18

siruppiddy

வியாழன், 7 ஜனவரி, 2021

அமரர் தம்பு குமாரசாமி 26ம் ஆண்டு நினைவஞ்சலி: 08-01-2021

யாழ்.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்  தம்பு குமாரசாமி அவர்களின் இருபத்தி ஆறவது ஆண்டு  நினைவு நாள் 
-திதி- (08-01-2021)இன்று அவரது இல்லத்தில் 
நடைபெறும் 
அன்னாரின் நினைவு நாளாகிய இன்று தாயத்தில் ஆதரவற்றோர்ஓர்  இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது 
எமக்கு  உயிர் தந்தஉங்கள்  உயிா் மனறந்து இருபத்தி ஆறவது ஆண்டுகள் ஆகியும் எனது மனதில் வாழூம் தெய்வத்தின் 
எங்கள் வாழ்வில் ஒளியேற்றி
26வது ஆண்டு போயும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!!
எம்மை விட்டேகி  இருபத்தி ஆறவது ஆண்டு  போனதையா!
ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!!
தாங்கியே பிடிக்க தலைவனின்றி
தவிக்கின்றோம் ஐயா!
வாங்கியே நீ வைத்தவற்றில்
உன் வண்ணவதனம் கண்டு
ஒங்கியே அழுது ஒவ்வொரு நாளும்
இருக்கின்றோம் ஐயா!
உறவி தந்து! உணர்வு தந்து!!
எம்மோடு ஒன்றாய் இருந்த உத்தமனே!
உன்னால் விளைந்த வித்துகள்
இப்போ விருட்சமாய் வெளிவரும் வேளையில்
உன் வெப்பம் தணிக்கும் இவ் விருட்சத்தை விலக்கி
விண்ணுலகு ஏன் தான்
விரைந்திட்டாய் ஐயா!
வளங்கள் எதுதான் வாழ்வில் இருந்தாலும்
வாழ்க்கை எமக்குத்தந்த வள்ளல் நீர்
வாணுலகு போய் இருபத்தி ஆறவது ஆண்டு வந்தும்
வாடிவதங்கி வாட்டமுடன்
வையமிங்கு வாழ்கின்றோம்
எங்கள்  ஐயா!
வாய்ப்புக் கிடைத்தால் வாண் விட்டு
வையம் வந்து உன் வண்ணமுகம் காட்டி
உன் கன்றுகளோடு கைகோர்த்து
களி கொள்ள மாட்டாயா எங்கள்
தலைவனே!தரணியிலே நாம் வாழ தக்க வழி காட்டி
சீராக வாழ வைத்த எங்கள் ஆரூயிர் ஐயாவே
எங்கள் உயிரோடு ஒன்றிவிட்ட உங்கள் நினைவுகள்
எங்கள் உயிருள்ளவரை நிலைத்திருக்கும் எங்கள் அன்பு ஐயா
இருபத்தி ஆறு  ஆண்டில் நினைத்து நீர் மல்கும்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை
பிரதிக்கின்றோம் ..ஓம் சாந்தி ..ஓம் சாந்தி..ஓம் சாந்தி
என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
வாழும் மனைவி, பிள்ளைகள்
,மருமக்கள் சகோதரர்கள்
தகவல் குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்