18

siruppiddy

புதன், 25 செப்டம்பர், 2013

இறப்புத்தகவல்திருமதி .பொ.பாக்கியம்


                                          திருமதி பாக்கியம் பொன்னம்பலம்

                               பிறந்த இடம்:   புத்தூர்  ,,, வாழ்ந்த இடம்:   சிறுப்பிட்டி  
                                                                                          
    புத்துரைப் பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மத்தியை வசிப்பிடமாகவும் தற்போது புன்னாலைக்கட்டுவனில் வசித்தவருமான பாக்கியம் பொன்னம்பலம் நேற்று (24.09.2013) செவ்வாய்க்கிழமை காலமானர்.

அன்னார் சிறுப்பிட்டி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பு பொன்னம்பலத்தின் அன்பு மனைவியும், இராஜேஸ்வரியின் (கௌரி) அன்புத் தாயும், தயானந்தனின் (கண்ணன்) அன்பு மாமியும், கிருத்திகா, தர்சிகன், பதுர்சிகன், கிருசிகன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.09.2013) புதன்கிழமை புன்னாலைக்கட்டுவன் தெற்கில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்று மு.ப. 10.00 மணியளவில் பூதவுடல் புன்னாலைக் கட்டுவன் விலங்கன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
   
தகவல் : கௌரி (மகள்)
தொடர்புகளுக்கு  
கௌரி (மகள்) - 3 ஆம் சந்தி, புன்னாலைக்கட்டுவன் தெற்கு, புன்னாலைக்கட்டுவன். , 0779502491 

அகாலமரணம் செல்வன் தே.சருஜன்


நோர்வே ஒலசுண்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சருஜன் தேவானந்தம் அவர்கள் 09-09-2013 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், தேவானந்தம் சிறீமதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,
மதுஜன் அவர்களின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற அழகானந்தம், மற்றும் ஜெயமலர், காலஞ்சென்ற இராஜரட்ணம், பாலநாகம்மா ஆகியோரின் அருமைப் பேரனும்,
இலங்கேஸ்வரன், பாலஈஸ்வரன், முரளீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

ஜெயானந்தம், சுதாநந்தன், சிவாநந்தன், கிருஷ்ணானந்தன், தமிழினி ஆகியோரின் அருமைப் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

முரளி — இலங்கை செல்லிடப்பேசி: +94718380493
இலங்கேஸ்வரன்(கண்ணன்) — நோர்வே செல்லிடப்பேசி: +4741316614

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

ஸ்ரீ ஞாவைரவர் ஆலயத்தின் தேவஸ்தான மண்டப புனரமைப்பு



ஆலைய உள் மண்டபத்தின் தீராந்தி வைக்கும் நிகழ்வு(06.09.13)
சிறுப்பிட்டி மேற்கு .. ஸ்ரீ ஞாவைரவர் ஆலயத்தின் தேவஸ்தான மண்டப புனரமைப்பு வேலைகள் தொடந்து நடைபெற்றவண்ணம் உள்ளதை வாசகர்களாகிய நீங்கள் அறிவீர்கள் அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நான்கு மணியளவில் ஆலைய உள் மண்டபத்தின் தீராந்தி வைக்கும் நிகழ்வு நடை பெறவுள்ளது .அத்தருணம் இறை அடியவர்கள் ஆலயத்துக்கு வருகை தந்து புனரமைப்பு மற்றும் விஷேட பூஜைகளிலும் கலந்து வைரவப்பெருமானின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு உருமையுடன் ஆலைய நிர்வாகத்தினர் அழைக்கின்றனர்.


 

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

செயற்பாட்டுடன் அறிமுகமாகும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம்

செயற்பாட்டுடன் அறிமுகமாகும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம்
சிறுப்பிட்டி ‌மனோன்மணி அம்மன் ஆலையத்தின்  இளையதம்பி குடும்பத்தினரால் நடைபெற்ற  சப்பறத்த்திருவிழாவில் அவர்கள் ஒத்துழைப்புடன் எமது ஊரின்  ஒன்றுபட்ட முன்நேற்றதை கருத்தில் கொண்டு   மூன்று வாசிகசாலைக்கு தலா  ஒவ்வொரு கணனிகள்  முதல் கட்டமாக வழங்கப்பட்டது.   இதை நீகள்கள் இந்த இணையப்பதிவில்  பார்க்கலாம்.  இந்தச்செயல் பாட்டுடன்

 சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் செயல்பாட்டுக்கு வருகின்றது  என்பதனை  எமது உறவுகளுக்குத்தெரிவித்துக்கொள்கிறோம்.அத்தோடு சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் அன்பான வேண்டுதலை நிறைவேற்றிய அம்மன் ஆலய நிர்வாகக் குழுவினருக்கும் திருவிழா உபயகாறர்களான இளையதம்பி குடும்பத்தினருக்கும் இங்கிருந்து சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தால் பெருள்கள் வழங்க நிதியுதவி வழங்கிய  உறவுகளுக்கும் அதை ஆலயவிழாவில் செயல் வடிவாக்கிய பொதுத்தொண்டர்கள் ஸ்ரீஅண்ணருக்கும் அவர்மகன் சுரேனுக்கும் திரு கோடிஸ் வரன் அவர்தம் துணைவியார் அருந்தவதேவிக்கும்
 எமத உளமார்ந்த நன்றிகள்.

