18

siruppiddy

செவ்வாய், 9 டிசம்பர், 2014

மரண அறிவித்தல்: திரு:செல்வரத்தினம்(07.12.14 )

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த   திரு  செல்வரத்தினம் அவர்கள் இன்று   ஞாற்றுக்கிழமை( 07.12.14) காலமாகி விட்டார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.   அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது உறவுகளுக்கு  சிறுப்பிட்டி இன்போ இணையம்  ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்திபெற இறைவனை பிரார்த்திக்கின்றோம் ...

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

மரண அறிவித்தல்:வைரமுத்து சரவணமுத்து(05.12.14)

சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சரவணமுத்து  (05.12.2014) வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான வைரமுத்து சிவகாமசுந்தரி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், மகேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், சின்னப்பிள்ளை, குமாரசாமி, மாசிலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,  சுப்பிரமணியம், யோகரத்தினம் ஆகியோரின்...

சனி, 27 செப்டம்பர், 2014

மரண அறிவித்தல்:சின்னையா வைத்திலிங்கம்

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னையா  வைத்திலிங்கம் அவர்கள்  இன்று  காலை காலமானார் .அன்னாரின் இறுதிக்கிரியை இன்று  24-09-2014 புதன்கிழமை  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இத்தகவலை உற்றார் உறவினர்களுக்கு அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா சோதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகம்மாவின் (பூரணம்) அன்புக்...

வியாழன், 10 ஜூலை, 2014

இராசையா நவரட்ணராஐா அவர்களின் பூதவுடல் அடக்கம்

 10.07 .2014 அடக்கம் செய்யப்பட்டது இராசையா நவரட்ணராஐாஅவர்கள் காலமானார்.அன்னார் பத்தமேனி அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட் டி வடக்கில் மணம்முடித்து வாழ்ந்து வந்தவரும். பலகாலம் சுவிசில் வாழ்ந்து பின்பு  சிறுப்பிட்டியில் வாழ்ந்தார் இவர் (05.07.2014) காலமானார் என்பது எமது இணைய உறவுகளுக்கு நாம் அறியத்தந்ததே, அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று நிறைவாகியுள்ளது என்பதனை இங்கே அறியத்தருவதோடு அவருக்கான அஞ்சலியை ஊர் வாழ் உறவுகள் சார்பிலும்...

செவ்வாய், 1 ஜூலை, 2014

சிறுப்பிட்டி ஒன்றிய கௌரவிப்பு நிகழ்வின்

சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினர் இறுதியாக சிறுப்பிட்டிக்கிராமத்தில் மூன்று சமைய சமூக ஆர்வலர்களை கௌரவித்து இருந்தனர் அதன் கானொளி வடிவத்தை இணையம் உலகவாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்காக பதிவிடுகின்றது.இதன் மேலதிக தகவல் விரைவில் இணைக்கப்படும...

செவ்வாய், 17 ஜூன், 2014

பிறந்தநாள் வாழ்த்து திருமதி குமாரசாமி தவரத்தினம் [13-06-14]

சிறுப்பிட்டியில்  வசிக்கும் திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களுக்கு எண்பத்தி நான்காவது  (84)பிறந்த தினம் இன்றாகும்.தனது இல்லத்தில் மிக எளிமையக பிறந்த நாளை கொண்டாடும் இவரை ,இவரது சகோதரிகள் , பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகள்,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் உறவு  இணையங்களும்...

வியாழன், 5 ஜூன், 2014

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 4ம் திருவிழா

 சிறப்பாக நடைபெற்றுது.உபயம் திரு.சபாரத்தினமும் அவர் உறவினர்களும்.மேலதிக புகைப்படங்கள் கிடைத்தவுடன் இணைக்கப்படும்.அருள்மிகு சிறுப்பிட்டி ஸ்ரீ  ஞானவைரவர் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் அந்தப்பெருமானை மனதிலே நிறுத்தி வழிபடும் அடியவர்கட்கெல்லாம் பெருமானின் தரிசனத்தை வழங்கும் நோக்கமே  இவ் இணயதரிசனம். ...

புதன், 4 ஜூன், 2014

சிறுப்பிட்டிஸ்ரீ ஞானவைரவர் ஆலய 3ம் திருவிழா

சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் 3ம் திருவிழாசிறப்புடன் நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு  ஸ்ரீ ஞானவைரவர் 3ம் திருவிழா  தினமான இன்று வைரவபொருமானுக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் இடம்பெற்று. தொடர்ந்து எம்பொருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிகாட்சியளித்தார்- வைரவர் அடியார்கள் எம்பெருமான் அருளை பெற்று சென்றனர் .(புகைப்படங்கள் படங்கள்) ...

