18

siruppiddy

சனி, 19 ஏப்ரல், 2014

பிறந்தநாள் வாழ்த்து: செல்வன் கனகசபை.குமார் (19:04:14)


சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட செல்வன் கனகசபை.குமார் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார்.
இவரை இவரது தந்தை கனகசபை,தாயார் அன்னலச்சுமி.அக்கா கனகசாந்தி, அத்தான் யெகதீசன், அண்ணன்மார் தினேஸ்வரன், கணேஸ், குடும்பத்தினர் மருகன்.மருமகள்மாருடன்  இணைந்து உற்றார். உறவினர். நண்பர்கள் வாழ்த்துகின்றனர். வாழ்வில் என்றும் இன்பம் ஓங்கி
வளங்கள் யாவும் நன்று பெற்று சிறந்து

வாழ்வில் நன்கு ஓங்க சிறப்பாய் வாழ்த்துக் கூறுகிறோம்
நேசம் கொண்ட உறவாய் என்றும்
பாலம் கொண்டு இணைத்து நின்றால்
காலம் மகிழ்வாய் ஓடிப்போகும்
 ஆலம் விழுதாய் உறவு உண்டு
அன்னை தந்தை சிறப்புமுண்டு
ஆண்டு தோறும் சிறப்புக் கண்டு
சீரும் சிறப்புடனும் நலமுடனும்
வாழ வாழ்த்துகின்றோம் உற்றார் உறவுகளுடன் இந்த
 இணையங்கழும் வாழ்த்துக் கூறுகிறோம். 

சனி, 8 மார்ச், 2014

பிறந்த நாள் வாழ்த்து என். வி சிவநேசன் (08.03.2014]

ஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட கவிஞர் என். வி சிவநேசன் அவர்கள் 08.03.2014 பிறந்த நாளை தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகளுடன் உடன் பிறந்தோர் உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்  இவரை நண்பர்களுடன்   இணைய நண்பர்களும் நவற்கிரி இணையங்களும்   இணைந்து வாழ்திநிற்கின்றனர்.
கலைகளின் நேசனே சிவநேசா
கவிதையின் நேசனே நிவநேசா
உறவின் நேசங்கள் உமைவாழ்தும் நேரம்
உயரிய கலைஞனே உமை நாமும் வாழ்துகிறோம்
அன்பிலும் பண்பிலும் உயர்ந்தவன் நீ
அதனாலே ஆனந்தம் கொண்டு மகிழ்பவன்-நீ
நெஞ்சிலே கலங்கம் அற்றவன் நீ
நேசத்தால் மனதைத்தொட்டவன்-நீ
பாசம் கொண்ட அன்பனே வாழ்க பல்லாண்டு
தமிழும் இசையும் போல்
தண்ணீரும் நிலமும் போல்
வானும் நிலவும் போல்
வையகத்தின் இயற்கைபோல்
வளம் பொங்கி வாழ்க வாழ்க பல்லாண்டு
நலமுடன் நூறாண்டு.

வியாழன், 6 மார்ச், 2014

பிறந்தநாள் வாழ்த்து:எஸ்.தேவராசா(06.03.14)


யேர்மனியில் டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இவரை இந்த நவற்கிரி இணைய உறவுகளும்,இவரது கலைக்குடும்ப இரத்த உறவுகளும்நவற்கிரி இணையங்களும்  சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும்,நவற்கிரிஒன்றியத்தினரும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினரும்,சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய
அங்கத்தவர்களும் வாழ்த்துகின்றனர் , இசை ,கவி, பாடகர்,நடிகன் மட்டும் அல்லாது பழகும் பண்பும் பொது நலனில் முன்வந்து செயல்படும் பாங்கு நிஜத்தில் நடிக்கதெரியாத இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களுக்கு இந்த இணைய பதிப்பின் மூலமாக  எமது  மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பதிவு செய்து கொள்கின்றோம்.

புதன், 5 மார்ச், 2014

23.வது பிறந்த நாள் வாழ்த்து சந்திரா குமாரசாமி(05.03.2014)


சிறுப்பிட்டியை பிறப்பிடமாவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி அவர்களின் மகள் செல்வி சந்திரா குமாரசாமி அவர்கள்  பெர்லினில் உள்ள தனது இல்லத்தில் 23வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரை அப்பா அம்மா. தங்கை.ஐனா.தம்பிமார் சன் . சாமி.சின்னப்பம்மா லண்டன். அத்தைமார். மாமாமார். சித்தப்பாமார். சித்திமார். மச்சாள் நித்யா. மச்சான்மார் அரவிந்.மயூரன்.கிஷாந்.திலக்சன். அண்ணா மசேல் தம்பிமார் சுதர்சன். .ஜுலியான்.றொபின்.அக்கா சுதா. தங்கைமார் சுதேதிகா. சுமிதா.தேவிதா.தேனுகா.தேவதி. ஆகியஅனைவரும் சிறுப்பிட்டி முத்துமாரி துணை கொண்டு
நலமுடன் வாழ்வதில் சிறந்தோங்கி
வையகத்தார் உனைவாழ்த்த
 பேர் சொல்லும் பிள்ளையாய் வாழ்க பல்லாண்டு
 நிலவதன் ஒளியாக திருமுகம் கொண்டவளே
அனைவரின் உறவினிலும் அன்புகொண்டு வாழ்பவளே
வாழ்க நீ வாழ்க பல்லாண்டு
 உறவுகளுடன் இணைந்து
 எமதுஇணையமும் வாழ்த்தி நிற்கிறது

வியாழன், 27 பிப்ரவரி, 2014

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தின் அவசர அறிக்கை

 கிராமத்து உறவுகளே உங்களுக்கான அவசர வேண்டுகோள் இது:-  உங்களுக்காக நாம் கடந்த நான்கு வருடங்களாக உங்கள் நலனில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே. அதுமட்டுமல்ல எம் கிராமத்தில் உண்மைப் பற்றுடனும் உரிமையுனும்  கிராமத்துக்கு வெளியே உருவாக்கப்பட்ட முதல் ஒன்றியம் உங்கள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியமே. அந்தவகையில் உங்கள் நலனே எங்கள்  நோக்கு.நாம் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியமாக இருந்த பொழுதும் எமது நிர்வாகத்தில் சிறுப்பிட்டி கிராமத்தை சேராத உறவுகளும்  இருப்பது குறிப்பிடத்தக்கவிடையம்.அது போல் எமது செயற்பாடுகளும் எம் கிராமத்தையும் தாண்டியதாக இருந்ததில் வியற்பில்லை.
அந்தவகையில் செயல் பாட்டுடன் முன்வந்திருக்கும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்துடன் நாம் இணைந்து செயல் படுவது எமக்கு கிடைத்த உழைப்பின் பயனே

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் கலைக்கப்படவில்லை இணைக்கப்பட்டுள்ளது
இதில் எந்த வித மாற்றமோ தேக்கமோ இருக்காது. அவ்வகையில் இன்று எம் கிராமத்தில் இடம் பெறுகின்ற அனைத்து நிகழ்வுகளையும் விரும்பதாகாத அசைவுகளையும் நாம் மிகவும் உன்னிப்பாக உடனுக்குடன் அறிந்து கொண்டு அதற்க்கான எமது கரிசனைகளையும் அதற்கேற்ற  நடவடிக்கைகளிலும் முன்னின்று செல்படுவது எமது பிறப்புரிமை இதை எந்தவித அழுத்தங்களுக்கோ அவமானங்களுக்கோ விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை ஊரை கெடுக்கும் அல்லது கேடு கெட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு இப்பதிவின் மூலம் அறியத்தருகின்றோம்.

