18

siruppiddy

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

பிறந்தநாள் வாழ்த்து:இராகவன். இராசையா 07.08.18

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டில் வாழ்ந்து வருபவருமான இராகவன். இராசையா அவர்கள் தனது பிறந்தநாளை 07.08.2018
கொண்டாடுகிறார் இவரை அன்பு  மனைவி   பிள்ளைகள் 
 ,சகோதரர்கள் , மற்றும்  , 
உற்றார் உறவினர் நண்பர்கள்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை    எமது http://lovithan.blogspot.ch/  இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும்  
 சிறுப்பிட்டிஅம்மன் 
இறை அருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து   நோய் நொடி இன்றி  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றன..
வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

சிறுப்பிட்டி வடக்கு வைரவர் 3ம் திருவிழா 03.08.18

யாழ் சிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள்ஊர்  காவல் தெய்வமாம் வைரவர் ஆலய 2ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 03.08.2018 இன்று இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக
 நடைபெற்று உள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 2 ஆகஸ்ட், 2018

சிறுப்பிட்டி வடக்கு வைரவர் 2ம் திருவிழா 02.08.18

யாழ் சிறுப்பிட்டி வடக்கில் அமைந்திருக்கும் எங்கள்ஊர்  காவல்  தெய்வமாம் வைரவர் ஆலய 2ஆம் நாள் திருவிழாஅலங்கார உற்சவ 02.08.2018.இன்று  இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்து சிறப்புற்றதாக
 நடைபெற்று உள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 1 ஆகஸ்ட், 2018

சிறுப்பிட்டி வடக்கு வைரவர் 1 ம் திருவிழா 01.08.18

யாழ் சிறுப்பிட்டி வடக்கு வைரவர் 1 நாள் உற்சவம் 01.08.18 ஆலய அலங்கார உற்சவம்  என்பதை எமது ஊர் இணையம் எமது ஆலய பக்தர்களுக்கு, அலயத்தில் வேண்டுதல் காறர்களுக்கு, சிறுப்பிட்டி வைரவருக்காக விரதம் இருப்பவர்களுக்கு அறியத்தருகின்றது
இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு 
அருள்பாலித்தா​ர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 28 ஜூலை, 2018

மரணஅறிவித்தல் திருமதி பரமானந்தம் இந்துமதி27.07.18

பிறப்பு : 30 மே 1951 — இறப்பு : 27 யூலை 2018
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வியாபாரிமூலை, தோப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமானந்தம் இந்துமதி 
(ஓய்வுபெற்ற ஆசிரியை) 27-07-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா அன்னம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும்,
பரமானந்தம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
குபேரன்(சுவிஸ்), குமணன்(கனடா), மேனுஜா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லாவண்யா, நிலானி, பாலகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
நவிஷன், ஆருஷ், திவோஷன், ரேத்ரா, விராத் ஆகியோரின் 
அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அச்சுவேலி தோப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு 
இந்த நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம்,
 நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களின் 
ஆழ்ந்த அனுதாபத்தைத்தெரிவித்துக் கொள்கின்றன 
  ஓம்சாந்தி  ஓம்சாந்தி ஓம்சாந்தி
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமணன் — இலங்கை
தொலைபேசி: +94776154068
செல்லிடப்பேசி: +94703729017
குபேரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770655179
நிலானி — கனடா
தொலைபேசி: +19058673313
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று மின் தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை(28) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர்
 தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று காலை- 08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் தாவடி, பிள்ளையார் கோவிலடி, வன்னியசிங்கம் வீதி, தாவடி பாடசாலை லேன், பத்தானை, யுவசக்தி வீதி, அண்ணாமலை வீதி, சுதுமலை, மலை வேம்படி, சின்மயாபாரதி பாடசாலை வீதி, மாப்பியன் வீதி, கூளாவடி வீதி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 27 ஜூலை, 2018

அமரர் இம்மனுவல் ஜேசுதாசன் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 28.07.18

அன்னை மடியில் : 1 சனவரி 1949 — இறைவன் அடியில் : 28 யூலை 2017
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இம்மனுவல் ஜேசுதாசன் (ஜேசன்- Management Consultant- United Nations, Geneva) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு காலம்தான் போனாலுமே 
பல்லாண்டு காலங்கள்தான் வந்தாலுமே 
ஆறாததே உங்களைப்பிரிந்த மனத்துயரமே !
அன்பு, அறிவு, கருணைக்கடல் வெள்ளம் 
அன்னைபோல அரவணைக்கும் அருமையான உள்ளம் 
இன்பத்திலும் துன்பத்திலும் ஓடிவந்து உதவும் அன்புக்கரங்கள் 
மன்னிக்கும் மனமும் சிரித்த முகமும் உமது
 சிறந்த குணங்கள்!
அம்மா, ஆச்சி, அப்புவின் அன்பு மனங்களையோ 
உங்கள் மனதில் உருவாக்கி சகோதரமாக இறைவன் தந்தது 
எமக்கெனவே வந்த அறிவின் தந்தை, உற்ற நண்பன் 
கண்களைவிட்டு மறைந்தாலும் எம்மனதில் 
என்றும் வாழும் அன்பின் தெய்வம்! 
மண்ணில் எங்கள் உயர்வின் ஆணிவேர் நீங்கள்தானே அண்ணா!
மறக்கமுடியாமல் உங்கள் பிரிவால் வாடும் 
அன்புச் சகோதரங்கள், உறவினர்கள்.
தகவல்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

மாதா வின் பாடல்கள்