புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி, கிந்துப்பிட்டி மயானத்தின் சுற்று மதிலை இடித்தனர் என்ற குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப் பட்டவர்கள் 40 பேர்
மல்லாகம் நீதிவான் மன்றில் நேற்றுச் சரணடைந்தனர்.
அவர்களில் 12 பேருக்கு மட்டும் பிணை வழங்கிய நீதிவான், ஏனையவர்களை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மயானத்தின் மதில் மீளக் கட்டப்படும் வரை பிணை வழங்கப்படாது என்று நீதிமன்று அறிவுறுத்தியது.
புத்தூர் மேற்கு சிறுப்பிட்டி மயானத்தின் அமைவிடம் தொடர்பில் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். மற்றொரு தரப்பு அந்த மயானம் தொடர்ந்தும் அதில் இருக்க வேண்டும் என்றும் தமது பாவனைக்கு விடப்படவேண்டும் என்று
கோருகின்றனர்.
அது தொடர்பான முரண்பாடுகளின் போது நீதிமன்ற அனுமதியுடன் அந்த மாயனத்துக்கு அமைக்கப்பட்ட மதிலின் ஒருபகுதி உடைக்கப்பட்டது. அதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 8 பேர்
கைது செய்யப்பட்டனர்.
மயானத்தின் மதில் உடைத்தனர் என்ற குற்றச்சாட்டில் 45 பேரின் விவரங்கள் அடங்கிய பட்டியலை அச்சுவேலிப் பொலிஸார் மல்லாகம் நீதிவான் மன்றில் சமர்ப்பித்தனர். அந்த 45 பேரையும் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
அவர்களில் அரசியல் கட்சி ஒன்றின் செயற்பாட்டாளர் உள்ளிட்ட 6 பேர் கடந்தவாரம் நீதிமன்றில் சரணடைந்தனர்.அவர்களை விளக்கமறியலில்
வைக்க நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மேலும் 40 பேர் ல்லாகம் நீதிவான் மன்றில் நேற்றுச் சரணடைந்தனர். அவர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்தனர். எனினும் 12 பேருக்கு மட்டும் பிணை வழங்கிய நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், ஏனைய 28 பேரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, உடைக்கப்பட்ட மதிலை மீளக் கட்டும் பணிகளும் நேற்று ஆரம்பிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக