18

siruppiddy

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

அமரர் திருமதி சுப்பிரமணியம்,பூபதியின் கண்ணீர் அஞ்சலி





                                          அமரர் திருமதி சுப்பிரமணியம்,பூபதி
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜேர்மனி.டோட்முன்ட் நகரை வதிவிடமாகவும் கொன்ட எங்கள்அண்ணை பூபதிக்கு நம் எல்லோரின் கண்ணீர் அஞ்சலி ,, சமர்பணம் "" 
ஆனித்திங்களில் சிறுவையூர் பெற்ற பூபதித்தாயே சித்திரைத்திங்களில் சிவபதம் அடைந்தீரோ மரணம் உமக்கென்றும் நல்லமைதிதானன்றோ ஆனாலும் உறவுகள் தவிப்பு தாங்கலையே தாயே மறைந்தீரோ

சிறுப்பிட்டிமண்ணில்பூத்த நல்ல பூபதித்தாயே சுப்பிரமணியவரின் மணவாட்டி நீர் பெற்றதும் பிள்ளைகள் ஆறு ஆறுமுகன் அருளன்றோ இன்று வாழ்ந்தது போதுமென்று விண்ணுலகம் சென்றீரோ

சாமி தேவா ஜெய தவா உனை காவத்தான் பெற்றீரோ பெற்றமக ஸ்வரிகள் துவண்டே போனாரே பேரப்பிள்ளைகள்தாம் கண்ணீரில் துடித்தனரே உற்றார் உறவினரும் தவிக்கவிட்டு தாயே மறைந்தீரோ

சீரும் சிறப்பும் சிறந்தே ஜேர்மன் வரை வாழ்ந்தவரே அன்பும் பாசமும் அனைவருடனும் அளவின்றி பகிர்ந்தவரே வாழந்;தது போதுமென வையகம்சென்றீரோ இல்லை சுப்பிரமணியவரின் தனிமைபோக்க தாயே சென்றீரோ பூபதித்தாயே தாயே

பிறப்பும் இறப்பும் இறைவன் கணக்கு புரிந்தது ஊர்கூடி ஒலிக்க அழுதிட்டு பேரினை நீக்கி பிணமென பெயரிட்டு ஈமைக்கிரியை செய்து சுட்டிட்டு வந்தாரோ நீரில்முழ்கி நினைப்பிழந்து வாழ்வோராக எல்லாம் சிவமயமே

ஏற்றகடமை யாவும் செய்து இறை இட்ட கடமையேற்று நிறைவுடன் அமரரான பூபதிஅம்மா  சிவபத பெருவாழ்வு வாழ்வாய் அம்மா அன்புத்தாயே உங்கள் ஆத்மா சாந்தியடைய இரைவனைப்பிராத்திக்கின்றோம் **ஓம் சாந்தி !சாந்தி !!சாந்தி !!! ஆற்றணாத்துயரத்துடன் வாடும் பிளைகள் உற்றார்  உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்

 தகவல்கள்""-சுவிஸ் -ஜேர்மன்- நண்பர்கள் –
சிறுப்பிட்டிமேற்கு - நவற்கிரி உறவுஒன்றியம் –  நவற்கிரி .கொம் -சிறுப்பிட்டிநெற் -நிலாவரை .கொம்- ஆணைக்கோட்டை.கொம் - தாவடி.கொம்-  எஸ்.ரி.எஸ்.ஸ்டுடியோ .கொம்- நீர்வேலி.கொம்-  தரவு .கொம் உழவன் நெற் ,  ஈழம் .கொம்  ஆகிய உறவு இணயங்கள் சார்பாக,,,, !!அன்பேசிவம்!!! 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்