எமது கிராமம் நல்ல நீர்வளம் நிலவளத்தை மட்டும் தரவில்லை அதனூடாக அந்த மண் எம்மை அன்னிய தேசத்தில் இருந்து சிந்திக்க வைக்கும் வேளையில் நல்ல மாகான்களையும் நற்குணம் கொண்டு செயல் வடிவம் கொடுத்த மனிதர்களையும் சிந்தனை கொள்ள வைத்திருக்கின்றது.
அந்தவகையில் சி,வை தாமோதரம்பிள்ளை
காலத்தில் இருந்து சிறுப்பிட்டி இசைத்தென்றல் தேவராசா அவர்கள் மட்டுமே உள்ள கால வெளியில் உள்ளவர்களில் ஒரு சிலரையே இந்த இணையம் பதிவிட்டுள்ளது.அந்த வகையில் இன்றுள்ள பல கலைஞர்களில்
மூத்த கலைஞர்களில் ஒருவரான ஊரில் குழந்தை அண்ணா என்று அழைக்கப்படும் திரு தெய்வேந்திரம் அவர்களை பதிவேற்றுகின்றது. இந்த கலைஞன் எமது கிராமம் மட்டுமன்றி யாழ் மாவட்டத்தில் பல கிராமங்களில் பலமுறை மேடை நாடகங்களை அரங்கேற்றியவர் மட்டுமல்லாது பாடும் திறனும் உள்ளவர்.
பல கலைஞர்களையும் உருவாக்கிய பெருமை இவரையே சாரும். இன்றும் இவர்வழி வந்தவர்கள் கலைத்தகமையுடன் நிலத்திலும் புலத்திலும் வாழ்கின்றனர்.இன்று யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் இவர் அங்கும் தனது ஆழுமையைத்தொடர்ந்தார்.
அந்வகையில் இவரால் பல நாடகங்கள் மேடை ஏறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கலைஞனுக்கு தான் கற்றவற்றை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்பது அதை இவர் தொடற்சியாகவே செய்து வந்தார் தன் புகளாரம் விரும்பாது வாழும் இக்கலைஞனை
இப்பதிவில் ஒரு புகைப்படம் கூட பதிவிட முடியாமல் செய்துள்ளது. இவர்பற்றிய ஆக்கம் தொடரும்….(மேலதிக தகவலோ புகைப்படங்களோ உள்ள உறவுகள் தந்துதவலாம் உங்கள் நினைவுகளுடன்..infosiruppiddy@gmail.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக