18

siruppiddy

வெள்ளி, 10 மே, 2013

இறப்புத்தகவல்கள்



                                                                               அன்னை மடியில்                ஆண்டவன் அடியில்
                               20 டிசெம்பர் 1996                               6 மே 2013

                                                          செல்வி ஜவீன் ஜனனி
     

                                         அன்னை மடியில்       இறைவன் அடியில்
                                            3 பெப்ரவரி 2001                 8 மே 2013
    
                                                         செல்வன் ஜவீன் ஜணன்

சுவிஸ் சூரிச்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜவீன் ஜனனி அவர்கள் 06.05.2013 திங்கட்கிழமை அன்றும், ஜவீன் ஜணன் அவர்கள் 08-05-2013 புதன்கிழமை அன்றும் கொழும்பில் அகால மரணமடைந்தார்கள்.
அன்னார்கள், திரு திருமதி. ஜவீன்(பசுபதி) ஜெயந்திமாலா(ஜெயந்தி) தம்பதிகளின் புதல்வர்களும்,
காலஞ்சென்ற அன்னலிங்கம் சிந்தாமணி, திரு திருமதி. தில்லைநாதன் கமலாதேவி ஆகியோரின் அன்புப் பேரப்பிள்ளைகளும்,
காலஞ்சென்ற பகீரதன், புலேந்திரன் சாயீஸ்வரி(பிரான்ஸ்), ஜீவராஜா சாந்திமாலா(லண்டன்), விக்கினேஸ்வரன் சுகந்திமாலா(சுவிஸ்), சூரியப்பிரகாஸ் வஜந்திமாலா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமக்களும்,
காலம்சென்றவர்களான இந்திரா, தர்மபூபதி மற்றும் கமலாம்பிகை(பிரான்ஸ்), ஸ்ரீஸ்கந்தராஜா ஜெயந்திமாலா(பிரான்ஸ்), சசிதரன் ஜெயராணி(சுவிஸ்), தயாபரன் சுபநிதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மருமக்களும்,
கீபன், கீதினி(பிரான்ஸ்), சஜீவன்(லண்டன்), விதுசன், வர்சன்(சுவிஸ்), காவியன், இலக்கியம்(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாத சகோதரர்களும்,
தமிழினியன், தமிழினி, தமிழ்அருவி, குமார்(பரிஸ்), அர்ச்சதா, ஆரணி, திஷாந்தன், திவாகி, அங்கயன்(சுவிஸ்), இவர்களுடன் அகால மரணமடைந்த வாரணி, Dr.வாசகன், சயா, சரணியா ஆகியோரின் பாசமிகு மைத்துனர்களும் ஆவார்கள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 15/05/2013, 08:30 மு.ப — 04:00 பி.ப ,
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8046 Zürich.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 16/05/2013, 11:00 மு.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8046 Zürich.

தொடர்புகளுக்கு
ஜெயந்திஜவீன்(பெற்றோர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41442812712
தில்லைநாதன்(தாத்தா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94112507442
புலேந்திரன்(சித்தப்பா) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148273016
ஸ்ரீஸ்கந்தராஜா(மாமா) — பிரான்ஸ்
தொலைபேசி: +331950648717
ஜீவாசந்தி(பெரியம்மா) — பிரித்தானியா
தொலைபேசி: +442088642315
விக்கிசுகந்தி(சித்தி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444333079
சசிஉமா(மாமா) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786211870
தயாசுபா(மாமா) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41817230154
செல்லிடப்பேசி: +41799353121
சூரிவஜந்தி(சித்தி) — பிரித்தானியா
தொலைபேசி:+441908785140   
 
 
                           

வியாழன், 9 மே, 2013

இறப்புத்தகவல் "திரு வேலுப்பிள்ளை கோவிந்தசாமி


சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை கோவிந்தசாமி அவர்கள் 08.05.2013 அன்று இறைவன் பதம் சென்றார்அன்னார்காலம் சென்ற வேலுப்பிள்ளை சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலம் சென்ற ருக்குமணியின் அன்பு கணவரும்,அப்பாத்துரையின் அன்பு சகோதரனும்,குணமணி,கோமதி,ராசதேவி,சிவமலர்,பிரேமா, சந்திராதேவி,காலம்சென்ற மகேந்திரன் ஆகியோரின் அன்பு தந்தையும்,காலம் சென்ற பாலசுப்பிரமணியம், தவலிங்கம் ,ஆனந்தசிவம்,பாலேந்திரம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
டினோசன் ,வைதேகி (லண்டன்)குனேஸ்வரி யானராஜ் (பிரான்ஸ் )சுரேஷ் மாலவி (பிரான்ஸ்)ரமேஸ், ரேணுகா,தமேஸ்,ராதிகா .கவிராஜ்,தனராஜ் தசதேவி கமலராஜ் (பிரான்ஸ்) தரன்(பிரான்ஸ்)தனுசன்,விதுசா,விதூசன்,யதீசன், துசிந்தா,துசாங்கன்,நவஜீவன் (பிரான்ஸ்)ஆகியோரின் பாசமிகு பேரனும்.
விதுசன்,தர்னி,பிரியங்கா,பிரிதிகா ,பிரிதிவ்,சுவிர்த்தன் ஆகியோரின் அன்புப்பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (09.05.2013) வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மைதானத்துக்கு எடுத்து செல்லப்படும் .இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் .

தொடர்புகளுக்கு .
குனேஸ்வரி ஞானதாஸ் (பிரான்ஸ்) 0033 751 382 369
தசதேவி கமலராஜன் (பிரான்ஸ்)
சுரேஸ்
ஜீவன் (பிரான்ஸ்)0033 652 434 137
தரன் (பிரான்ஸ்) 0033 652 480 553

திங்கள், 6 மே, 2013

இனிதே நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகக்கூட்டம்""

இன்று (05.05.13)மிக முக்கியமான கிராம நலன் சார்ந்த ஒன்றியத்தின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அத்துடன்.ஒன்றிய பொறுப்புக்கள் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. வருங்கால ஒன்றிய செயல்பாடுகளும் இருப்பில் இருக்கும் பணத்தில் கிராமத்தையும் தாண்டிய ஒரு நற் திட்டத்துக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.சிறுப்பிட்டி கிராமத்தில் நடந்துகொண்டிருக்கும் நற் திட்டத்துக்கு ஒன்றியத்தின் ஆதரவையும்
.பங்களிப்பை வழங்குவதுடன் கிராமத்தில் தங்கள் தனிப்பட்ட புகழுக்கும், வரும்படிக்காக கிராமத்தை ஒரு தளமாக பயன்படுத்துபவர்களின் கீழ்த்தரமான செயல்பாடுகளுக்கு சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தின் விரிவான நிலைப்பாடும் மிக விரைவில் இணையத்தில் பதிவிடப்படும் மிகுதி மிக விரைவில்
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்இனிது...இனிது...


"அறியாமை இனிது
அனைத்தும் அறிந்த
அறிவை அறிவெனத்
தேரா மாந்தர் முன்
அறியாமை இனிது...!

பேசாமை இனிது
பேசியும்
சாமான்யன் பேச்சு என்பதால்
பேதம் காட்டும்
மனிதர்கள் முன்னே
பேசாமை இனிது...!

செல்லாமை இனிது
சென்றால்
பேச்சால், செயலால்
காமத்தை சீண்டிப் பார்க்கும்
பித்தர் முன்னே
வேலைக்குக் கூட
செல்லாமை இனிது ...!

ழுதாமை இனிது
எழுத்தினால்
சாதிக்க பல இருந்தும்
சாமான்யன் எழுத்து
என்பதினால் 'பூ' என ஒதுக்கும்
வல்லோர் முன்னே
எழுதாமை இனிது...!

ஞாயிறு, 5 மே, 2013

திரு மகேந்திரன்அவர்களின்* பிறந்தநாள் வாழ்த்து

 
இன்று 05-05-13- ஈவினையை பிறப்பிடமாகவும்தற்போது சுவிஸ் ஷவ்கெளச ன்மாநிலத்தில்வசிப்பவர்     (schaffhausen) மகேந்திரதிரனின் பிறந்தநாள் நல் வாழ்த்து அவரை அன்பு   மனைவி யாமினி பிள்ளைகள் ராம்ஷன்,றம்மியா,லண்டனில் இருந்து அம்மா ,சகோதரிகள் வசந்தி குடும்பம் ,குமாரி குடும்பம்,மாமா ரவி குடும்பம்,அமெரிகாவில் இருந்து சகோதரன் மகேசன் குடும்பம்,இலங்கையில் இருந்து ஆசையம்மா ,மாமா ,மாமி சின்னம்மா குடும்பம் மற்றும் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்போடு வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து உறவு இணையங்களின் நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக***,,,,    

இசைத்தென்றலும் ஒரு இசைத்திலகமும் சந்திப்பு""

ஈழத்தில் தலைசிறந்த கலைஞன் ஈழவர் மெல்லிசைபாடகர்வரிசையில் சிறந்துவிளங்கியவர் பாடகராக கவிஞனாக கிந்திப்பாடல்கள் பாடுவதில் சிறந்து விளங்கியவருமாக கொடிகட்டிப்பறந்த ஒருவர் எஸ்.ரி.எஸ் கலையகம் வந்தது இந்த இணையப்பதிவுக்கும் ஏன் இந்த இணையப் பார்வையாளருக்கும் மகிழ்வைத் தரக்கூடியதாகும்அவர் வேறுயாருமல்ல கிந்தி இசைத்திலகம் அன்ரன் டேவிற் அவர்கள் இவர் ஈழத்து உறவுகளுக்காக கலைநிகழ்வை நடத்த நோர்வே நாட்டில் இருந்து யேர்மனி வந்து யேர்மனியில் நடைபெற இருந்த கலை நிழ்வுக்கு நண்பன் மணிக்குரல் தந்தமுல்லைமோகன் அவர்களை அறிவுப்புத்துறைக்கு அவர் சம்மதம் பெற டோட்மூண்ட் நகருக்கு வந்திருந்தபோது
 நண்பன் முல்லைமோகன் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசாவைப்பற்றிக் கூறவே…தொடர்க

வெள்ளி, 3 மே, 2013

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகக்கூட்டம்

 
 சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகம்எதிர்  வரும் (05:05:13)ஆம் திகதி ஞாயிற்று கிழமை  மாலை(19:00)ஏழு மணிக்கு சிறுப்பிட்டி இணைய காரியாலத்தில் ஒன்றிய ஒன்று கூடல் இடம்பெற இருக்கிகின்றது .ஒன்றிய நிர்வாகத்தினர் தவறாது கலந்து கொள்ளவும்.தவிற்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்ட எமது ஒன்றுகூடல் கிராமத்தின் இன்றைய நிலைமை கருதியும் ஒன்றியத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான விரிவான விவாதத்தின் பின்னர் விரைவான சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
 தகவல்.சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்

பிறந்தநாள் வாழ்த்து:சன்,

இன்று 04.05.13 ,18.வது பிறந்தநாளைக்கொண்டாடும் குமாரசாமி அவர்களின் மகன் சன் பெர்லினில் உள்ள தனது இல்லத்தில் 18.வது பிறந்தநாளை  கொண்டாடுகிறார். இவரை அப்பா அம்மா. அக்காமார் சந்திரா.ஐனா.தம்பி சாமி.சின்னப்பம்மா லண்டன். அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். மச்சாள் நித்யா. மச்சான்மார் அரவிந்.மயூரன்.கிஷாந்.திலக்சன் அண்ணா சுதர்சன். அக்கா சுதா. தங்கைமார் சுதேதிகா. சுமிதா.தேவிதா.தேனுகா.தேவதி. அனைவரும் வழம்பொங்கி வாழ்வெல்லாம் நலம் பொங்கி குலம்காத்த கொள்கைகளை நலம் காத்து நல்லவனாய் உறவிலே பற்றுக்கொண்டு உயர்வாக என்றென்றும் ஊர்போற்றும் வல்லவனாய் பார்போற்ற நல்லவனாய் பல்லாண்டு வாழ்க நீ உள்ளத்தால் உறவுகளின் வாழ்த்து

மாதா வின் பாடல்கள்