அத்துடன் எமது தகவல்களையும் ஒன்றியத்தின் செயல்பாடுகள் அனைத்துக்கும் ஆதரவாகவும் அரணாகவும்  இருந்து சமகாலத்தில் தனக்கே உரிய  தனிவழி நின்று ஒரு கிராமத்து இணையத்துக்கான தனது பணியை செய்வதுடன் நின்றுவிடாது எம்மீதான விமர்சனங்களையும் வெளிப்படையாக பதிவிட்டு பாதை தவறாது பயணிக்க உதவிய இந்த சிறுப்பிட்டி இணையநிர்வாகத்தினருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் ஒன்றுபட்ட எமது சிறுப்பிட்டி கிராமத்தின் வளற்சியை முதற்கருவாக முன்னிறுத்தி தனது செயற்பாட்டுடன் முன்வந்திருக்கும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தினருக்கு எமது ஆதரவையும் பங்களிப்புக்களையும் வழங்குவோம் என்பதை பகிரங்கமாக  உறுதிபட அறியத்தருகின்றோம்.
அமையப்பெற்றிருக்கும்  சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தின் முதல் நிலை செயற்பாட்டாளர்களான இரு ராசாக்களினது வழிநடத்தலின் கீழ் அந்த ஒன்றியம் சிறப்புற செயல்படும் என்பது எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.அத்துடன் வயதிலும் அனுபவத்திலும் இவர்களது  தனிப்பட்ட வாழ்வியலின் நேர்மையிலும் எமக்கு இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.
 திரு நடராசா,திரு தேவராசா மற்றும் உங்களுடன் செயற்பட்டுக்கொண்டு இருக்கும் செயற்பாட்டாளர்களுக்கு நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன்  நாமும் ஒன்றுபட்ட கிராமத்தின் வளற்சிக்கு இன்றிலிருந்து செயல்வடிவம் கொடுப்பதுடன் கிராமத்தின் எமது பகுதிக்கான தவிர்க்கமுடியாத சில  முன்னெடுப்புக்களுக்கும் அதற்க்கான பங்களிப்புக்களை பெற்று சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தின் ஊடாகவே செயற்படுத்துவோம் எனக்கூறி இன்றிலுருந்து எமது சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தை மன மகிழ்வுடன்  முறைப்படி தாய் ஒன்றியத்துடன் இணைதுக்கொள்கின்றோம்….நன்றி,  


         siruppiddy1

***சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியநிர்வாகம்***
((((ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு))))