18

siruppiddy
அகாலமரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகாலமரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 ஜனவரி, 2017

அகாலமரணம் திருமதி உமாதேவி தெய்வேந்திரன் திருமதி பாமினி கைலேசன் செல்வன் பரத் கைலேசன்

திருமதி உமாதேவி தெய்வேந்திரன்
பிறப்பு இறப்பு
20 டிசெம்பர் 1951 22 டிசெம்பர் 2016
யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட உமாதேவி தெய்வேந்திரன் அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம்
 அடைந்தார்.
அன்னார், கனகரத்தினம்(சீனித்துரை- கொக்குவில்) விஜெயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், வினாசித்தம்பி(இணுவில் தெற்கு) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தெய்வேந்திரன் அவர்களின் அன்பு
 மனைவியும்,
காலஞ்சென்ற பாமினி, அபினா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சதாரூபவதி, சுலோசனாதேவி, தனேஸ்வரி, காலஞ்சென்ற சிவகுமார், சாந்தகுமார்(லண்டன்), நிரஞ்சனாதேவி, ராஜ்குமார், நிகிலா, ரவிக்குமார், ரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கைலேசன், குனேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிருசா, காலஞ்சென்ற பரத், றியா, சரீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
பிறப்பு   இறப்பு
19 ஒக்ரோபர் 1977   22 டிசெம்பர் 2016
திருமதி பாமினி கைலேசன்
யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா, நியூசிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாமினி கைலேசன் அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் 
அடைந்தார்.
அன்னார், தெய்வேந்திரன், காலஞ்சென்ற உமாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தனபாலசிங்கம்(திருநெல்வேலி), கமலபூசணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கைலேசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கிருஷா, காலஞ்சென்ற பரத் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அபினா குனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெளசி, குணஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும்
 ஆவார்.
பிறப்பு   இறப்பு
19 ஓகஸ்ட் 2011   22 டிசெம்பர் 2016
செல்வன் பரத் கைலேசன்
நியூசிலாந்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரத் கைலேசன் அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தெய்வேந்திரன், காலஞ்சென்ற உமாதேவி, காலஞ்சென்ற தனபாலசிங்கம்(திருநெல்வேலி), கமலபூசணி ஆகியோரின்
 அன்புப் பேரனும்,
கைலேசன், காலஞ்சென்ற பாமினி தம்பதிகளின் அன்பு மகனும்,
கிருஷா அவர்களின் அன்புச் சகோதரரும்,
கெளசி, குணஜி ஆகியோரின் அன்பு மருமகனும்,
அபினா, குனேந்திரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் 
ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்

மாதா வின் பாடல்கள்