18

siruppiddy

ஞாயிறு, 30 ஜூன், 2013

ஸ்ரீஞான வைரவர்:கட்டுமானப்பணிப்புகைப்படங்கள்



சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர்  ஆலைய கட்டுமானப்பணிகள்  வருட திருவிழாக்கள் முடிந்த பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஆலய வெளி மதில் வேலைகள் தற்பொழுது  நடைபெற்ற வண்ணம் உள்ளது .இன்றைய புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு பதிவிடப்படுகின்றது .
                                                         

ஞாயிறு, 23 ஜூன், 2013

பிறந்தநாள் வாழ்த்து:செல்வி யானுகா

 
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் கொலண்டை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி யானுகா தனது மூன்றாவது (24.06.13) பிறந்தநாளை தனது இல்லத்தில் தம்பி வேனுயன் தங்கை ஸ்ருதிகாவுடன் இனிதே கொண்டாடுகின்றார். கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துபவர்கள்
அப்பா அம்மா சிறுப்பிட்டியில் வசிக்கும் அப்பம்மா ..ஜேர்மனில் வசிக்கும் அம்அப்பா அம்மம்மா . சிறுப்பிட்யில் வசிக்கும் மாமா .அத்தை மச்சாள்மார்… ஜேர்மனில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அக்காமார் . கனடாவில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணாமார் அக்கா . சுவிசில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணர்மார் .. கனடாவில் வசிக்கும் மாமா அத்தை மச்சாள் மார் .லண்டனில் வசிக்கும் மாமா மாமி மச்சான் மச்சாள், லண்டனில் வசிக்கும் மாமா மற்றும் அனைத்து உறவுகளும் யானுகவை வாழ்த்துகின்றனர்.
செல்வி  யானுகாவை உறவு இணையங்களும்  நோய் நொடியின்றி, பல்கலைகளும் கற்று  பார் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றோம்,
{காணொளி }

டோட்முண்ட் சிவன் திருவிழாவிபரனப்பதிவு!,,,,

மெய்யடியார்களே!
ஐரோப்பாக் கண்டத்தில் ஜேர்மன் திருநாட்டில் சகலவளங்களும் சூழப்பெற்ற நோட்றைன் வெஸ்ற்பாலின்
 மாநிலத்தில் அறிஞர்கள் சான்றோர்கள சமய சமூகப் பற்றாளர்கள கலைஞர்களையும் தன்னகத்தே கொண்ட டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் 13.07.2013ஆரம்பமாகி தொடர்ந்து பத்துத் தினங்கள் மஹோற்சவப் பெருவிழா
 சிறப்புத்திருவிழாக்களாக.
13.07.2013 சனிக்கிழமை கொடியேற்றம்
17.07.2013 புதன்கிழமை நடனத்திருவிழா
18.07.2013 வியாழக்கிழமை மாம்பழத்திருவிழா
19.07.2013 வெள்ளிக்கிழமை வேட்டைத்திருவிழா
20.07.2013 சனிக்கிழமை சப்பறத்திருவிழா
21.07.2013 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா
22.07.2013 திங்கட்கிழமை தீர்த்தத்திருவிழா
23.07.2013 செவ்வாய்க்கிழமை பூங்காவனம்
 அனைவரும் வருக இறை தரிசனம் பெறுக,
 

சனி, 15 ஜூன், 2013

விநாயகர் வருடாந்த மகோற்சவம்

அச்சுவேலி பத்தைமேனி மீட்டிலான்கூடல் விநாயகப்பெருமான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 14.06.2013 கொடியேத்த திருவிழாவுடன் மிகவும் சிறப்பாக ஆரம்பமாகியது 8 வது திருவிழாவான சப்பறத்திரு விழாவும்,9 வது திருவிழா தேர்த்திருவிழாவும் ,10 வது திருவிழா தீத்தத்திருவிழாவும் நடைபெற்று இனிதே முடிவுறும் என்பதை அறியத்தருகின்றோம்,

