18

siruppiddy

வியாழன், 19 டிசம்பர், 2013

ஸ்ரீ ஞானவைரவர் ஆலயப் பணிக்கு அள்ளிவழங்குவோம்


 சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய நிர்வாகத்தினருடன் 8.12.2013
சிறுப்பிட்டி இணைய நிர்வாகியன விமல் குமாரசாமி( சுவிசில் )இருந்து மற்றும் குவேந்திரன் வேலுப்பிள்ளை (யேர்மனியிலிருந்தும்) சென்றிருந்தபோது ஸ்ரீ ஞானவைரவர் ஆலய நிர்வாகத்தினருடன் நட்பு மூலமான சந்திப்பு (8.12.2013 ) ஞாயிறு மாலை 7.30து மணிக்கு நடைபெற்றது அதில்
 ஊர்மக்களுடன் இணைந்து கலந்துகொள்ள சென்றவர்கள் ஆகிய விமல் அவர்களும் புலேந்திரன் அவர்களும் இதில் சிறப்பாக அழைக்கப்பட்டனர் அங்கே சென்ற இவர்கள் ஆலய கட்டிடப்பணியை பார்வையிட்டபின்னர் மகிழ்வுற்றனர் ஊர் இளைஞர்கள் ஆலயப்பணிக்காய் உற்சாகமாய் தமை உருக்கி உழைத்த கதை கேட்டறிந்து ஆச்சரியத்தடன் மெய்சிலிர்த்து நின்றனர்
 
 அவர்களைப் பாராட்டிக்கொண்டனர் அதன்பின் தலைவர் ந.நிர்மலன் தலைமையில் நடைபெற்ற ஒன்று கூடலில் அவர் கூறியதாவது மேலும் தலைவர் தெரிவிக்கையில் கட்டிட வேலைப்பணிக்காய் தங்களுக்கு எதிர்பார்த்த நிதி வந்துகிடைக்காததால் மிகுதி உள்ள வேலைகளைத்திட்டமிட்டபடி முன்னெடுக்க
 முடியாமல் உள்ள நிலைகளையும் கூறிக் கவலையுற்றார் நிதியின் தேவையை ஆணித்தரமாய்
 
எடுத்துரைத்தார் அதர்க்கான ஆலோசனைச் சந்திப்பாகவும் இந்தச் சந்திப்பு எனவும் எடுத்துரைத்தார் அதற்க்கான ஆவனசெய்யவும் திரு விமலிடமும் திரு.குவேந்திரனிடமும் கேட்டுக்கொண்டார் இவர்களும் தாங்கள் தாங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள முன்னெடுப்புச் சம்மந்தமாகவும் அங்கே கருத்துக்களை முன்வைத்தனர் மற்றையோர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டது கூடியவரையில் எமது புலம்பெயர் உறவுகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் ஸ்ரீ ஞானவைரவர் வேலைப்பணிகள் நிறைவேறும் என்ற கருத்தையும் ஆலயத்தலைவர் முன்வைத்தார்
 ஆண்டவன் பணிக இனி அள்ளி வழங்குங்கள்
 அவன் பணி குறையுற்றால்
 அதில் வரும் பிணிச்சொல்
 சிவன் அவன் காவலனாய்
 சிந்தையில் வைரவர்
 அவன் படைப்பால் இவ்வுலகில் நாம்
 அவன் தருகிறான் அதில் ஆனந்தம் அடைகின்றோம்
 அவன் அள்ளித் தருகின்றான்
 இருப்பதில் கொடுத்துவாழ்
 இல்லறம் சிறக்கும்
 கொடுத்து இன்பம் காண் சன்னிதி செழிக்கும்
 ஸ்ரீ ஞானவைரவருக்காய் உங்கள் ஆதரவை நாடி நிற்கும் ஸ்ரீ ஞானவைரவர்
 ஆலய நிர்வாகம்

திருவெம்பா இறுதி நாள் நிகழ்வு நிழல்படங்கள்

 
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய திருவெம்பா இறுதி நாள் நிகழ்வுகள் 18.12.2013 சிறப்பாக நடைபெற்றுள்ளது பூசைகள் அனைத்தும் சிறப்புற நடந்து சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து பிரசாதங்கள் அன்னதானங்கள் என்று இனிதே நடந்தேறியுள்ளதை எம் ஊர் இணையம் உங்கள் பார்வைக்கு அதன் நிழல்படங்களை பதிவாக்கி உங்களையும் எம் ஊர் மண் நிகழ்வுகளுடன் இணைத்துக்கொள்கிறது
 மனதில் நினைத்து அவனின் நினைவை
 மகிழ்ந்து நின்று அவனைநாடு
 நினைத்த கருமம் வெற்றியாகும்
 நித்தம் மனது அமைதிகாணும்






 

செவ்வாய், 17 டிசம்பர், 2013

நிறைவுறும் நிலையில் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் கூரைப் பணிகள் !


சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் கட்டிட கூரைப் பணிகள் நிறைவுறும் நிலையில்ஆலய கூரைப் 
 வேலைகளின் நிழல் படங்கள் புலம் பெயர் சிறுப்பிட்டி வாழ்உறவுகளே
 ஆலைய நற்பணிக்கு உதவிய நல் உள்ளங்களே இந்த கட்டிட வேலைப்பணிக்காய் எமது ஊர் இளைஞர்களின் உடல் உழைப்பு பெரும் பகுதியாகி அவர்கள் வேர்வையோடு கலந்த உங்கள் பண உதவியும் இன்று இந்த நற்பணி தொடர்கிறது இதற்கான நிதி எமக்கு போதாமல் உள்ளது இங்கே உதவி செய்யாதிருப்போர் புலத்திலும் சரி நம் நிலத்திலும் சரி உங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு ஸ்ரீ ஞானவைரவ பக்தர்களை ஆலய நிர்வாகம் வேண்டி நிற்கிறது தெய்வத்தின் பணி செய்தால் தீராத வினையும் தீரும் அதனால் அன்பார்ந்த எம் ஊர் அடியவர்களே புலத்தில் வழம் செழிக்கவும் எம்மை வளர்தவள் ஸ்ரீ ஞானவைரவரை வேண்டி அனுப்பிய ஆலயமும் இது அதன் வளத்தில் பங்கேற்று நிலத்தில் இருப்போர் வணங்கிடவும் ஆலய வளர்ச்சிக்கும் புலத்தில் இருந்து நிலத்துக்கு வரும்போது சென்று வணங்கிடவும் எல்லோரும் ஒத்துழைத்து அதர்க்கான நிதியை கொடுக்க வேண்டியவரிடம் உங்கள் கரத்தால் கொடுத்து முழுப்பணி நிறைவுறச் செய்வோம் தெய்வ தரிசனம் சிறப்பாகும்
 குறுகிய நாட்களில் இதற்கான பணம் பெறுவது நிறுத்தி கிடைத்த கணக்கு விபரங்கள் அறியத்தரப்படும் அதற்குள் நீங்கள் ஆண்டவன் பணிக்கு உதவி
 உங்கள் இறையருளை பூர்த்தி செய்யுங்கள்
 செய்யும் பணியாவும் உன்னைச்சிறப்பாக்கும்
 அத்தோடு சிறுப்பிட்டி இணையம்
 எம் ஊர் இணைய நிர்வாகத்தினர்
 இத்த தகவலை உலகப்பந்திற்கு எடுத்து வருவதற்கும் நன்றிகள்
 ஆலய நிர்வாகத்தினர்


 
 
 

திங்கள், 16 டிசம்பர், 2013

சிறுப்பிட்டி பூமகள் வீதி புதுப்பொலிவுடன்

கடும்மழைகாரணத்தால்தடைப்பட்டுஇருந்த சிறுப்பிட்டி பூமகள் வீதி அடாது மழைபெய்தாலும் விடாது  புனரமைப்பு வேலைகள்நடைபெற்றது" புதுப்பொலிவுடன் சிறுப்பிட்டி பூமகள் வீதி புனரமைப்பு வேலைகள் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபா 194000/:(09.2013) சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியில் வேலைகள் பூமகள் சனசமூக நிலையம் ஊடக செல்கின்ற வீதிக்கு இவ் நிதி ஒதுக்கபட்டுள்ளது. நீங்கள் இவ் இணையமூலம் அறிந்ததே அந்த ஒப்பந்தத்தினை சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் முழுமையாக பூர்த்தியாக்கியதை இந்த நிழல் படங்கள் காண்பிக்கும் இதைத்திறம்பட நடாத்தி நிறைவேற்றிய பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினருக்கும் ஊர்மக்களுக்கும்
 செயல்பாட்டை உமதாக்கி
 செழித்திட எம் ஊர் பாதைக்காய் செம்மையே உழைத்தோரே
 சிறப்பது உங்கள் உழைப்பு
 சிறுப்பிட்டி மண்ணதற்கு
 புலப்படுகிறது நிழல்வடியில்-இதுபோல்
 விழிப்புற்று வேறுபணியும்
 சிறப்புற செய்து வாழ வாழ்த்துக்கள்
 புலம்பெயர் ஊர் உறவுகளும் ஊரின் இணையமான சிறுப்பிட்டி இணையமும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றனர் நன்றி



 

