18

siruppiddy

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

சிறுப்பிட்டி ஒன்றிய மேலதிக தகவலின் தொடச்சி.

       siruppiddy onriyam


          ஒன்றிய விரிவாக்கம்
இவ் ஒன்றியத்தின் விரிவாக்கம் பற்றிய கலந்துரையாடலில் நிலத்திலும் புலத்திலும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன

வயோதிபர் இல்லம்
ஊரின் செயல்பாட்டுக் குழுவும் அதை முன்மொழிந்திருந்தனர். அதற்கான நிலத்தையும் தருவதா ஒப்புதல் அழித்துள்ளார். இது பற்றி சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் அமர்விலும் இது ஒரு நல்ல கருத்தாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும் அடுத்த அமர்வில் இதுபற்றிய முழுமையானமுடிவகள் எடுப்படும்.
 
  நீர்வளம் இதனையடுத்து இறுதியாக எமது ஊர்வழங்களான எந்தவழங்களையும் யாரும் தங்கள் தனித்துவமான வியாபாரநோக்கோடு வழம் அழிக்கப்படுகின்றதனால் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் தனது கருத்தைமுன்வைத்துத் தடுக்கவேண்டும் என்ற கருத்தும்
முன்வைக்கப்பட்டது. அந்தவகையில் இப்போது தலைதூக்கிநிற்ப்பது. தண்ணீர்ப்பிரச்சனை இந்தத் தண்ணீர்வழமானது எமது ஊர்வழங்கள் வாழ்க்கைமுறைகள் எல்லாமே விசாயத்தைக்கொண்ட ஊராக எமது ஊர் உள்ளபடியால் இங்கே உருவாக்கப்பட இருக்கும் தண்ணீர்சாலை கால ஓட்டத்தில் நீர் ஊற்று இல்லாமல் ஆகலாம்.
விவசாயம் செய்ய நீர் இல்லாமல் குடிப்பதர்க்கு நீர் இல்லாமல் எமது மண் உறவுகள் இருக்க நேரிடும்.அதனால் இந்த நீர் வழம் சுறண்டப்படாமல் இருக்க எமது ஊர்மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற கருத்தும்
எமது ஊர்
உறவுகள் சார்பில் இதற்கான கண்டனத்தையும் தெரிவிக்கவேண்டும் என அனைவரின் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்டது.
அந்த வகையில் இந்த நீர்வளத்தை வியாபாரம் செய்ய தொழில்சாலை கட்ட முன்வந்தவர்கள் தயவு செய்து நம் ஊரில் மட்டுமல்ல பிற ஊர் நீர் வழங்கள்மேல் உங்கள் பார்வையைவிட்டு மாற்றுவழிகள் நிறையவே உள்ளது அதையோசியுங்கள். அந்தவழிகளில் நீரைச்சுத்திகரித்து மக்களுக்கு விற்பனைசெய்யுங்கள் நாங்கள் அங்கே எதுவும்கேட்கவில்லை உங்கள் வியாபாரத்தை நாங்கள்தடுக்கவும் இல்லை. எங்கள் உணர்வைநீங்கள்புரிந்துகொள்ளுங்கள் இன்று நாம் கேட்பதுபோல் நாளை ஊர்கேட்கும் பின்
உலகம்கேட்கும் அதனால் எமது தாழ்மையான வேண்டுதல் ஊர்சார்பில் முன்வைக்கும் உறவுகள்நாம் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம்
கலந்து சிறப்பித்து ஆலோசனைகள் உரைத்த எம் ஊர் உறவுகளின் நல்நோக்கை புரிந்து எம் ஊர் நலன்காப்போம். ஊரின் நலம்விரும்பும்தொண்டர்கள்
ஊர் வளம் பெருகும்
உறவுகள் நலன் பெருகும்
பாரில் ஊர் நிலை உயரும்
பார்ப்பவர்களுக்கு
எம் ஊர்மேல் மதிப்பிருக்கும்
இணைந்தால் பலம்
இருக்கும் இதில் ஊர் நலம்
உரிமையுடன் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம்.
நன்றி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்