18

siruppiddy

செவ்வாய், 30 ஜூலை, 2013

இறப்புத்தகவல் திரு ச.மூத்ததம்பி

 
                                             திரு சரவணமுத்து மூத்ததம்பி
              (முன்னாள் வர்த்தகரும், ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தர்மகர்த்தர்)
                                   தோற்றம் : 26 ஏப்ரல் 1930 — மறைவு : 26 யூலை 2013

யாழ். சிறுப்பிட்டி கிழக்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து மூத்ததம்பி அவர்கள் 26-07-2013 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற முத்துப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
நடராஜா(பிரான்ஸ்), சிவராஜா(லண்டன்), சிறீஸ்கந்தராஜா(லண்டன்), தர்மராஜா(பிரான்ஸ்), செல்வராஜா(பிரான்ஸ்), தவமணிதேவி(இலங்கை), துரைராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இந்திராணி, சரஸ்வதி, திலகேஸ்வரி(கலா), ஜீவா, றஞ்சனதேவி, யோகநாதன்(யாழ். சுகாதாரத் திணைக்களம்), இந்துராணி ஆகியோரின் அன்பு மாமனும்,
சிதம்பரநாயகி, இரத்தினசபாபதி, சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு மற்றும் தங்கமலர், மனோரஞ்சிதமலர் ஆகியோரின் சகலனும்,
ஜெனீத்தா, பகீரதன், சோபிகா, ரோகினி, சுரேகா, சிந்துஜா, கெளசல்யா, சாருஜன், சராஜகன், அஸ்வின், ஆரணியா, அபிராம், அஸ்வினி, கார்த்திபன், சங்கவி, துஷாந், துர்க்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை 29-07-2013  திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில்  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், மருமகன்
தொடர்புகளுக்கு
நடராஜா — பிரான்ஸ்
தொலைபேசி: +33141950799
செல்லிடப்பேசி: +33751573760
சிவராஜா — பிரித்தானியா
தொலைபேசி: +442035838901
செல்லிடப்பேசி: +447837784469
சிறீஸ்கந்தராஜா(சிறீ) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447572692240
தர்மராஜா — பிரான்ஸ்
தொலைபேசி: +33148947769
செல்லிடப்பேசி: +3365266755
செல்வராஜா — பிரான்ஸ்
தொலைபேசி: +33143083701
செல்லிடப்பேசி: +33616365677
யோகநாதன் தவமணிதேவி — இலங்கை
தொலைபேசி: +94212230068
செல்லிடப்பேசி: +9477704916
துரைராஜா(துரை) — பிரித்தானியா
தொலைபேசி: +442084291898
செல்லிடப்பேசி: +447988860710

சனி, 27 ஜூலை, 2013

கறோக்கே பாடகர் பாபாயே அவர்கள்


 
நிலவு ஒரு பெண்ணாகி என்ற பாடலோடு உங்களை இணையத்தினூடக சந்திக்கும் பாபாயே அவர்கள்.. ஆனைக்கோட்டை மண்ணுக்கு புகழ் சேர்க்கும் புகழ்பெற் கறோக்கே பாடகர் பாபாயே அவர்கள் யேர்மனி கம்நகரில் வசித்து வருபவர் நீண்டநாட்களாக கறோக்கே இசையில் பல பாடல்களை பாடிவருபாவர் மேடை நிகழ்ச்சி ஒலிபரபப்பாளர் இவர் போன்ற சிறந்த , கலைஞர்கள் எங்கிருந்தாலும் உயர்வுற எமது நவற்கிரி இணையங்களின் வாழ்த்துக்களும் உரித்தாகுக

காந்தக் குரலோன் கணேஸ் பாடிய பக்திப் பாடல்

காந்தக் குரலோன் கானமணி கணேஸ் அவர்கள் பாடகன் மட்டு மல்ல பண்பாளர் பக்திமான் தான் செய்யும் கருமங்களில் நேர்த்தியாகச் சிறப்பாகச் செய்வது மட்டுமல்ல ஆலயங்களுக்கு பணிசெய்பவர் அப்படிப்பட்ட பக்தரும் கலைஞரும் ஆன கணேஸ் அவர்கள் யேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் அவர்கள் உபயமான பூங்காவனத் திருவிழா சிறப்புற நடை பெற்றது அத்தருணம் அவர் தனது கானக்குரலால் பாடல்கள் பாடி வந்திருந்த பக்தர்களை மகிழ்வித்தார் ,இவருக்குஎமது நவற்கிரி இணையங்களின் வாழ்த்துக்களும் உரித்தாகுக அதில் ஒரு பாடலை இங்கே
 காணலாம்

 

ஞாயிறு, 21 ஜூலை, 2013

சுவெற்றா ஸ்ரீ கனக துர்க்கை கொடியோற்ற உற்சவம் !

                                
 
 சுவெற்றா ஸ்ரீ கனக துர்க்கை ஆலயத்தின் கொடியோற்ற விபரனம் ஆண்டு தோறும் அலங்கார உற்சவத்தை காணும் அம்மன் இந்த அண்டு பதின்ஐந்தாவது உற்சவத்தை காண உள்ளா அத்தருனம் அடியார்கள் வந்து தரிசித்து அம்மன் திரு அருளை பொற வருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள் கடவுள் செயல் அன்றி ஏது இந்த வாழ்வு கருணை தெய்வம் அவள் அடியை நாடு தொழு தினம் தொழு பிணிகள் தீரும் துன்பம் அகலும் தொழுது வாழ்வோம் துன்பம்தீர:

திங்கள், 15 ஜூலை, 2013

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர் கட்டுமான தகவல் !!!

 
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர் கட்டுமான தகவல் ஒன்று
1சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர் தேவஸ்த்தான கட்டுமான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது  அதற்க்கான பங்களிப்பை  புலம் பெயர்வாழ் சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் அடியார்களிடம்  வைரவர் நிர்வாகம்  வேண்டி நிற்கின்றது.  சுவிஸ் மற்றும்  சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் மெய்யடியார்களிடமும்  பங்களிப்பை பெற்று  ஞான வைரவர்  நிர்வாகத்தினரிடம் உரிய நேரத்தில் உதவிடும் நோக்குடன் ஏற்கனவே ஒரு வழி செய்யப்பட்டு இணையத்திலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
 .இருந்தும் நாம் விரும்பும் வகையிலும் விரைவும் இல்லாத காரணத்தாலும் எம் கிராமத்து இளைஞர்களின் முன்னெடுப்பை தொய்வின்றி அவர்கள் தொடர்பதற்க்காக்கவும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் தனது இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் பொறுப்பெடுத்து நிதியினையும் பெற்று வருகின்றது  .வரும் நாட்களில் நாம் நேரடியாகவும் தொலை பேசியூடாகவும் எம்மால் முடிந்தவரை தொடர்புகொள்வோம் .ஸ்ரீஞான வைரவ மெய்யடியார்கள் உங்களால் முடிந்த பங்களிப்பை செலுத்தி கட்டுமான பணியினை விரைவுபடுத்துங்கள் .
விரைவான தொடர்புகளுக்கு :-
                        அருண் :079 671 07 88
                        விமல் : 078 603 37 05                         
இதுவே சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் என்ற நாமத்துடன் முன்னெடுக்கும் இறுதிப்பணி புனிதப்பணியும் கூட .


செவ்வாய், 9 ஜூலை, 2013

பிறந்தநாள் வாழ்த்து: செல்வி சப்தனா


இணுவிலை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு/திருமதி பிரபாகரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி சப்தனா இன்று (09.07.13)தனது ஒன்பதாவது பிறந்தநாளை  இல்லத்தில் இனிதே கொண்டாடுகின்றார்.
இவரை  அன்பு அப்பா பிரபாகரன் ,அம்மா சுதர்சினி ,அண்ணா வர்னுகன் ,மற்றும் உறவினர்கள் நண்பிகள் ,குடும்ப .உறவுகளுடன் இந்த நவற்கிரி இணையங்களும்  நோய் நொடியின்றி, பல்கலைகளும் கற்று பார் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம்  வாழ்க வளர்க வென  வாழ்த்துகின்றோம்.

திங்கள், 8 ஜூலை, 2013

இறப்புத்தகவல், (காந்தன்.சுவிஸ்}

 
                                               திரு அமிர்தலிங்கம் சிறிஸ்கந்தராசா
                                                                  (காந்தன்)
                                    பிறப்பு : 3 பெப்ரவரி 1973 — இறப்பு : 5 யூலை 2013
யாழ் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பாசல் Arlesheim ஐ வதிவிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் சிறிஸ்கந்தராசா அவர்கள் 05.07.2013 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அமிர்தலிங்கம் புஸ்பராணி தம்பதிகளின் மூத்தமகனும், திருச்செந்தூர்நாதன் காலஞ்சென்ற இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுபாஜினி(சுபா) அவர்களின் அன்புக் கணவரும்,
சியானுஜா, சிகானி ஆகியோரின் ஆசை தந்தையும்,
சிறிதரன்(தரன்-சுவிஸ்), கலாமதி(மதி-கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருசாளினி(சாலா-சுவிஸ்), கிருபானநந்தன்(ரகு-கனடா), சுதாகரன்(சுதா- பிரான்ஸ், சுதாஜினி(சுஜி-சுவிஸ்), சுகிர்தா, சுகந்தன், சுதர்சன், சுகன்யா, சுதர்சினி, சுபாஸ்கரன் ஆகியோரின் அன்பு  மைத்துனரும்,
அபிஷா, அபிரா, அமீனா, அபர்னா, எழிலரசி, ஓவியன் ஆகியோரின் அன்பு  மாமாவும்,
ஜெகஸ்திகா, எனோக், மகிழினி, கனிமொழி, திசானி ஆகியோரின் அன்புப்  பெரியப்பாவும்,
காலஞ்சென்ற சந்திரலிங்கம்(சுவிஸ்), விமலாம்பிகை(பிரான்ஸ்), விஜயகிரீபன்(கல்மடு), அருள்ரூபன்(இடைக்காடு), ரமணன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சர்மினி, சுஜீபன், சிந்துசன் ஆகியோரின் அன்புச்  சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் Friedhof Bromhübel, Dornachweg 7, 4144 Arlesheim எனும் முகவரியில் தினமும் பி.ப 3:00மணி முதல் பி.ப 6:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்படும்.
இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787641952
தரன்(சகோதரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41767642175
விஜயானந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799383428
மயூரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763241079
மனைவி(வீடு) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41617018433

மாதா வின் பாடல்கள்