 அந்த வகையில் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம் விடுத்திருக்கும் எம் கிராமத்துக்குள் வந்திருக்கும் தண்ணீர் சாலைக்கு எதிரான அறை கூவலுக்கு அவ்வொன்றியத்தினருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினரது முழுமையானதும்

வலுமையானதுமான எதிர்ப்பினை  தெரிவித்துக்கொள்கின்றோம்.மேலும் எம் கிராமத்து வருங்கால சந்ததியினரின் சொத்துக்களில்  ஒன்றான நீர் வளத்தில் கை வைத்திருப்பவர்களுக்கு அமைதியாக இருந்து நிலத்திலும்,புலத்திலும்அனுமதி வழங்குபவர்களும் பக்கவாத்தியமாக குழல் எடுத்து ஊதுபவர்களும் நித்தம் நித்தம் எமது நீர் வளம் அழிந்து போகும் என்பதை நினைவில் நிறுத்தி விழிதெழுந்து விடைகான வாருங்கள்.
ஊர் நலனே எங்கள் நோக்கு….
இதுவே எங்கள் முதல் நோக்கு….
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்  

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

சிறுப்பிட்டி ஒன்றிய மேலதிக தகவலின் தொடச்சி.

       siruppiddy onriyam


          ஒன்றிய விரிவாக்கம்
இவ் ஒன்றியத்தின் விரிவாக்கம் பற்றிய கலந்துரையாடலில் நிலத்திலும் புலத்திலும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன

வயோதிபர் இல்லம்
ஊரின் செயல்பாட்டுக் குழுவும் அதை முன்மொழிந்திருந்தனர். அதற்கான நிலத்தையும் தருவதா ஒப்புதல் அழித்துள்ளார். இது பற்றி சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் அமர்விலும் இது ஒரு நல்ல கருத்தாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும் அடுத்த அமர்வில் இதுபற்றிய முழுமையானமுடிவகள் எடுப்படும்.
 
  நீர்வளம் இதனையடுத்து இறுதியாக எமது ஊர்வழங்களான எந்தவழங்களையும் யாரும் தங்கள் தனித்துவமான வியாபாரநோக்கோடு வழம் அழிக்கப்படுகின்றதனால் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் தனது கருத்தைமுன்வைத்துத் தடுக்கவேண்டும் என்ற கருத்தும்
முன்வைக்கப்பட்டது. அந்தவகையில் இப்போது தலைதூக்கிநிற்ப்பது. தண்ணீர்ப்பிரச்சனை இந்தத் தண்ணீர்வழமானது எமது ஊர்வழங்கள் வாழ்க்கைமுறைகள் எல்லாமே விசாயத்தைக்கொண்ட ஊராக எமது ஊர் உள்ளபடியால் இங்கே உருவாக்கப்பட இருக்கும் தண்ணீர்சாலை கால ஓட்டத்தில் நீர் ஊற்று இல்லாமல் ஆகலாம்.
விவசாயம் செய்ய நீர் இல்லாமல் குடிப்பதர்க்கு நீர் இல்லாமல் எமது மண் உறவுகள் இருக்க நேரிடும்.அதனால் இந்த நீர் வழம் சுறண்டப்படாமல் இருக்க எமது ஊர்மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற கருத்தும்
எமது ஊர்
உறவுகள் சார்பில் இதற்கான கண்டனத்தையும் தெரிவிக்கவேண்டும் என அனைவரின் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்டது.
அந்த வகையில் இந்த நீர்வளத்தை வியாபாரம் செய்ய தொழில்சாலை கட்ட முன்வந்தவர்கள் தயவு செய்து நம் ஊரில் மட்டுமல்ல பிற ஊர் நீர் வழங்கள்மேல் உங்கள் பார்வையைவிட்டு மாற்றுவழிகள் நிறையவே உள்ளது அதையோசியுங்கள். அந்தவழிகளில் நீரைச்சுத்திகரித்து மக்களுக்கு விற்பனைசெய்யுங்கள் நாங்கள் அங்கே எதுவும்கேட்கவில்லை உங்கள் வியாபாரத்தை நாங்கள்தடுக்கவும் இல்லை. எங்கள் உணர்வைநீங்கள்புரிந்துகொள்ளுங்கள் இன்று நாம் கேட்பதுபோல் நாளை ஊர்கேட்கும் பின்
உலகம்கேட்கும் அதனால் எமது தாழ்மையான வேண்டுதல் ஊர்சார்பில் முன்வைக்கும் உறவுகள்நாம் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம்
கலந்து சிறப்பித்து ஆலோசனைகள் உரைத்த எம் ஊர் உறவுகளின் நல்நோக்கை புரிந்து எம் ஊர் நலன்காப்போம். ஊரின் நலம்விரும்பும்தொண்டர்கள்
ஊர் வளம் பெருகும்
உறவுகள் நலன் பெருகும்
பாரில் ஊர் நிலை உயரும்
பார்ப்பவர்களுக்கு
எம் ஊர்மேல் மதிப்பிருக்கும்
இணைந்தால் பலம்
இருக்கும் இதில் ஊர் நலம்
உரிமையுடன் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம்.
நன்றி