வியாழன், 13 ஜூன், 2013

இறப்புத்தகவல்,திரு முத்தையா பாலசிங்கம்

 
ஈவினையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பாலசிங்கம்(பாலர்) இன்று வியாழக்கிழமை (13.06.2013) காலமானார்.அன்னார் முத்தையா தங்கமுத்துவின் மகனும் சின்னம்மாவின்(சிறுப்பிட்டி) அன்பு கணவரும் ,சிவபாலினி ,சிவாஜினி ,சிவராஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அசோக்குமார், கிரிமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்.அசாங்கன் ,கிருஷ் ணிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகனம் :நாளை (14.06.13)வெள்ளிக்கிழமை மதியம் ஒருமணிக்கு ஈவினை விலங்கன் மயானத்தில் நடைபெறும்
 

சனி, 8 ஜூன், 2013

பயணிகளிடம் அபராதம் வசூலிக்கும் சுவிட்சர்லாந்து


 சுவிட்சர்லாந்து நாட்டில் வெளிநாட்டுப் பயணிகள் வாகனங்களை ஒட்டும் போது அரசு குறிப்பிட்டுள்ள வேக வரம்பை மீறினால் அபராதம் செலுத்துதல் அல்லது நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
சொந்த நாட்டிற்குத் திரும்பியிருந்தாலும் அவர்களது வீடு தேடி இந்த உத்தரவுக் கடிதம் தரப்படுகின்றது. கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து, இதுபோன்று போக்குவரத்து விதிமுறைகளை மீறிய இந்தியப் பயணிகளிடமும் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டிருக்கின்றது.
இந்திய காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு, 9 ஆயிரம் முதல் 53 அயிரம் வரையிலான அபராதத் தொகைகள் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை காவல்துறையின் குற்றவியல் பிரிவு, சர்வதேச காவல்துறையின் குழுவாக செயல்படுகிறது. இதனைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் நீதிமன்ற உத்தரவுகள் இவர்களுக்கு அனுப்பப்படும். இங்குள்ள அயல்நாட்டுக் குற்றவாளிகளை அந்தந்த நாடுகளில் ஒப்புவிக்கும் பிரிவு, இந்த உத்தரவுகளை உரியவர்களிடம் சேர்க்கும்
 

பாரட்டு விழா மாண்புமிகு எம் கவிஞன்"