இந்த சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம்   எமது ஊர்சார்  நலன் கருதி என்றும் ஊர் ஒற்றுமையை முன்னிறுத்தி  செயலாற்றும்  என்பதை  இங்கே உறுதிப்படுத்திக்கொள்கிறோம்

ஊர்வளம் காப்பது எம் கடமை  வீண்   வார்தைகள்  பேச்சோடு போக
செயலாற்ற வாருங்கள்  இணைந்தால் ஊர்வளம் நன்று ஆகும் வாருங்கள் இணைவோம் செயலாற்றுவோம் இது உங்களது.உலகத்தமிழர் ஒன்றியம்
ஒன்றிய விரிவாக்கம் ,தொடர்பாடல் அடுத்தகட்ட நடவடிக்கைகள் போன்ற தகவல்கள் விரைவில் அறியத்தரப்படும்.
சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம்,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!
!முக்கியகுறிப்‌பு!!!தயவுசெய்து மன்னிக்கவும்இன்நிகழ்வில்அம்மன்பூங்காவானத்தின்திருவிழாவின் காணொளியைஇனைத்தால்மிகவும்
சிறப்‌பாகஇருக்கும்அன்புடன்.நிலாவரை,கொம்.நன்றி. {காணொளி}


அங்கு வாசிக்கப்பட்ட தகவலின் எழுத்து வடிவம்
 சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் ஆனது எமது ஊரின் திசைகளைவைத்து பிரிவினை பார்காது தனித்துவமாக எமது ஊரின் நலனுக்காகவே செயல் ஆற்ற உள்ளது.

இதில் எமது ஊர்களை இணைக்கும் வண்ணம் இருக்க வேண்டியது முக்கியமானது மட்டுமல்ல இணைந்த செயல்பாடு நம் ஊர் வளர்ச்சிக்கும் சிறப்பைத்தரும் என்பதை நாங்கள் உணர்ந்து கொள்வோம் பழமை வாதிகளின் செயகளை மறந்து ஊரின் நல் நோக்குக்காய் இணைந்து பயணிப்போம்!
இக் கணனித்திட்டமானது எமது ஊர் சிறார்களின் படிப்பை முன்னோக்காகக் கொண்டு முன்வைத்த திட்டமாகும்.

முக்கிய குறிப்பாக இங்கே நாங்கள் எமது முன்னோர்கள் விட்ட தவறுகளை சுட்டிக்காட்டவில்லை ஆனால் உதாரணப் படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம் பல கல்விமான்கள் வாழ்ந்த எமது ஊர் ஆனால் அவர்களால் எமது ஊருக்கு என்ன நன்மை கிட்டியது? யாருக்காவது இலவசமாக பாடம் கற்பித்து எங்கள் ஊரவரை முன்னேற்றினார்களா?
இல்லை! அதனால் நாம் வாழும் போது எது ஊருக்காய் ஏதாவது செய்வோம் அதுவும் இணைந்து செய்வோம என்ற

 நோக்கில் உருவாக்கப் பட்ட திட்டமே இந்தக் கணனிகள் வழங்கும் திட்டம்
 இதற்கு நிதி வளங்கியவர்கள் ஏதோ பணத்துக்கு மேல் படுத்திருந்து தான் இதைச் செய்ய முன் வந்ததாயும் நினைக்காதீர்கள் இங்கும் கஸ்ரங்கள் உள்ளது அதர்கு மேல் எமது ஊரை வளப்படுத்தும் பணியும் எம்மிடம் உள்ளதால் தான் இந்தத்திட்டம்!

இந்தக் கணனிகளானது எமது ஊர் சிறார்கள் கற்பித்தல் விரிவடையும் நோக்கில் முன் எழுத்த நோக்காகும். இது ஆரம்பமே இன்று எங்கு பார்த்தாலும்
 கணனிமயம் இதற்கு எது ஊர் பிள்ளைகள் ஈடு கொடுப்பதானால்
 அவர்களுக்கு கிழமையில் ஒருநாளோ அல்லது இரண்டு நாளோ அது பற்றி ஆளுமை உள்ள இளைஞர்கள் முன் வந்து கற்பித்தல் வேண்டும் என்பது எமது நோக்கமாகும் அத்தோடு உங்களால் முடிந்தால் முதியவர்களுக்கும் கணனி ஆழுமையை கற்றுக்கொடுக்கலாம!

அத்தோடு இவற்றின் பணிகளில் ஒன்றாக எமது ஊர்களின் அதிகார பூர்வமான இணையமான சிறுப்பிட்டி நெற்றுக்கு ஊரில் உள்ள அனைத்துக் கோவில்விழாக்காள் பொது நிகழ்வுகள் நன்மைகள் தீமைள் எவையாக இருந்தாலும் தகவல் பரிமாற்றாம் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
எமது ஊருக்கு இருக்கும் இணைய பலத்தால் எமது ஊரின் புகழ் பரப்பி இணைந்து வாழ்வோம்

 முக்கிய குறிப்பு இந்தக் கணனிகள் ஆனது தனிப்பட்ட பாவனைக்கு அனுமதிக்கப் படமாட்டாது. இவற்றைக் கவனிக்கும் பொறுப்பு அண்ணர் ஸ்ரீகந்தராஜாடமும் கோடீஸ்வரன் அவர்களிடமும் உள்ளது.
ஒன்றிய மேலதிக தகவல்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும்
இப்படிக்கு சிறுப்பிட்டி உலகத் தமிழர் நிர்வாகம்

மாதா வின் பாடல்கள்