சனி, 22 பிப்ரவரி, 2014

மேலதிக தகவல்சிறுப்பிட்டி ஒன்றியத்தின் நிர்வாகக்கூட்ட


சிறுப்பிட்டி  உலகதமிழர் ஒன்றிய கூட்டம் கடந்த சனிக்கிழமை இனிதே நடை பெற்று முடிந்துள்ளது.நிர்வாகக்கூட்ட்டம் என்று ஒழுங்கமைக்கப்பட்ட பொழுதும் கிராம நலன் விரும்பிகழும்  சிலர்  இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடையம் .
இவ் ஒன்றுகூடல் திரு தேவராசா(ஜேர்மன்) திரு நடராசா (சுவிஸ்)ஆகிய இருவரின் தலைமையில் இடம் பெற்றது மட்டும்மல்ல இவ் இரு ராசாக்களுமே இவ்வமைப்பின் முன்னிலை மன்னர்கள்.இவ்விருவர்களின் முடிவே இறுதி முடிவு இதுதான்  சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் முடிவும் முன்னெடுப்பும்  என்பதை ஊர் இணையம் உறுதி பட பதிவிட்டு பறை சாற்றி நிக்கின்றது. அங்கு வருகை தர முடியாது போன இரு மூத்தவர்களுக்கு(மருத்துவம் )ஒன்றியம் முறைப்படி அறியத்தரும்.வருகை தந்த உறவுகளுக்கு ஒன்றிய நிர்வாகம் நன்றி பகிர்கின்றது.
  
நிகழ்ச்சி நிரல் விபரம்
*இறை வணக்கம்
*அக வணக்கம்
*அங்கத்தவர்கள் அறிமுகங்கள்
*நிதிக்கணக்கு  வரவு ,செலவு ,இருப்பு விபரங்கள்
*முன்னெடுத்த ஊர்  திட்டத்தின்(கணனிகள்) பலாபலன்கள் 
*முன்னெடுக்கவேண்டிய செயல் பாடுகள்
*ஊருக்கு உழைத்த இருவருக்கு(+)கௌரவித்தல்
*ஒன்றியத்தின் விரிவாக்கம்
*மயான புனரமைப்பு
*ஊர் வளங்கள்(நீர்) பாதுகாப்பு
*வயோதிபர் இல்லம் அமைத்தல்
போன்றன  அங்கு பேசும் பொருளாகின மட்டும்மல்ல இறுதி முடிவுகளும் எடுக்கப்பட்டு  ஊரில் உள்ள செயல்பாட்டுக்குழுவினருக்கு செயல் பட ஆணை வழங்கப்பட்டது.இவற்றில் ஊரின் ஒற்றுமைக்கு ஒன்றுபட்ட முன்னேற்றத்துக்கு முன்னுருமை கொடுத்து செயற்திட்டங்கள் உருவாக்கியமை மட்டுமல்ல அவைகளை உடனடி முன்னெடுப்பு   அதன் பின்னரான முன்னெடுப்பு   என வகுத்துக்கொண்டது அவர்களின் அனுபவத்தின் வெளிப்பாடு.
உடனடி முன்னெடுப்புக்களாக மயானபுனரமைப்பு,கௌரவிப்பு நிகழ்வு,ஒன்றிய விரிவாக்கம்.போன்றவை தொடரவும்

மாதா வின் பாடல்கள்