கலைஞன் என்று எவனும் பிறப்பதில்லை அவன் அவனிடம் உள்ள திறன் கடவுள் கொடுத்த வரமாகும் அந்த வகையில்தான் கவிஞன் தான் கற்றதையும் தனது கற்பனைத்திறனாலும் மக்கள் அங்கீகரிக்கிறார்கள்அதே போல் ஆலயங்களும் தங்கள் வளர்ச்சியோடு கலைஞர்களையும் வளர்த்தால் எம்மவர் கலையும் உயரும் அதற்கு உதார ணம் (ஸ்ரீ கனகதுர்க்கைஆலயம்) யேர்மனியில் சிறந்து விளங்கும் ஆலயங்களில் ஒன்றான சுவெ ற்றா ஸ்ரீ கனகதுர்க்கை ஆலயத்தினரால் கௌரவிக்கப்பட்ட குளந்தைக் கவிஞர் என். வி சிவநேசன் அவர்கள்
 யாழ்மண்ணில் ஆனைக்கோட்டை தந்த சிறந்த சிந்தனையாளர் என்று கூடக் கூறலாம்
 பல்துறைசார்ந்த ஒரு முன்டோடிக்கலைஞன் ஆன இவர்
 மலரும் மாலைகள் வீ டியோ பத்திரிகை நடத்துனராக வலம் வந்தவர் ஒளிப்பதிவாளனாக புகழ்கொண்டவர் யேர்மனியில் தமிழ் வானொலிகள் இல்லாத
 காலத்தில் உள்ளுர் வானொலி நடத்தியவர் பாரிசில் இருந்து ஒலிபரப்பான
 எ பி சி வானொலியின் ஒருமணித்தியால யேர்மன் நேரத்தை பல ஆண்டுகளாக நடத்தியவர் கவிஞராக சிறந்து விளங்குபவர் கண்ணில்கண்டதை
சிற்பமாக்கும் திறன் கொண்டவர் மட்டும் அல்ல எழுத்தாளர் பல மழலைகளுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார் அவற்றில்சில பாடல்களாக வெளி வந்துள்ளது அவை புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளையாக வெளிவந்துள்ளது
 இந்த இசைப்பேளையை வெளியிட்டு வைத்திருந்தவர் தென் இந்தியத்திரைப்படப்பாடகர் தீபன் சக்கரவர்த்தி ஆவார் அவர் இவரின் பாடல் வரிகள் பற்றிப் பாராட்டினார்
 அத்தோடு ஐரோப்பாவில் முதல் முதல் வெளியான முழுமையான மழலைகளின் நம்மவர்படைப்பாகும் அதுமட்டுமல்ல இதில்பாடிய சிறுவர்கள் யேர்மனியில் பிறந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது இதில் கவிஞர் சிவநேசன் சுதந்தினி.தேவராசா சுதேதிகா.தேவராசா தேவிதா.தேவராசா தேனுகா.தேவராசா தேவதி. தேவராசா பாரத்.சிவனேசன் டிலக்சன்.சிவனேசன் தினேசன்.சிவனேசன் ஆகியோர் பாடியுள்ளனர் இதற்கான இசையை ஈழத்து இசைக்கவிஞன் இசைக்த்தென்றல் சிறுப்பிட்டி எஸ‌் தேவராசா அவர்கள் வழங்கி இருந்தார் இவ் இ‌சையமைப்பாளர் நோர்வேயில் உருவான முழுநீள வீடியோ படத்துக்கும் குறும் படங்களுக்கும் 10 மேற்பட்ட பக்திப்பாமாலைஇறுவெட்டுகளுக்கும் பல தேசியப்பாடல்களுக்கும் பற்பல மெல்லிசைப் பாடல்களுக்கும் இசையமைத்தவர் என்பது
 எம் ஈழமண்ணுக்குப் பெருமையாகும் கவிஞர் என். வி சிவநேசன் பல
 பக்திப்பாமாலைகளுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார் குறிப்பாக டென்மார்க் அபிராமி அம்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கை ஆகிய ஆலயப்பாடல்கள் எழுதியுள்ளார்அத்தோடு சிறுப்பிட்டி கிராமத்து பாட்டப்பா சைவப்பா என்ற பெரியார்கள் கௌரவிக்க சிறுப்பிட்டி மக்களுடன் ஊர் இணையமாம் சிறுப்பிட்டி இணையமும் இணைந்து முன்வந்தபோது அத்தருணத்தில் கவிஞர் என்.வி.சிவநேசன் அவரது கவிதையின் ஆரம்பத்தால் முக்கவிஞர்களாக இணைந்து சுவிஸ‌் இணையக் கவிஞன் சிறுப்பிட்டி விமல் இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ‌்.தேவராசா ஆகியோரால் இணைந்து உருவக்கப்பட்ட பாடல் இணையப்பரப்பில் இன்றும் உலாவருகின்றது கூறத்தக்கது இவர்கள் போன்றவர்கள்
 சிறந்தோங்க நம்மவர்களுக்கான களங்களின் கதவுகள் திறக்கப்படாமையே காரணம் சிந்தனையாளர்களுக்கு பரந்த வெளியில் திறந்துவைப்ப துயார்? எமது ஈழக்கலைஞர்களின் கலையை வளர்ப்பது யார்? இவரின்திறனுக்கான களம் இன்னும் கிடைக்கவில்லை தவமலர் சிவனேசன் அவர்கள் தயாரிப்பில் புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளை
 பின் காந்தக்குரலோன் கானமணி
 திரு .கணேஸ‌் தயாரித்து வெளிவந்துள்ள சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கை பாமாலை டென்மார்க் அபிராமி அம்மன் பாமாலைகளே இவரை இனம் காட்டியுள்ளது என்பதே உண்மை அதனால் கலைவளர இணைந்து வளம் சேர்ப்போம் பேச்சோடு இருப்பது பலம் அல்ல செயல் ஆக்கினால் கலை உயரும் ஈழவர் கலைவளரும் இதை உங்களுடன் பகிர்ந்து கொண்டதால் மிக்க மகிழ்ச்சி துளிர்த்துவளர்ந்துவரும்   கவிஞர் என்.வி.சிவநேசன் பணி உலகெங்கும்பரவ, எம், நவற்கிரி இணையங்களும் நிலா வதை  இணையமும் இணைந்து வாழ்க  வாழர வென மனம்ஆர வாழ்த்துகின்றோம்   மீண்டும் மற்றும் ஓர் வளரும் கலைஞருடன் ‌ இணைவோம், பல புதிய ,புதிய , இசைக்கவிஞர்களையும்  கலைஞரையும் ஊக்கிவித்து உயர்வுற  சிரமம் பாராது தன்நலம்அற்ற எஸ‌்.ரி.எஸ‌் கலையகத்திற்கும் கலை மேதை எம் உறவான   இசைக்கவிஞன் சிறுப்பிட்டி {யேர்மனி}எஸ‌்.தேவராசாஅவர்களுக்கு எமது நவற்கிரி இணையங்கள், தேவன் ராஜாகுடும்பத்தின் நல் வாழ்த்துக்களும்   பாரட்டுக்களும் உரித்தாகுக,, நன்றி "",

