18

siruppiddy

வியாழன், 27 பிப்ரவரி, 2014

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தின் அவசர அறிக்கை

 கிராமத்து உறவுகளே உங்களுக்கான அவசர வேண்டுகோள் இது:-  உங்களுக்காக நாம் கடந்த நான்கு வருடங்களாக உங்கள் நலனில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே. அதுமட்டுமல்ல எம் கிராமத்தில் உண்மைப் பற்றுடனும் உரிமையுனும்  கிராமத்துக்கு வெளியே உருவாக்கப்பட்ட முதல் ஒன்றியம் உங்கள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியமே. அந்தவகையில் உங்கள் நலனே எங்கள்  நோக்கு.நாம் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியமாக இருந்த பொழுதும் எமது நிர்வாகத்தில் சிறுப்பிட்டி கிராமத்தை சேராத உறவுகளும்  இருப்பது குறிப்பிடத்தக்கவிடையம்.அது போல் எமது செயற்பாடுகளும் எம் கிராமத்தையும் தாண்டியதாக இருந்ததில் வியற்பில்லை.
அந்தவகையில் செயல் பாட்டுடன் முன்வந்திருக்கும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்துடன் நாம் இணைந்து செயல் படுவது எமக்கு கிடைத்த உழைப்பின் பயனே

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் கலைக்கப்படவில்லை இணைக்கப்பட்டுள்ளது
இதில் எந்த வித மாற்றமோ தேக்கமோ இருக்காது. அவ்வகையில் இன்று எம் கிராமத்தில் இடம் பெறுகின்ற அனைத்து நிகழ்வுகளையும் விரும்பதாகாத அசைவுகளையும் நாம் மிகவும் உன்னிப்பாக உடனுக்குடன் அறிந்து கொண்டு அதற்க்கான எமது கரிசனைகளையும் அதற்கேற்ற  நடவடிக்கைகளிலும் முன்னின்று செல்படுவது எமது பிறப்புரிமை இதை எந்தவித அழுத்தங்களுக்கோ அவமானங்களுக்கோ விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை ஊரை கெடுக்கும் அல்லது கேடு கெட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு இப்பதிவின் மூலம் அறியத்தருகின்றோம்.

 அந்த வகையில் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம் விடுத்திருக்கும் எம் கிராமத்துக்குள் வந்திருக்கும் தண்ணீர் சாலைக்கு எதிரான அறை கூவலுக்கு அவ்வொன்றியத்தினருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினரது முழுமையானதும்

வலுமையானதுமான எதிர்ப்பினை  தெரிவித்துக்கொள்கின்றோம்.மேலும் எம் கிராமத்து வருங்கால சந்ததியினரின் சொத்துக்களில்  ஒன்றான நீர் வளத்தில் கை வைத்திருப்பவர்களுக்கு அமைதியாக இருந்து நிலத்திலும்,புலத்திலும்அனுமதி வழங்குபவர்களும் பக்கவாத்தியமாக குழல் எடுத்து ஊதுபவர்களும் நித்தம் நித்தம் எமது நீர் வளம் அழிந்து போகும் என்பதை நினைவில் நிறுத்தி விழிதெழுந்து விடைகான வாருங்கள்.
ஊர் நலனே எங்கள் நோக்கு….
இதுவே எங்கள் முதல் நோக்கு….
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்