18

siruppiddy

சனி, 27 செப்டம்பர், 2014

மரண அறிவித்தல்:சின்னையா வைத்திலிங்கம்

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னையா  வைத்திலிங்கம் அவர்கள்  இன்று  காலை காலமானார் .அன்னாரின் இறுதிக்கிரியை இன்று  24-09-2014 புதன்கிழமை  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இத்தகவலை உற்றார் உறவினர்களுக்கு அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா சோதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகம்மாவின் (பூரணம்) அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான கந்தர் வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், தெய்வமணி அவர்களின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சிவபாதம் அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற செல்லையா மற்றும் தங்கம்மா, பொன்னம்பலம், காலஞ்சென்ற இராசதுரை மற்றும் கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், இந்துஷா, விதுஷா, கம்ஷா, நிரஞ்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (24.09.2014) புதன்கிழமை மு.ப.10.00 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் சிறுப்பிட்டி மேற்கு  இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டது .
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
 குடும்பத்தினர். – சிறுப்பிட்டி மேற்கு, , 077 684 1343

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 10 ஜூலை, 2014

இராசையா நவரட்ணராஐா அவர்களின் பூதவுடல் அடக்கம்


 10.07 .2014 அடக்கம் செய்யப்பட்டது
இராசையா நவரட்ணராஐாஅவர்கள் காலமானார்.அன்னார் பத்தமேனி அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட் டி வடக்கில் மணம்முடித்து வாழ்ந்து வந்தவரும். பலகாலம் சுவிசில் வாழ்ந்து பின்பு  சிறுப்பிட்டியில் வாழ்ந்தார் இவர் (05.07.2014) காலமானார் என்பது எமது இணைய உறவுகளுக்கு நாம் அறியத்தந்ததே,
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று நிறைவாகியுள்ளது என்பதனை
 இங்கே அறியத்தருவதோடு அவருக்கான அஞ்சலியை ஊர் வாழ் உறவுகள் சார்பிலும் உலகம்வாழ்  உறவுகள் சார்பில் கூறி நிற்கிறது
யாழ் போக்கு வரத்துச் சேவையில் நடத்துனராகவும்.
பொதுப்பணிகளில் பணிபுரிந்தவரும்
 மனித நேயம் உள்ளவரான நவரட்ணராஐா
 உங்கள் இழப்பு உங்கள் குடும்பத்தினரை
 மட்டுமல்ல உறவுகளை மட்டுமல்ல,
ஊர்வாழ் மக்களை மட்டுமல்ல
 புலத்தில் வாழும் உங்கள் நேசங்களை
 நெஞ்சுருக வைத்துள்ளது
உறவோடும் உரிமையோடும் பளகிய அன்பன்
 சிரித்த முகத்தோடு உலவிய நண்பன்
 வருத்தம் வந்ததுவோ வாழ்வைவிட்டு பிரித்ததுவோ.?
இனிக்கப்பேசியவன்
 இன்பமாய் பளகியவன்
 இயமன் அழைத்திட சொல்லாமல் போனதெங்கே ?
புலத்தில் வாழ்ந்தவன் நீ
 தாய் நிலத்தில் உறவோடு வாழ்வது மனத்தில் மகிழ்வுதர
 நிலத்தில் உயிர் போன செய்தி இணையத்தில் ஏன் ஐயா .?
வாழ்வில் பிரிவு தாங்கமுடியாத வலி
 வாழ்கைத்துணைவி பிரிந்து வாடுவது பெரும் வலி
 ஆனாலும் அன்பரே உமது ஆத்ம சாந்திக்காகவும்
 உங்கள் குடும்பத்தினர் அமைதிக்காகவும் வேண்டி நிற்கிறோம்
  

செவ்வாய், 1 ஜூலை, 2014

சிறுப்பிட்டி ஒன்றிய கௌரவிப்பு நிகழ்வின்


சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினர் இறுதியாக சிறுப்பிட்டிக்கிராமத்தில் மூன்று சமைய சமூக ஆர்வலர்களை கௌரவித்து இருந்தனர் அதன் கானொளி வடிவத்தை இணையம் உலகவாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்காக பதிவிடுகின்றது.இதன் மேலதிக தகவல் விரைவில் இணைக்கப்படும்.

செவ்வாய், 17 ஜூன், 2014

பிறந்தநாள் வாழ்த்து திருமதி குமாரசாமி தவரத்தினம் [13-06-14]

சிறுப்பிட்டியில்  வசிக்கும் திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களுக்கு எண்பத்தி நான்காவது  (84)பிறந்த தினம் இன்றாகும்.தனது இல்லத்தில் மிக எளிமையக பிறந்த நாளை கொண்டாடும் இவரை ,இவரது சகோதரிகள் , பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகள்,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் உறவு  இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும் வாழ்த்துகின்றோம்

வியாழன், 5 ஜூன், 2014

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 4ம் திருவிழா

 சிறப்பாக நடைபெற்றுது.உபயம் திரு.சபாரத்தினமும் அவர் உறவினர்களும்.மேலதிக புகைப்படங்கள் கிடைத்தவுடன் இணைக்கப்படும்.அருள்மிகு சிறுப்பிட்டி ஸ்ரீ  ஞானவைரவர் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் அந்தப்பெருமானை மனதிலே நிறுத்தி வழிபடும் அடியவர்கட்கெல்லாம் பெருமானின் தரிசனத்தை வழங்கும் நோக்கமே  இவ் இணயதரிசனம்.

புதன், 4 ஜூன், 2014

சிறுப்பிட்டிஸ்ரீ ஞானவைரவர் ஆலய 3ம் திருவிழா

சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் 3ம் திருவிழா
சிறப்புடன் நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு  ஸ்ரீ ஞானவைரவர் 3ம் திருவிழா  தினமான இன்று வைரவபொருமானுக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் இடம்பெற்று. தொடர்ந்து எம்பொருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிகாட்சியளித்தார்- வைரவர் அடியார்கள் எம்பெருமான் அருளை பெற்று சென்றனர் .(புகைப்படங்கள் படங்கள்)
















சிறுப்பிட்டிஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர்  ஆலய அலங்கார உற்சவ 1ம் பூசை  02.05.2014அன்று சிறப்புட நடைபெற்றது .அடியவர்கள் புடை சூழ  எம் வைரவபெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களுட்குஅருள்பாலித்தார்



 
 

மாதா வின் பாடல்கள்