சிறுப்பிட்டிஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர்  ஆலய அலங்கார உற்சவ 1ம் பூசை  02.05.2014அன்று சிறப்புட நடைபெற்றது .அடியவர்கள் புடை சூழ  எம் வைரவபெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களுட்குஅருள்பாலித்தார் புகைப்படங்கள்    ...

வியாழன், 22 மே, 2014

பிறந்த நாள் வாழ்த்து. இ.நேமி நாதன் (20:05:14)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் நேமி நாதன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இவரை மனைவி பிள்ளைகள்,பெற்றோர் ,சகோதரர் குடும்பம் ,மற்றும் உறவினர், நண்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும்  நிலாவரை இணையங்களும்உறவு இணையங்களும் ,இறைஅருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்பல்கலையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர் ...

திங்கள், 19 மே, 2014

சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் அலங்கார உற்சவம்

சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் அலங்கார உற்சவம்.2014 02.06.2014 அன்று சிறப்புடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள்   நடைபெறும்.இவ்வைபத்தில் அடியவர்கள் கலந்துகொண்டு  தொண்டாற்றி எம்பெருமானை வணங்கி நல்லருள் பெற எல்லம் வல்ல வைரவபெருமானை வேண்டிநிற்கின்றோம் ...

செவ்வாய், 6 மே, 2014

அமரர் சுப்பிரமணியம் பூபதியின் முதலாவது ஆண்டுத் திதி.

அமரர் பூபதி சுப்பிரமணியத்தின் முதலாவது ஆண்டுத் திதி. 06.05.2014.அன்னையே உனை நினைந்து எம்மைச்சுமந்துஏந்திக்காத்து இந்தமண்ணில் தவளவிட்டதாய் எம்மைப் பிரிந்துசோகத்தைத்தந்தாலும் அன்னையை சாவிலே பிரித்தாய் அன்னை எமைவிட்டு பரிந்ததாய்நினைவது இல்லைஇன்றும் எம்முடன் வாழ்கிறார்இதயத்தில் ஒன்றித்து வாழ்கிறார் வாழ்வதில் நல்லதை கற்றுத்தந்தவர்வாழ்கைக்கு நற் பண்பு கற்றுத்தந்தவர்இல்லாவிட்டாலும் பிறருக்கு கொடுத்துவாழ சொல்லித்தந்தவர்தான் வாழ்ந்த காலத்தில்...

சனி, 19 ஏப்ரல், 2014

பிறந்தநாள் வாழ்த்து: செல்வன் கனகசபை.குமார் (19:04:14)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட செல்வன் கனகசபை.குமார் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார். இவரை இவரது தந்தை கனகசபை,தாயார் அன்னலச்சுமி.அக்கா கனகசாந்தி, அத்தான் யெகதீசன், அண்ணன்மார் தினேஸ்வரன், கணேஸ், குடும்பத்தினர் மருகன்.மருமகள்மாருடன்  இணைந்து உற்றார். உறவினர். நண்பர்கள் வாழ்த்துகின்றனர். வாழ்வில் என்றும் இன்பம் ஓங்கி வளங்கள் யாவும் நன்று பெற்று சிறந்து வாழ்வில் நன்கு ஓங்க சிறப்பாய் வாழ்த்துக்...

சனி, 8 மார்ச், 2014

பிறந்த நாள் வாழ்த்து என். வி சிவநேசன் (08.03.2014]

ஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட கவிஞர் என். வி சிவநேசன் அவர்கள் 08.03.2014 பிறந்த நாளை தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகளுடன் உடன் பிறந்தோர் உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்  இவரை நண்பர்களுடன்   இணைய நண்பர்களும் நவற்கிரி இணையங்களும்   இணைந்து வாழ்திநிற்கின்றனர். கலைகளின் நேசனே சிவநேசா கவிதையின் நேசனே நிவநேசா உறவின் நேசங்கள் உமைவாழ்தும் நேரம் உயரிய கலைஞனே உமை நாமும் வாழ்துகிறோம் அன்பிலும்...

வியாழன், 6 மார்ச், 2014

பிறந்தநாள் வாழ்த்து:எஸ்.தேவராசா(06.03.14)

யேர்மனியில் டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இவரை இந்த நவற்கிரி இணைய உறவுகளும்,இவரது கலைக்குடும்ப இரத்த உறவுகளும்நவற்கிரி இணையங்களும்  சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும்,நவற்கிரிஒன்றியத்தினரும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினரும்,சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய அங்கத்தவர்களும் வாழ்த்துகின்றனர் , இசை ,கவி, பாடகர்,நடிகன் மட்டும் அல்லாது பழகும் பண்பும் பொது...

