யூதப் படுகொலை நினைவு நாள் அன்று இரண்டாம் உலக யுத்ததை குறித்து சுவிஸ் ஜனாதிபதி ஆற்றிய உரையில் இடம்பெற்ற குற்றத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜனாதிபதி ஆற்றிய உரையில், இரண்டாம் உலக யுத்தத்தின் போது சுவிட்சர்லாந்து எந்த வித அடிமைத்தனத்துக்கு இடம் கொடாமல் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது.
அப்பொழுது இங்கு சர்வாதிகார ஆட்சி நடக்கவில்லை, சட்டத்தின் ஆட்சி தான் நடந்தது, உயிருக்குப் பயந்து ஓடி வந்தவர்களுக்கு சுவிஸ் புகலிடமாக இருந்தது என்று பாராட்டியிருந்தார்.
ஆனால் இதனை எதிர்த்து யூதப் பிரதிநிதிகள் அளித்த பேட்டியில், இரண்டாம் உலக யுத்ததின் பொழுது உயிருக்குப் பயந்து ஓடி வந்த பலரை சுவிட்சர்லாந்து திருப்பியனுப்பி விட்டது.
அவர்களுக்கு மரணம் உறுதி என்று தெரிந்ததும் அவர்களைத் திருப்பியனுப்பி சாகடித்தது. இந்த வரலாற்றை ஜனாதிபதி மறந்தது எப்படி என்று வினவினர்.
இந்தக் கருத்தை ஏற்று கொண்ட ஜனாதிபதி செயிண்ட் கேலனில் நடைபெற்ற SIG யூதர்கள் கூட்டத்தில் இதற்காக மன்னிப்புக் கோரினார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக