18

siruppiddy
நினைவஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 மார்ச், 2023

நினைவஞ்சலி 1ஆம் ஆண்டு அமரர்.திருமதி குமாரசாமி தவரத்தினம் 04.03.23

தோற்றம்.13 06 1931-மறைவு-04 03 2022
யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும்  சிறுப்பிட்டியில்மேற்கில் வசித்தவரும் தற்போது ஊரெழுவை வாழ்விடமாக கொண்டிருந்த  திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களின்
அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் .04.03.2023.சனிக்கிழமை .இன்று  . 
 அன்பு மனைவியும் காலஞ்சென்ற லிங்கம் மற்றும் ஈசன்  சிவா விமலன் நகுலன் ஜெந்தி   வசந்தி சாந்தி சுகந்தி ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள்>>>முதலாம் ஆண்டு 
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்

இந்த இணையத்தின் கண்ணீர் அஞ்சலி
    அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
தகவல்: குடும்பத்தினர்


 

வியாழன், 7 ஜனவரி, 2021

அமரர் தம்பு குமாரசாமி 26ம் ஆண்டு நினைவஞ்சலி: 08-01-2021

யாழ்.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்  தம்பு குமாரசாமி அவர்களின் இருபத்தி ஆறவது ஆண்டு  நினைவு நாள் 
-திதி- (08-01-2021)இன்று அவரது இல்லத்தில் 
நடைபெறும் 
அன்னாரின் நினைவு நாளாகிய இன்று தாயத்தில் ஆதரவற்றோர்ஓர்  இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது 
எமக்கு  உயிர் தந்தஉங்கள்  உயிா் மனறந்து இருபத்தி ஆறவது ஆண்டுகள் ஆகியும் எனது மனதில் வாழூம் தெய்வத்தின் 
எங்கள் வாழ்வில் ஒளியேற்றி
26வது ஆண்டு போயும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!!
எம்மை விட்டேகி  இருபத்தி ஆறவது ஆண்டு  போனதையா!
ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!!
தாங்கியே பிடிக்க தலைவனின்றி
தவிக்கின்றோம் ஐயா!
வாங்கியே நீ வைத்தவற்றில்
உன் வண்ணவதனம் கண்டு
ஒங்கியே அழுது ஒவ்வொரு நாளும்
இருக்கின்றோம் ஐயா!
உறவி தந்து! உணர்வு தந்து!!
எம்மோடு ஒன்றாய் இருந்த உத்தமனே!
உன்னால் விளைந்த வித்துகள்
இப்போ விருட்சமாய் வெளிவரும் வேளையில்
உன் வெப்பம் தணிக்கும் இவ் விருட்சத்தை விலக்கி
விண்ணுலகு ஏன் தான்
விரைந்திட்டாய் ஐயா!
வளங்கள் எதுதான் வாழ்வில் இருந்தாலும்
வாழ்க்கை எமக்குத்தந்த வள்ளல் நீர்
வாணுலகு போய் இருபத்தி ஆறவது ஆண்டு வந்தும்
வாடிவதங்கி வாட்டமுடன்
வையமிங்கு வாழ்கின்றோம்
எங்கள்  ஐயா!
வாய்ப்புக் கிடைத்தால் வாண் விட்டு
வையம் வந்து உன் வண்ணமுகம் காட்டி
உன் கன்றுகளோடு கைகோர்த்து
களி கொள்ள மாட்டாயா எங்கள்
தலைவனே!தரணியிலே நாம் வாழ தக்க வழி காட்டி
சீராக வாழ வைத்த எங்கள் ஆரூயிர் ஐயாவே
எங்கள் உயிரோடு ஒன்றிவிட்ட உங்கள் நினைவுகள்
எங்கள் உயிருள்ளவரை நிலைத்திருக்கும் எங்கள் அன்பு ஐயா
இருபத்தி ஆறு  ஆண்டில் நினைத்து நீர் மல்கும்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை
பிரதிக்கின்றோம் ..ஓம் சாந்தி ..ஓம் சாந்தி..ஓம் சாந்தி
என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
வாழும் மனைவி, பிள்ளைகள்
,மருமக்கள் சகோதரர்கள்
தகவல் குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 27 ஜூலை, 2018

