
சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும்
ஞானச்செருக்கும் அவனியில்
எவருக்கும் அஞ்சாது அன்பாலும் பண்பாலும்
அனைவரையும் அரவணைத்த எம் அன்புத்தெய்வமே!
கண்மூடித்திறக்கும் நேரத்தில் எங்களைத்
தவிக்கவிட்டு நிரந்தரமாக பிரிந்தீர்களே
உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார்?
மீண்டும் ஒருமுறை திருமுகம் காண
உள்ளம் கிடந்து பரிதவிக்கின்றது...