புதன், 5 மார்ச், 2014

23.வது பிறந்த நாள் வாழ்த்து சந்திரா குமாரசாமி(05.03.2014)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி அவர்களின் மகள் செல்வி சந்திரா குமாரசாமி அவர்கள்  பெர்லினில் உள்ள தனது இல்லத்தில் 23வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரை அப்பா அம்மா. தங்கை.ஐனா.தம்பிமார் சன் . சாமி.சின்னப்பம்மா லண்டன். அத்தைமார். மாமாமார். சித்தப்பாமார். சித்திமார். மச்சாள் நித்யா. மச்சான்மார் அரவிந்.மயூரன்.கிஷாந்.திலக்சன். அண்ணா மசேல் தம்பிமார் சுதர்சன். .ஜுலியான்.றொபின்.அக்கா சுதா. தங்கைமார் சுதேதிகா....

வியாழன், 27 பிப்ரவரி, 2014

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தின் அவசர அறிக்கை

 கிராமத்து உறவுகளே உங்களுக்கான அவசர வேண்டுகோள் இது:-  உங்களுக்காக நாம் கடந்த நான்கு வருடங்களாக உங்கள் நலனில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே. அதுமட்டுமல்ல எம் கிராமத்தில் உண்மைப் பற்றுடனும் உரிமையுனும்  கிராமத்துக்கு வெளியே உருவாக்கப்பட்ட முதல் ஒன்றியம் உங்கள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியமே. அந்தவகையில் உங்கள் நலனே எங்கள்  நோக்கு.நாம் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியமாக இருந்த பொழுதும் எமது நிர்வாகத்தில் சிறுப்பிட்டி...

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

சிறுப்பிட்டி ஒன்றிய மேலதிக தகவலின் தொடச்சி.

                  ஒன்றிய விரிவாக்கம் இவ் ஒன்றியத்தின் விரிவாக்கம் பற்றிய கலந்துரையாடலில் நிலத்திலும் புலத்திலும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன வயோதிபர் இல்லம் ஊரின் செயல்பாட்டுக் குழுவும் அதை முன்மொழிந்திருந்தனர். அதற்கான நிலத்தையும் தருவதா ஒப்புதல் அழித்துள்ளார். இது பற்றி சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் அமர்விலும் இது ஒரு நல்ல...

சனி, 22 பிப்ரவரி, 2014

மேலதிக தகவல்சிறுப்பிட்டி ஒன்றியத்தின் நிர்வாகக்கூட்ட

சிறுப்பிட்டி  உலகதமிழர் ஒன்றிய கூட்டம் கடந்த சனிக்கிழமை இனிதே நடை பெற்று முடிந்துள்ளது.நிர்வாகக்கூட்ட்டம் என்று ஒழுங்கமைக்கப்பட்ட பொழுதும் கிராம நலன் விரும்பிகழும்  சிலர்  இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடையம் .இவ் ஒன்றுகூடல் திரு தேவராசா(ஜேர்மன்) திரு நடராசா (சுவிஸ்)ஆகிய இருவரின் தலைமையில் இடம் பெற்றது மட்டும்மல்ல இவ் இரு ராசாக்களுமே இவ்வமைப்பின் முன்னிலை மன்னர்கள்.இவ்விருவர்களின் முடிவே இறுதி முடிவு இதுதான்  சிறுப்பிட்டி...

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

இனிதே நடைபெற்று முடிந்த சிறுப்பிட்டி ஒன்றியக்கூட்டம்

நேற்று மலை(15.02.14) ஏற்கனவே அறிவித்தபடி சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் நிர்வாகக்கூட்டம்குறிப்பிட்ட இடத்தில் குறித்த நேரத்தில் இறை வணக்கத்துடன் ஆரம்பித்து இன்றைய நிலைமையில் கிராமத்தில் உடனடியாக முன்னெடுக்க வேண்டிய முன்னெடுப்புக்கள், ஒன்றியத்தின் விரிவாக்கம், சிறுப்பிட்டி கிராமத்தின் தற்போதைய யதார்த்த நிலைமைகள், அதன் அடிப்படையில் முன்னெடுக்க வேண்டிய நீண்டகால திட்டங்கள் ,ஏற்கனவே முன்னெடுத்த பணியின் பலாபலன்கள்,போன்றன மட்டுமல்லாது கிராமத்தின்...

வியாழன், 13 பிப்ரவரி, 2014

சிறுப்பிட்டி குட்டி வைரவர் ஸ்ரீ ஞானவைரவர் /புகைப்படங்கள்

              சிறுப்பிட்டி குட்டி வைரவர் ஸ்ரீ ஞானவைரவர்கோவில் ஆகிய இரண்டும் சம காலங்களில் புனரமைப்புக்கள் நடை பெற்று வருகின்றன இவை இரண்டினதும் தற்போதைய புகைப்படங்கள் இணைய வாசகர்களுக்காக பதிவிடப்படுகிறது.கோவிலின் பூச்சு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நன்றி:-யுகேந்தன்/திவாகரன்    வேலைகள்       ...

மாதா வின் பாடல்கள்