திங்கள், 3 ஜூன், 2013

உறவுகளை தேடி,,,.

தென்னாப்பிரிக்கா தமிழ் குடும்பம் பிறந்த மண்ணை விட்டு பிழைப்புக்காக வேறு நாட்டுக்கு செல்பவர்கள் அங்கு சென்றபின் அங்குள்ள வாழ்க்கை முறை, உழைப்பு போன்றவை படிப்படியாக தாய்மண்ணை, உறவினர்களை இந்த வேகாமான யுகத்தில் மறக்க வைத்துவிடுகிறது. ஆனால், கடல் கடந்து, கண்டம் விட்டு கண்டம் போய் மூன்று தலைமுறைகளை கடந்து, மொழியை மறந்த தமிழ் குடும்பம் ஒன்று தன் முன்னோர்கள் பிறந்த பூர்வீக வேர்களை தேடி தென்னாப்பிரிக்காவில் இருந்து தமிழகத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தன் உறவுகளை கண்டறிந்ததோடு அவர்களோடு பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவாம்பாடி கிராமமே உறவுகளை தேடி வரும் குடும்பத்தை வரவேற்க உற்சாகமாக காத்திருந்தார்கள். காரில் இருந்து 60 வயது முத்துகிருஷ்ணன் 55 வயது மாரியம்மா மாரியம்மாவின் பாட்டி 70 வயது மீனாட்சியம்மாள் இறங்கியதும்மே வானவேடிக்கை வெடித்து மேளதாளம் முழங்க இளைஞர்கள் மாலைகள் சூட்ட குழந்தைகள் ரோஜாப்பூக்களை தர பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்ற அன்பை கண்டு உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டனர். கிராம மக்கள் பேசிய தமிழ் அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் பேசிய ஆங்கிலம் இவர்களுக்கு புரியவில்லை. மீனாட்சியம்மாள் மட்டும் சிலச்சில தமிழ் வார்த்தைகளில் பேச எல்லோருக்கும் சந்தோஷமாகி கைதட்டி மகிழ்ந்தனர். கிராமத்தில் இருந்த கோயில்களுக்கு நடக்க வைத்து அழைத்து சென்றனர். அப்போது முத்துகிருஷ்ணன் இந்த தெருவுல எங்க தாத்தா விளையாடியிருப்பாரு தானே என உதவிக்கு இருந்த பேராசிரியர் பரணீதரனிடம் கேட்க அவர் ஆமாம் என தலையாட்டியதும் உணர்ச்சி வசப்பட்டு தரையை தொட்டு வணங்கினார். கோயிலுக்கு சென்றனர். கோயில் உள்ளே நுழைந்ததும் இது எங்க தாத்தா வணங்கன கோயிலா எனகேட்டு வணங்கினார்முன்னால் இராணுவ வீரரான இராமச்சந்திரன் எங்க கொள்ளு தாத்தாவோட அத்தை பையன் பச்சமுத்து அவர்க்கு கல்யாணம் செய்து வச்சியிருக்காங்க. அவருக்கு பூவாசை இராஜமாணிக்கம்ன்னு இரண்டு பசங்க. இங்க அப்ப வறுமை அதிகமாக இருந்ததால ரொம்ப கஸ்டப்பட்டாறாம். அந்த நேரம் நம்ம நாட்ட ஆண்ட வெள்ளைக்காரங்க பினாங்கு, மலேசியா, தென்ஆப்ரிக்கா நாடுகளுக்கு வேலைக்கு அழைச்சிம் போயிருக்காங்க. வறுமையில இருந்தாலும் திடகாத்திரமா இருந்த பச்சமுத்து கப்பல்ல 1890ல தென்னாப்பிரிக்காவுக்கு வேலைக்கு போயிருக்காரு. அப்படி போனவர் திரும்பி வரக்காணோம். அவரைப்பத்தி எந்த தகவலையும் காணோம். அவரோட குடும்பம் இங்க ரொம்ப கஸ்டப்பட்டாங்கன்னு எங்க தாத்தா எங்கப்பாக்கிட்ட சொல்லியிருக்காரு. அத எங்கப்பா என்கிட்ட சொன்னாரு. நான் இத எம்புள்ளைங்களுக்கிட்ட சொல்லி வச்சியிருந்தன். இப்ப திடீர்ன்னு ஒரு குடும்பம் நாங்க தான் உங்க சொந்தம்ன்னு வந்து நிக்கறாங்க. தென்னாப்பிரிக்காவுக்கு போன பச்சமுத்து அங்கப்போய் முனுசிங்கற தமிழ் பெண்ண கல்யாணம் செய்துக்கிட்டாராம். அங்க அவருக்கு இரண்டு பசங்க பிறந்துயிருக்காங்க. அவுங்களுக்கு முருகா ராஜான்னு பேர் வச்சியிருக்காரு. அதல ராஜன் பையன் முத்துகிருஷ்ணன் தன்னோட மனைவியோட தென்னாப்பிரிக்காவுலயிருந்து உறவுக்காரங்களை தேடி வர்றதா எங்க ஊர் பேராசிரியர் பரணிதரன் சொன்னாரு அவுங்கள பாத்தது ரொம்ப சந்தோஷமாயிருக்கு என நெகிழ்ந்தவர்
சென்னையில் தனியார் கல்லூரி வணிகவியல் பேராசிரியர் பரணிதரன் நம்மிடம், முத்துகிருஷ்ணன் தென்னாப்பிரிக்காவுல ஈஸ்ட் வெஸ்ட் புரோவின் அரசாங்கத்தின் ஆடிட்டராகவும் அவரோட மனைவி மாரியம்மா தென்னாப்பிரிக்கா தேசிய வங்கியின் நிர்வாக மேலாளராக இருக்காங்க. ஒரு வருஷத்துக்கு முன்ன இங்க வந்து அவரோட தாத்தா பெயரை சொல்லி விசாரிச்சியிருக்காரு. மொழி பிரச்சனையால கண்டறிய முடியல. போகும்போது விசிட்டிங் கார்டு தந்துட்டு போயிருக்காரு. அத எங்கிட்ட தந்தாங்க. நான் மெயில் மூலமா இவரை தொடர்பு கொண்டு பேசனன். எங்க ஊர்லயிருந்து அவரோட தாத்தாவுக்கு 1910ல நிறைய கடிதங்கள் போயிருக்கு. அத ஸ்கேன் பண்ணி அனுப்பனாரு. அதலயிருந்த எங்க ஊர் ஆர்.சி ஸ்கூல் தலைமையாசிரியர் பெயரை வச்சி பெரியவங்ககிட்ட விசாரிச்சப்ப 120 வருஷத்துக்கு முன்னாடி நிறையப்பேர் வறுமையால கப்பல்ல போனதா சொன்னாங்க. அதப்பத்தின தகவல்களை தேடனப்ப கப்பல் முகவரி கிடைச்சது. அதன் மூலமா பயணம் செய்தவங்க பட்டியலை வாங்கனன். அதல எங்க மருத்துவாம்பாடி கிராமத்தலயிருந்து மட்டும் 42 பேர் தென்னாப்பிரிக்காவுக்கு கரும்புவெட்ட சுரங்கம் தோண்ட போனது தெரிந்தது. இந்தியாவுலயிருந்து 50 ஆயிரம் பேர் அந்த காலகட்டத்தல போயிருக்காங்க. அதல முத்துகிருஷ்ணன் தாத்தா பெயரை வச்சி ஊர்ல விசாரிச்சி அவுங்க உறவுக்காரங்க யாருங்கறத கண்டுபிடிச்சி சொன்னன். அவுங்க சந்தோஷமாகி சந்திக்க வந்துயிருக்காங்க இது ரொம்ப சந்தோஷமாயிருக்கு என்றார்.
தென்னாப்பிரிக்கா தமிழர் முத்துகிருஷ்ணன் நம்மிடம் எங்க தாத்தாவுக்கு தமிழக உறவுகளிடம்மிருந்து வந்த கடிதங்களை பொக்கிஷமா பாதுகாத்துயிருக்காரு. எங்கப்பா அத கடவுளா நினைச்சி வணங்கனாரு. எங்க தாத்தாவுக்கு வந்த கடிதத்தல இருந்த வடாற்காடு ஜில்லா, மருத்துவாம்பாடிங்கற கிராமத்து பெயரை வச்சி கூகுள்ள தேடி கண்டுபிடிச்சி 2011ல இங்க நான் மட்டும் வந்து விசாரிச்சன். யாருக்கும் அதப்பத்தி தெரியல திரும்பி போயிட்டன். பிறகு என்னை பேராசிரியர் பரணீதரன் தொடர்பு கொண்டாரு. என் உறவுக்காரங்க யாருங்கறத கண்டுபிடிச்சி சொன்னாரு. இப்ப அவுங்கள பாத்துட்டன் என் உணர்ச்சிய வார்த்தையால சொல்ல முடியல அந்தளவுக்கு ஆனந்தமாயிருக்கன் என்றார். கிராமத்து மக்களின் அன்பை கண்டு மாரியம்மா பேச முடியாமல் கண் கலங்கியபடியே இருந்தார். மீனாட்சியம்மாள் அறைகுறை தமிழில் நம்மிடம், சொந்தக்காரங்களை பாத்ததுக்கப்பறம் மனசு சந்தோஷமா, தெம்பாயிருக்கு என்றார்.
புகுந்த வீட்டு குல தெய்வம் வேட்டவலம் பூவாத்தம்மன் என உறவுக்காரர்கள் சொல்ல அங்கு சென்று தை பொங்கல் வைத்து கொண்டாடினார்கள் முத்துகிருஷ்ணன் தம்பதியினர். அதற்கடுத்து மாரியம்மாவின் முன்னோர்கள் பூர்வீகம் வேலூர் மாவட்டம் திமிறி பக்கத்தில் உள்ள தட்டாஞ்சாடி என்பதை கண்டுபிடித்து அங்கு சென்று உறவினர்களை பெரும் முயற்சிக்கு பின் தேடி நன்காம் தலைமுறை உறவினர்களோடு விருந்துண்டுள்ளனர். மீனாட்சியம்மாவின் பூர்வீகம் திருவண்ணாமலை அருகேயுள்ள வெறையூர் கிராமம். அவர்களின் உறவினர்களை கண்டறியமுடியவில்லை. அதேபோல் பச்சமுத்துவின் முதல் மனைவியின் பிள்ளைகள் கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் குடியேறியுள்ளனர். அவர்களது வாரிசுகளை  சந்திக்க ஷிமோகா சென்ற முத்துகிருஷ்ணன் குடும்பத்தார் தன் தாத்தாவின் முதல் மனைவியின் பேர பிள்ளைகள், அவர்களது பிள்ளைகளை கண்டு ஆனந்தமடைந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்களது பூர்வீகம் தமிழகம் என்பதை மட்டும் அறிந்து வைத்துள்ளனறாம். சொந்தவூர் உறவுக்காரர்கள் முன்னோர்கள் யார் என்பதை அறியாமல் உள்ளார்களாம். தென்னாப்பிரிக்கா தமிழ் சங்கத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அவர்களது ஊர் உறவினர்களை கண்டறிந்து தரும் முயற்சியை எடுக்க போவதாக கூறியுள்ளார்

மாதா வின் பாடல்கள்