18

siruppiddy

புதன், 22 மார்ச், 2017

பிறந்த நாள் வாழ்த்து திரு பூதத்தம்பி பாஸ்கன் (22.03.17)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு  பூதத்தம்பி பாஸ்கன் இன்று (22.02.2016) தனது பிறந்தநாளை யேர்மனிலில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,
இவரை  அன்பு    மனைவி, சகோதரர்கள்   , 
மருமக்கள், பெறாமக்கள்,இவரை  சிறுப்பிட்டி முத்துமாரிதுணைகொண்டு 
இன்று‌ போல் என்றும்  சிறப்புற்று  பல்லாண்டு  பல்லாண்டு  வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து இந்த  இணையமும் 
வாழ்த்தி நிக்கிறது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 5 மார்ச், 2017

பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி;கந்தசாமி (04.03.17)

 யாழ் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 04.03.2017அன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்   இவரை மகன் குடும்பத்தினர் . மகள்குடும்பத்தினர் , மைத்துனர்  இவர்களுடன்  பெறாமக்கள்  உற்றார் உறவினர்களும் இணைந்து
சிறுப்பிட்டி முத்துமாரி துணைகொண்டு நலமுடன் நிறைவான வாழ்வதில் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என மகிழ்வாக வாழ்வை கொண்டு வாழ்த்து வரும்தாயே பரமேஸ்வரி தெய்வத்தின் பேரைக்கொண்டாய் எம்மைத் தெய்வமாக ஆட்சிகொண்டாய் நன்மையிலும் தீமையிலும் நற் கருத்து உரைப்பவளே வாழ்க இன்னும் பல்லாண்டு என மனமகிழ்வோடு வாழ்த்துகின்றோம் உறவுகளுடன் இந்த இணையமும் இணைந்து வாழ்த்தி நிற்கிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 3 மார்ச், 2017

சிறுப்பிட்டி முத்துமாரியமன் புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றுள்ளது



சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அருள் பாலித்து எமை எல்லாம் ஆண்டு வருகிறாள்
அவள் அருளால் எமது வாழ்கை சிறந்தோங்கி வளம் ஓங்கி வாழ்வோங்கி நிற்க காரணமாய் காட்சி தரும் நாயகி அவள்எம்மை எல்லாம் ஆட்கொள்ளும் சிறுப்பிட்டிஇலுப்பையடி முத்துமாரியமன் ஆலயத்தில் புதிய நிர்வாத்தெரிவு இடம்பெற்றுள்ளது அந்த நிர்வாகத்தின் புதிய தெரிவானவர்கள் விபரத்தை இணைப்பதில் ஊரின் இணையமாம் உங்கள் இணையம் தன் பணி செய்கின்றது ,

அந்த வகையில் புதிய நிர்வாகத்தில் பொறுப்போற்றவர்கள் விபரம் கிழ் இணைக்கப்படுகின்றது

தலைவர்     : க.தம்பிராசா
உபதலைர   :ஆர் ம ரன்
செயலாளர் : செ.ஸ்ரீதரன்
உபசெயலாளர்: திருமதி புனிதாவதி.சிவலிங்கம்
பொருளாலர் : பொ.ஸ்ரீதரன் ( வசந்த்

நீர்வாக உறுப்பினர்கள்
———————————–
திரு கோடிஸ்வரன்
யோ.ரவி
வி.சோதிப்பிள்ளை
பூ. தயாபரன்
சி.ஜெயதர்சன்
சி.தவேஸ்வரன்
திருமதி.மல்லிகாதேவி.நடராசா
கு.கருணாதேவி
திருமதி புஸ்பராணி
திருமதி பட்டு
சு.ஜெயந்தி
ப.நிசாந்தன்
திரு. அருந்தவநேசன்

என புதிய நிர்வாக்குழு தெரிவாகியுள்ளது,

இவர்கள் செயல்பாடுகள் நீதி உள்ளதும், நேர்மையுள்ளதுமாகவும், ஊரின் சிறப்புக்கானதாக இருக்கவும், அனைவரும் வாழ்த்தி இந்த ஆண்டுக்கான திவிழாவை தவிர்த்து ஆலயம் புனரமைப்புச் செய்யப்பட உள்ளது அதற்கு திருவிழா உபயகாறர்களும் ஊர் ,உறவுகளும் உங்கள் உதவிகளை வளமைபோல் அளித்து, ஆலயத்தின் சிறப்புக்கு இதுவரை இருந்ததுபோல் உங்கள் ஒத்துழைப்பை நல்குநீர்கள் என்பதில் மாற்றம் இல்லை,

நிலத்திலும் புலத்திலும் உறவுகள் கூடி நிற்பதால்தான் எங்கள் ஆலயம் சிறந்து நிற்கின்றது அம்மன் துனைகொண்டு அவள் அருள் வேண்டி அவள்பாதம் பணிசெய்வோம் சிறக்க 
ஊரும் உலகமும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 18 பிப்ரவரி, 2017

