுப்பிரமணியவரின் மணவாட்டி நீர் பெற்றதும் பிள்ளைகள் ஆறு ஆறுமுகன் அருளன்றோ இன்று வாழ்ந்தது போதுமென்று விண்ணுலகம் சென்றீரோ

சாமி தேவா ஜெய தவா உனை காவத்தான் பெற்றீரோ பெற்றமக ஸ்வரிகள் துவண்டே போனாரே பேரப்பிள்ளைகள்தாம் கண்ணீரில் துடித்தனரே உற்றார் உறவினரும் தவிக்கவிட்டு தாயே மறைந்தீரோ

சீரும் சிறப்பும் சிறந்தே ஜேர்மன் வரை வாழ்ந்தவரே அன்பும் பாசமும் அனைவருடனும் அளவின்றி பகிர்ந்தவரே வாழந்;தது போதுமென வையகம்சென்றீரோ இல்லை சுப்பிரமணியவரின் தனிமைபோக்க தாயே சென்றீரோ பூபதித்தாயே தாயே

பிறப்பும் இறப்பும் இறைவன் கணக்கு புரிந்தது ஊர்கூடி ஒலிக்க அழுதிட்டு பேரினை நீக்கி பிணமென பெயரிட்டு ஈமைக்கிரியை செய்து சுட்டிட்டு வந்தாரோ நீரில்முழ்கி நினைப்பிழந்து வாழ்வோராக எல்லாம் சிவமயமே

ஏற்றகடமை யாவும் செய்து இறை இட்ட கடமையேற்று நிறைவுடன் அமரரான பூபதிஅம்மா  சிவபத பெருவாழ்வு வாழ்வாய் அம்மா அன்புத்தாயே உங்கள் ஆத்மா சாந்தியடைய இரைவனைப்பிராத்திக்கின்றோம் **ஓம் சாந்தி !சாந்தி !!சாந்தி !!! ஆற்றணாத்துயரத்துடன் வாடும் பிளைகள் உற்றார்  உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்

 தகவல்கள்""-சுவிஸ் -ஜேர்மன்- நண்பர்கள் –
சிறுப்பிட்டிமேற்கு - நவற்கிரி உறவுஒன்றியம் –  நவற்கிரி .கொம் -சிறுப்பிட்டிநெற் -நிலாவரை .கொம்- ஆணைக்கோட்டை.கொம் - தாவடி.கொம்-  எஸ்.ரி.எஸ்.ஸ்டுடியோ .கொம்- நீர்வேலி.கொம்-  தரவு .கொம் உழவன் நெற் ,  ஈழம் .கொம்  ஆகிய உறவு இணயங்கள் சார்பாக,,,, !!அன்பேசிவம்!!! 

சனி, 27 ஏப்ரல், 2013

ஜன்னலுக்குள் மாட்டிக் கொண்ட இளைஞர் பரிதாப,,


சூரிச் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் படித்து வந்த போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 18 வயது இளைஞர், மாடியின் கண்ணாடிச் சன்னலில் மாட்டிக் கொண்டு மரணமடைந்துள்ளார்.
ஒரு சன்னலுக்கு வெளியே ஒருவரது தலை தொங்கிக்கிடப்பதைக் கண்டு தெருவில் நடந்து சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து உடனே பொலிசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இத்தகவல் அறிந்ததும் பொலிஸ் படையும், மீட்புப் படையும் சம்பவ இடத்திற்கு விரைந்தது. ஜன்னலின் கண்ணாடிக்குள் மாட்டிக்கொண்டிருந்த அவரது உடலை எடுத்து மருத்துவமனைக்கு சவப் பரிசோதனைக்காகக் கொண்டு சென்றனர்.
மரணத்துக்கான சூழலும், காரணமும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

முல்லைமோகனின் பிறந்தநாள் வாழ்த்து,

இன்று{22/04/13} பிறந்தநாளைக்கொண்டாடும் திரு. முல்லைமோகன் அவர்களுக்குபிறந்தநாள் வாழ்த்துக்களே
இதயம் வரை நனைகிறதே - இதைப்
போல என்றும் இணைந்திடவே விழா காணுமே நெஞ்சமே!
  ஊடக நன்பர்களின் இனிய பிறந்தநாள்நல் வாழ்த்துக்கள்.
 ஊடகக் கலைஞனாய்
 உள்ளத்தைக் கவர்ந்தவரே.
 உள்ளன்பு கொண்டு உறவாடி மகிழ்பவரே.
 உமக்கு நாம் வாழ்த்துக் கூற இது வல்ல நேரம்
 என்பது எமக்கும் தெரியும

 ஆனாலும் கலைஞனை கலைஞர்கள் எப்படி வாழ்த்தாமல் இருக்கமுடியும்
 அதனால் வருடம் ஓரு நாள் வரும் வாழ்த்தை
 நாம் வாழ்த்துகிறோம். வாழ்த்துபவர்கள்
 ஈழத்து கலைஞர்வட்டதினருடன் இணைய குடும்பத்தினரும் குடும்ப உறவுகளும்,,{காணொளி}
 

சனி, 20 ஏப்ரல், 2013

சிறுபிட்டி மேற்கு ஒன்றியத்தின் முக்கிய அறிவித்தல்

எமது சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகத்தினரே எமது கிராமத்தின் அத்தனை முன்னெடுப்புக்களுக்கும் தனது ஆதரவையும் ஆலோசனைகளையும் தனது பங்களிப்புக்களையும் கிராமத்தின் ஒற்றுமைக்கு முன்னுருமை கொடுத்து செயல்படும் சிறுப்பிட்டி நெற் இணைய நிர்வாகத்திலும் தனது பங்களிப்பை செய்து சிறுப்பிட்டிஒன்றியத்திற்கும் கிராமத்துக்கும் பாடல்களை தானாகவே  இயற்றி இசை அமைத்து காணொளி வடிவமைத்த  அன்பு உறவு  எமது ஈழத்து இசை தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்களின் தாயாரின் இறப்புத்துயர் காரணமாக எமது சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய கூடல் (20:04:13 சனிக்கிழமை )தவிர்க்கப்பட்டுள்ளது.

பிறிதொரு திகதி பின்னர் அறிவிக்கப்படும்.நியாயத்தின் முன் நடுநிலைமை இல்லை என்பதற்கு அமைய நியதுடன் வாழ்ந்து வரும் தேவராசா அண்ணாவின் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்/சிறுப்பிட்டி இணையம்

விநாயகன வினை தீர்ப்பவனே பாடல்

நாம் முதலில் வணங்கும் தெய்வம் விநாயகர் அவரின்புகழ் பாடும்ஓர் அற்புதப்பாடல் [காணொளியில்]

மாதா வின் பாடல்கள்