18

siruppiddy

சனி, 22 பிப்ரவரி, 2014

மேலதிக தகவல்சிறுப்பிட்டி ஒன்றியத்தின் நிர்வாகக்கூட்ட


சிறுப்பிட்டி  உலகதமிழர் ஒன்றிய கூட்டம் கடந்த சனிக்கிழமை இனிதே நடை பெற்று முடிந்துள்ளது.நிர்வாகக்கூட்ட்டம் என்று ஒழுங்கமைக்கப்பட்ட பொழுதும் கிராம நலன் விரும்பிகழும்  சிலர்  இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடையம் .
இவ் ஒன்றுகூடல் திரு தேவராசா(ஜேர்மன்) திரு நடராசா (சுவிஸ்)ஆகிய இருவரின் தலைமையில் இடம் பெற்றது மட்டும்மல்ல இவ் இரு ராசாக்களுமே இவ்வமைப்பின் முன்னிலை மன்னர்கள்.இவ்விருவர்களின் முடிவே இறுதி முடிவு இதுதான்  சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் முடிவும் முன்னெடுப்பும்  என்பதை ஊர் இணையம் உறுதி பட பதிவிட்டு பறை சாற்றி நிக்கின்றது. அங்கு வருகை தர முடியாது போன இரு மூத்தவர்களுக்கு(மருத்துவம் )ஒன்றியம் முறைப்படி அறியத்தரும்.வருகை தந்த உறவுகளுக்கு ஒன்றிய நிர்வாகம் நன்றி பகிர்கின்றது.
  
நிகழ்ச்சி நிரல் விபரம்
*இறை வணக்கம்
*அக வணக்கம்
*அங்கத்தவர்கள் அறிமுகங்கள்
*நிதிக்கணக்கு  வரவு ,செலவு ,இருப்பு விபரங்கள்
*முன்னெடுத்த ஊர்  திட்டத்தின்(கணனிகள்) பலாபலன்கள் 
*முன்னெடுக்கவேண்டிய செயல் பாடுகள்
*ஊருக்கு உழைத்த இருவருக்கு(+)கௌரவித்தல்
*ஒன்றியத்தின் விரிவாக்கம்
*மயான புனரமைப்பு
*ஊர் வளங்கள்(நீர்) பாதுகாப்பு
*வயோதிபர் இல்லம் அமைத்தல்
போன்றன  அங்கு பேசும் பொருளாகின மட்டும்மல்ல இறுதி முடிவுகளும் எடுக்கப்பட்டு  ஊரில் உள்ள செயல்பாட்டுக்குழுவினருக்கு செயல் பட ஆணை வழங்கப்பட்டது.இவற்றில் ஊரின் ஒற்றுமைக்கு ஒன்றுபட்ட முன்னேற்றத்துக்கு முன்னுருமை கொடுத்து செயற்திட்டங்கள் உருவாக்கியமை மட்டுமல்ல அவைகளை உடனடி முன்னெடுப்பு   அதன் பின்னரான முன்னெடுப்பு   என வகுத்துக்கொண்டது அவர்களின் அனுபவத்தின் வெளிப்பாடு.
உடனடி முன்னெடுப்புக்களாக மயானபுனரமைப்பு,கௌரவிப்பு நிகழ்வு,ஒன்றிய விரிவாக்கம்.போன்றவை தொடரவும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்