மரணஅறிவித்தல் திரு சிதம்பரி கோவிந்தன்

தோற்றம் : 5 யூன் 1942 — மறைவு : 17 பெப்ரவரி 2017
யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரி கோவிந்தன் (சந்திரன்)அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரி, அம்மிணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, காந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சனாதேவி(சுவிஸ்), கலாதேவி, நளாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம், முருகேசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிறேமதாஸ்(சுவிஸ்), மகேஸ்வரன், செளதரதாசன் ஆகியோரின் பாசமிகு அன்பு மாமனாரும்,
சிவக்கொழுந்து, திருநாவுக்கரசு(சுவிஸ்), பாலசந்தரம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிறேமியா(சுவிஸ்), றஜிதன்(சுவிஸ்), கஜீபன், திஷாளினி, சத்தீபன், சர்மிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஞ்சனா(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788646967
மகேஸ்வரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774914252
யாழிந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447472816361
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 11 பிப்ரவரி, 2017

பிறந்த நாள் வாழ்த்து ஐெயக்குமாரன் சுமிதா (10.02.17)

சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதாஅவர்கள் 10.02.2017அன்று தனது பிறந்த நாளை 
கொண்டாடுகிறார்,
இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமாருடன் சிறுப்பிட்டி இணையநிர்வாகமும் இணைந்து .வாழ்த்துகிறது,
பதுமை இவள்
பலர் போற்ற வாழ்ந்து
என்றும் நம் இனத்து
பண்பு காத்து
நல்லவளாய்
நல்லோர்கள்போற்ற
நாள் எல்லாம்
வாழ்க வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர், இறைஅருள் பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
               நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  
  வாழ்த்துகின்றன. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

பிறந்தநாள் வாழ்த்து: திரு சுப்பிரமணியம் தவராசா (07.02.17)

யாழ் சிறுப்பிட்யைபிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான,திரு , சுப்பிரமணியம் தவராசாஅவர்கள் 07.02.2017 இன்று  தனது  ஐம்பதாவது  பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இவரை அன்பு மனைவி, பிள்ளைகள்,லண்டனில் வசிக்கும்  உறவுகள்  “யேர்மனியில்வசிக்கும் அக்கா அத்தான்  குடும்பத்தினர், சகோதரர் குடும்பத்தினர்கள் ”சுவிஸ்சில்வசிக்கும்உறவுகள்   சிறுப்பிட்டியில் வசிக்கும்  குடும்பத்தினர்கள் , அத்தான்  , மச்சாள், மச்சாள் குடும்பத்தினர்,யேர்மனியில்வசிக்கும்நண்பர்கள் உற்றார்      உறவினர்கள் அனைவரும்வாழ்த்துகின்றனர் இவரை 
  சிறுப்பிட்டி  முத்து மாரி அம்மன்  இறை அருள் பெற்று  என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருக்க   வாழ வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து இவரை   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன் ,,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 30 ஜனவரி, 2017

மரண அறிவித்தல் திரு சிங்கரத்தினம் இராமநாதன்

பிறப்பு : 24 ஓகஸ்ட் 1963 — இறப்பு : 28 சனவரி 2017
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிங்கரத்தினம், அசலாம்பிகை தம்பதிகளின் மகனும், சுழிபுரம் கிழக்கை சேர்ந்த கிருஷ்ணன் ராசாத்தி தம்பதிகளின் மருமகனும்,
கிருஷ்ணராணி அவர்களின் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீரங்கநாதன், ரகுநாதன், மற்றும் ரத்தினாம்பிகை, கமலவேணி ஆகியோரின் சகோதரரும்,
சிறீகிருஷ்ணராஜா(சிறீ), ரவீந்திரராஜா(ரவி), தவேந்திரராஜா(தவம்), ஜராஜிதா(சரா) ஆகியோரின் மைத்துனரும்,
ரிஷி, வைஷாலி, மவீனா, ஷியாம், ரிஷ்ரன் ரேஜா, ரியானா, லிசாயினி, துசிபன், பிருந்தன், டனிஸ்கரன், கிரிஷாந், டர்சி, பானுமதி, கிருஷ்ணமதி, வளர்மதி ஆகியோரின் மாமனாரும்,
லோஷன், கஜிதா, தாட்சாயினி, கோபிகன் ஆகியோரின் சித்தப்பாவும்,
ஆரியன் ரங்கன் ஜாவீஸ் அவர்களின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 30/01/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 31/01/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 31/01/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 31/01/2017, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada  
தொடர்புகளுக்கு
ராணி(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி: +14163475141
ரத்தினா(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770891264
சிறீ(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +19052164831
தவம்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +16472977165
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


மாதா வின் பாடல்கள்