அமரர் இம்மனுவல் ஜேசுதாசன் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 28.07.18

அன்னை மடியில் : 1 சனவரி 1949 — இறைவன் அடியில் : 28 யூலை 2017
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இம்மனுவல் ஜேசுதாசன் (ஜேசன்- Management Consultant- United Nations, Geneva) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு காலம்தான் போனாலுமே 
பல்லாண்டு காலங்கள்தான் வந்தாலுமே 
ஆறாததே உங்களைப்பிரிந்த மனத்துயரமே !
அன்பு, அறிவு, கருணைக்கடல் வெள்ளம் 
அன்னைபோல அரவணைக்கும் அருமையான உள்ளம் 
இன்பத்திலும் துன்பத்திலும் ஓடிவந்து உதவும் அன்புக்கரங்கள் 
மன்னிக்கும் மனமும் சிரித்த முகமும் உமது
 சிறந்த குணங்கள்!
அம்மா, ஆச்சி, அப்புவின் அன்பு மனங்களையோ 
உங்கள் மனதில் உருவாக்கி சகோதரமாக இறைவன் தந்தது 
எமக்கெனவே வந்த அறிவின் தந்தை, உற்ற நண்பன் 
கண்களைவிட்டு மறைந்தாலும் எம்மனதில் 
என்றும் வாழும் அன்பின் தெய்வம்! 
மண்ணில் எங்கள் உயர்வின் ஆணிவேர் நீங்கள்தானே அண்ணா!
மறக்கமுடியாமல் உங்கள் பிரிவால் வாடும் 
அன்புச் சகோதரங்கள், உறவினர்கள்.
தகவல்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 31 ஆகஸ்ட், 2016

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி:அமரர் ஐயாத்துரை குணசேகரம்

சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 2 ஆண்டு நினைவஞ்சலி.
நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும்
ஞானச்செருக்கும் அவனியில்
எவருக்கும் அஞ்சாது அன்பாலும் பண்பாலும்
அனைவரையும் அரவணைத்த எம் 
அன்புத்தெய்வமே!
கண்மூடித்திறக்கும் நேரத்தில் எங்களைத்
தவிக்கவிட்டு நிரந்தரமாக பிரிந்தீர்களே
உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார்?
மீண்டும் ஒருமுறை திருமுகம் காண
உள்ளம் கிடந்து பரிதவிக்கின்றது
 அப்பா!
என்றும் நாம் மறக்கமாட்டோம்
உம்மை நினைத்தே நாமிங்கு வாழ்கின்றோம்
உத்தமரே பெற்றிடுக சாந்தி எம் வாழ்வில்
நீங்கள் இல்லை என்ற எண்ணம் எமக்கில்லை
வாழ்வீர் எம்மனதில் நாம் வாழும் காலம்வரை!
உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
அன்னாரின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்
தகவல்
சிவரூபி(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
சிவரூபி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778209039
ஸ்ரீசங்கர்(சுவிஸ்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765290200
அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் இந்த இணையமும்  நவக்கிரி,நிலாவரை இணையங்களும் இறை வனைபிராத்திக்கின்றனர் .... ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி உறவினர்கள்  நண்பர்கள் ,  
தகவல் குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி:அமரர் ஐயாத்துரை குணசேகரம்

சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும்
ஞானச்செருக்கும் அவனியில்
எவருக்கும் அஞ்சாது அன்பாலும் பண்பாலும்
அனைவரையும் அரவணைத்த எம் அன்புத்தெய்வமே!

கண்மூடித்திறக்கும் நேரத்தில் எங்களைத்
தவிக்கவிட்டு நிரந்தரமாக பிரிந்தீர்களே
உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார்?
மீண்டும் ஒருமுறை திருமுகம் காண
உள்ளம் கிடந்து பரிதவிக்கின்றது அப்பா!

என்றும் நாம் மறக்கமாட்டோம்
உம்மை நினைத்தே நாமிங்கு வாழ்கின்றோம்
உத்தமரே பெற்றிடுக சாந்தி எம் வாழ்வில்
நீங்கள் இல்லை என்ற எண்ணம் எமக்கில்லை
வாழ்வீர் எம்மனதில் நாம் வாழும் காலம்வரை!

உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள்

அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 01-09-2015 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும், இந் நிகழ்வில் கலந்துக்கொண்டு அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்குமாறும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறும் அனைவரையும் அழைக்கின்றோம்.
தகவல்
சிவரூபி(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
சிவரூபி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778209039

ஸ்ரீசங்கர்(சுவிஸ்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765290200
அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் இந்த இணையமும்  நவக்கிரி,நிலாவரை இணையங்களும் இறை வனைபிராத்திக்கின்றனர் .... ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி உறவினர்கள்  நண்பர்கள் ,  தகவல் குடும்பத்தினர்


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 6 மே, 2014

அமரர் சுப்பிரமணியம் பூபதியின் முதலாவது ஆண்டுத் திதி.

அமரர் பூபதி சுப்பிரமணியத்தின் முதலாவது ஆண்டுத் திதி. 06.05.2014.
அன்னையே உனை நினைந்து
எம்மைச்சுமந்து
ஏந்திக்காத்து இந்த
மண்ணில் தவளவிட்டதாய்
எம்மைப் பிரிந்து
சோகத்தைத்தந்தாலும்
அன்னையை சாவிலே பிரித்தாய்
 அன்னை எமைவிட்டு பரிந்ததாய்
நினைவது இல்லை
இன்றும் எம்முடன் வாழ்கிறார்
இதயத்தில் ஒன்றித்து வாழ்கிறார்
வாழ்வதில் நல்லதை கற்றுத்தந்தவர்
வாழ்கைக்கு நற் பண்பு கற்றுத்தந்தவர்
இல்லாவிட்டாலும் பிறருக்கு கொடுத்துவாழ சொல்லித்தந்தவர்
தான் வாழ்ந்த காலத்தில் கொடுத்துவாழ்ந்தவர்
அன்னை அவர் கொடுத்த பாலாலே
அறுவர் இன்று அவர் நினைவில்
அம்மா உன்னை வேண்டி நின்றோம்
பின் ஓர்பிறவி கிடைத்தாலும்
அன்னை நீயாய் வரவேண்டும்
இந்த அறுவரும் உன் மடியில்
பிறந்திடவே…வரம் தருவாயா..?
குடும்பத்னர் உறவினர்
உற்றார்  நவற்கிரி இணையங்களும்
நிலாவரை இணையங்களும்
தகவல sts ஸ்ரூடியோ.கொம்

சனி, 7 டிசம்பர், 2013

நினைவஞ்சலி:அமரர் சின்னத்தம்பி நவரத்தினம்

 சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  சின்னத்தம்பி நவரத்தினம்  அவர்களின் 2ம் ஆண்டு நினைவுதினம்இன்று
                             அன்புள்ளம் கொண்டு நீ பண்பாய் பழகிடுவாய்
                                        அமைதியாய் என்றும் பாசமாய் பேசிடுவாய்.
                                                 வந்தாரை வரவேற்க்கும் வள்ளல் நீ

                                                    வற்றாத உன் வள்ளல் குணமண்ணா.
                                                     மங்கையின் அன்பு மணாளன் நீ
                                                     பிள்ளைகளின் ஆசை தந்தை நீ
                                                    உன் உறவுக்கு நல்ல சொந்தம் நீ
                                                  ஊரில் எல்லோருக்கும் என்றும் நண்பன் நீ.
                                                      நீ மறந்து ஒராண்டு போனதென்ன.
                                               உனை நினைத்து நெஞ்சம் துடிப்பது என்ன
                                                ஈராண்டென்ன ஆண்டுகள் ஆகட்டும் ஆயிரம்
                                                       மறவோம் நாம் உன் அன்பு முகம்.
                                 உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்…
                                          ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி…!!!
நவரத்தினமண்ணாவின் ஒராண்டு நினைவு நாளில் அவரது நினைவில் தவித்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை நவற்கிரி சிறுப்பிட்டி இணையம் தெரிவித்துகொள்கின்றது.
 

மாதா வின் பாடல்கள்