18

siruppiddy

வெள்ளி, 27 ஜனவரி, 2017

எம் ஊர்மக்களே விழிப்புடன் இருங்கள்!!!

இந்துசிட்டி மயானம் என்பது எமக்குத்தெரியக்கூடியவரையில் எம்பெற்றேர்கள் கூறியதகவல்படி சுமார் 200 நுாறு ஆண்டுகளுக்கு மேல் இதே இடந்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யப்பட்டு
வருகின்றது.
தற்காலிகமாக சில ஆண்டுகள் இதன் அன்மித்த காணிகள் ஒருசிலரால் சிலருக்கு விறக்கப்பட்டுள்ளது அதற்கான ஆதாரங்களும் பெயர்களும் எமது ஊர்மக்களுக்குத்தெரியும்.
அப்படி காணிகளை வாங்கிக் குடியமர்ந்தவர்கள் செய்த அடாவத்தனங்களை தட்டிக்கேட்காமல் அதன் சமூகம் இருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.
ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தங்கள் உறவுகள் இறந்தால் அடக்கம் செய்ய பாவனைப்படுத்தப்பட்ட இந்த மயானத்தில் கடந்த சிலவருடங்களாக இதன் பாவனையாளர்களின் ஒத்துழைப்புடன் இரு சமூகத்தினரும் இந்த மயானத்தை பாவித்துவருகின்றனர்.
அப்படி ஒற்றுமையாக இருந்தவர்களை கள்ளக்காணிவாழ்கி குடியேறிகள் காட்டிய அடாவடி தனங்கள் பற்றி முன் பதிவில் 
எழுதியிருந்தோம்.
இப்போது இங்கே கேள்வி என்னவென்றால் இரு சமூகத்தினரும் இணைந்தே இதன் புனரமைப்புகள் நடைபெற்றன
அதற்கு மக்களின் நிதியும், புத்துார் மாணகர சபையும் நிதியுதவியும் வழங்கி கிணறு கொட்டகை பேன்ற பணிகள் நிறைவாகியபின் ஒருவர் காலமாகி எந்தவிதபிரச்சனையும் இன்றி அடக்கம் செய்யப்பட்டார் என்ற தகவலும் உண்டு.
அதன் பின் இந்த அடாவடித்தனத்தை அதுவும் நிலத்தை அபகரித்தவர்கள் பக்கம் சார்ந்து நிற்பவர்கள் யார் …?என்பதை
அறிந்து.
எமது ஊர்மக்கள் மயானம் மீண்டும் அவர்கள் பாவனைக்கு வரும் என்பதும் உண்மை, ஆனால் கள்ளக்காணிக் குடியேறிகள் விபரம் மக்களுக்கு அரச ஊழியர்கள் தெளிவு படுத்தல் வேண்டும்
அடுத்தவர் வழங்களில் இருப்பவர்கள் நாட்டான்மை காட்டும் நிலை மாறவேண்டும்.
அதற்கான செயல் பாட்டில் பணி புரிவோர்க்கு ஊர்மக்கள் ஒத்துழைக்கவேண்டும்.
ஊருக்குள் இருந்து கொண்டு ஊர்மக்களுக்கு துரோகம் விழைவிப்பவர்கள் இனம் கண்டு அதற்கான தண்டனைகள் வழங்கள் வேண்டும்.
அரச அதிகாரிகள் என்று பதவியில் இருப்பவர்கள் நீதியான நேர்மையான செயல்பாட்டுடன் இருக்கவேண்டும்.
ஒரு உதாரணத்துக்கு இவர்களுக்கு இவர்கள் அடாவடித்தனத்துக்கு அரச அதிகாரிகள் ஒத்துழைத்தால் இதுபோன்ற பல ஊர் பிரச்சனைக்கு முகம்கொடுக்கவேண்டிவரும்.
இதன் பிரச்சனைகள் அரச அதிகாரிகள் மட்டம்வரை போய் பிரச்சனைக்காறர் ஊர்மக்களுடன் வந்து சமாதானம் பேசும் அளவுக்கு அவர்கள் இன்றைய நிலை உள்ளது.
நாளை அரச அதிபர்கள் புத்துார் மானகர சபைக்கு இதுபற்றி பேச அழைத்துள்ளார்கள் என்பதும் கூறத்தக்கது.
வழக்கறிஞர் முதல் தவணையில் ஊர்மக்களுக்கான ஆரதவுடன் தீர்வு நல்லமுறையில் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
அதுவரை பொறுமை கொள்ளாது பல பக்கங்களாலும் இதன் மீட்புக்கான பணிகள் இடம் பெறுகின்றது.
அத்தோடு துாங்கி துவண்டு அனைத்தையும் இழந்த நாம் இறுதில் தகனம் செய்ய ஆறடி நிலம் இதற்கும் அடாவடித்தனம் என்பதை பல கிராமத்துமக்களும் இந்த அடாவடித்தனத்துக்கான எதிர்புகள் தெரிவித்து வருகின்றனர்.
அதனால் ஊர்மக்கள் உயார் உங்களுக்குள் யாராவது எட்டப்பர் இருந்தால் நீங்களும் இதே மயானம்தான் செல்லவேண்டும்
 என்பதை உணர்ந்து.
நல்வழியில் செயல்படுங்கள் இறுதியாக நடந்த அடாவடித்தனம் உங்கள் தாயை, தந்தையை, சகோதரங்களை அடக்கம் செய்ய கொண்டுசென்று இதுபோல் நடந்தால் என்ன நிலை என்பதை உணர்ந்து செய்ல்படுங்கள் என்பதே உண்மை நிலை.
விழித்தெழுங்கள்
நல் விடைகிடைக்கும்
நிமிருங்கள் வளையாத மனம்கொண்டு
மானம் வேண்டும்வாழ்வில்
ஆடாவடித்காறர் ஆதிக்கம்செய்ய
நீங்கள் துாங்காதிருப்பீர்கள்
தீர்ப்புக்கள் திருத்தப்பட்டு
மயானம் புதுப்பொலிவாகும் என்பது உறுதி
ஒற்றுமை ஓங்க ஒரே குரலில் நிமிர்ந்தால்
எதிரியும் பஞ்சாவான் என்கின்ற உறுதிகொண்டு 
எழுவோம் நேர்மைக்காக:
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்