செவ்வாய், 10 டிசம்பர், 2013

சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியிப் புனரமைப்புப் புதிய நிழல்படங்கள்

 
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபா 194000/:(09.2013) சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியில் ஆரம்பிக்கபட்டு பூமகள் சனசமூக நிலையம் ஊடக செல்கின்ற வீதிக்கு இவ் நிதி ஒதுக்கபட்டுள்ளது. எனவே இவ் வேலைக்கான ஒப்பந்தத்தினை சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் செய்துள்ளமை குறிப்பிடதக்கது.இவ் வேலைகள் 30.10.2013 புதன்கிழமை துரிதமாக பூமகள் சனசமூக நிலைய நிர்வகத்தினரால் ஆரபித்து நடைபெறுவது நீங்கள் அறிந்ததே அதன் கட்டுமானப் பணியின் வளர்ச்சியை தாங்கிவரும் எம்ஊர் இணையமான இந்த இணையம் புதிய நிழல் படத்தை கட்டுமாபணியின் வளர்சியை இதில் இணைத்துள்ளது மேலும் வரும் தகவல்யாவும் உங்கள் பார்வைக்குக்கிட்டும் புலத்தில் இருந்தாலும் எம் ஊர் வளர்ச்சிகண்டு மகிழ்வோம் நன்றி




 
 

சனி, 7 டிசம்பர், 2013

நினைவஞ்சலி:அமரர் சின்னத்தம்பி நவரத்தினம்

 சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  சின்னத்தம்பி நவரத்தினம்  அவர்களின் 2ம் ஆண்டு நினைவுதினம்இன்று
                             அன்புள்ளம் கொண்டு நீ பண்பாய் பழகிடுவாய்
                                        அமைதியாய் என்றும் பாசமாய் பேசிடுவாய்.
                                                 வந்தாரை வரவேற்க்கும் வள்ளல் நீ

                                                    வற்றாத உன் வள்ளல் குணமண்ணா.
                                                     மங்கையின் அன்பு மணாளன் நீ
                                                     பிள்ளைகளின் ஆசை தந்தை நீ
                                                    உன் உறவுக்கு நல்ல சொந்தம் நீ
                                                  ஊரில் எல்லோருக்கும் என்றும் நண்பன் நீ.
                                                      நீ மறந்து ஒராண்டு போனதென்ன.
                                               உனை நினைத்து நெஞ்சம் துடிப்பது என்ன
                                                ஈராண்டென்ன ஆண்டுகள் ஆகட்டும் ஆயிரம்
                                                       மறவோம் நாம் உன் அன்பு முகம்.
                                 உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்…
                                          ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி…!!!
நவரத்தினமண்ணாவின் ஒராண்டு நினைவு நாளில் அவரது நினைவில் தவித்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை நவற்கிரி சிறுப்பிட்டி இணையம் தெரிவித்துகொள்கின்றது.
 

வியாழன், 5 டிசம்பர், 2013

திருமதி இலட்சுமிப்பிள்ளை பூதத்தம்பி அவர்கள்(01.12.2013) காலமானார்



சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகவும்கொண்ட திருமதி இலட்சுமிப்பிள்ளை பூதத்தம்பி அவர்கள்
(01.12.2013 ) ஞாயிறு அன்று காலமானார் அன்னார் காலம் சென்ற பூதத்தம்பியின் அன்புமனைவியும்
 வள்ளிப்பிள்ளை காலம்சென்ற பார்வதிப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும் மயில்வாகனம். விஐயலட்சுமி. கணேசலிங்கம் (சுவிஸ் ) காலம்சென்ற வேதநாயகி. வேல்முருகன் (சுவிஸ்)அருணாச்சலம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகுதாயும் சத்தியலோகநாயகி.நாகலிங்கம் (சுவிஸ்) தவமலர்(சுவிஸ்) காலம்சென்ற அருணகிரிநாதர்.றமணி(சுவிஸ்) தர்சா (லண்டன்) ஆகியோரின் அன்புமிக்க மாமியும் குமரேசன். காலம்சென்ற சரவணன். விக்கினேஸ்வரன். காசிசர்வேஸ்வரன்.பிரசன்னா(சுவிஸ்) அர்ச்சனா(சுவிஸ்) லண்டன் வசிப்பவர்களான சயனன்.பிரவீன்.சஞ்சய். யதுர்சன் ஆகியோரின்

பாசமிகுபேர்த்தியாரும் ஆவார் .அன்னாரின் இறுதிக்கிரியைகள் (01.12.2013) இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் தகவல் குடும்பத்தினர்கள்
 செல்லப்பிள்ளையார் கோயிலடி
 சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலி.

மாதா வின் பாடல்கள்